இதய நோய்க்கு சித்த மருத்துவத்தில் மருதம் பட்டைச் சூரணம்.
மருத மரத்தின் பட்டையிலிருந்து செய்யப்படுவதுதான் மருதம்பட்டைச் சூரணம். இது பெரிய மரவகுப்பைச் சார்ந்தது. தமிழில் இதற்கு இந்திரன் பார், அர்ச்சுனம், வெள்ளை மருதம் என்ற வேறு. பெயர்களுண்டு. ஆங்கிலத்தில் Arjun Myrobolan என்றும் தாவரவியலில் Terminalia Arjuna என்றும் அழைப்பர்.
(Click this Image)
'மருதநிலம், மருதமலை, மருதநாடு எனப் படித்திருக்கிறேன். எனவே, மருதமரம் எனப் பெயர் வர சிறப்புக் காரணங்கள் உள்ளது.
நமது நாட்டில் நிலம் ஐவகையாக குறிஞ்சி, முல்லை மருதம், நெய்தல், பாலை என பிரிக்கப்பட்டிருக்கிறது. இதில் மருத நிலத்தில் மட்டும் இம்மர வகை அதிகமாக விளைந்ததால் இம்மரம் மருதமரம் எனப் பெயர் பெற்றது. அக்காலத்தில் மதுரை மாநகரை மருதை என சொல்வர். மருதையில் மருத மரங்கள் நிறையவே இருந்ததால் மருதை என வழங்கப்பட்டு பிற்காலத்தில் சொல் வழக்கில் மதுரை எனத் திரிந்திருக்கலாம் என சொல்லும் ஆராய்ச்சியாளர்களும் உளர். இன்றும் கூட நாட்டு வழக்கில் மதுரையை மருதை என்றே உச்சரிக்கக் காணலாம்.
இவைதவிர சில சிவாலயங்களில் மருதமரம் தலவிருட்சமாகப் போற்றி வணங்கப்படுகிறது' மருதமரம் தல விருட்சமாக ஆந்திராவில் உள்ள மல்லிகார்ஜுனம் என்ற ஊரில் உள்ள சிவாலயம், தமிழகத்தில் திருவிடைமருதூர் சிவாலயத்தில் மகாலிங்கேஸ்வரர் 'மத்தியார்ஜினம்'- என்றும் ராமேஸ்வரம் அருகில் மருதவாணர் ஆலயம் 'புடார்ஜீனம்' என்றும் அழைக்கப்படுகிறது. அர்ஜீனம் என்பது மருத மரத்தைக் குறிக்கும்.
'மகாபாரதத்தில் வரும் அர்ஜூனன் இம்மரத்திற்குப் பெயர் அர்ஜூனம் ஏதேனும் சம்பந்தம் உண்டு, மருதமரம் வடமொழியில் அர்ச்சுனம்' என்றழைக்கப்படுகிறது.
மகாபாரதத்தில் அர்ச்சுனன் துவக்கத்தில் விஜயன் பார்த்திபன் என்ற பெயர்களால் தான் அழைக்கப்படுகிறான். பின்னாளில் விஜயன் "பாசுபதாஸ்திரம் வேண்டி சிவபெருமானை நோக்கி இம்மரத்தடியில் கடுந்தவம் மேற்கொண்டான். அவனின் அருந்தவத்தைக் கலைக்க பல்வேறு சூழ்நிலைகள்-முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதையெல்லாம் தன் மனவலிமை தவவலிமை- இதய வலிமையோடு வென்று சிவனிடமிருந்து பாசுபதாஸ்திரத்தைப் பெறுகிறான் விஜயன். மருதமரத்தின் கீழ் தவமிருந்து இதயவலிமை பெற்று தவத்தில் வெற்றியடைந்ததால் அன்று முதல் அம்மரத்தின் நினைவாகவே, விஜயன் 'அர்ச்சுனன்'' என்றழைக்கப்படுனகிறான்.
மனித உறுப்புகளிடையே தலையாய உறுப்புகளாக விளங்கக் கூடி உறுப்புகளான மூளை, இதயம், நுரையீரல், கல்லீரல், மண்ணீரல், பிருக்கம் (Kidney) போன்றவற்றைத் தூண்டி நோய் நீக்கி வலிவூட்டக் கூடியது. இம்மருதம்பட்டை.
(Click this Image)மருதம்பட்டை, வில்வபட்டை வகைக்கு 20 கிராம், சாதிக்காய், சாதிபத்திரி, லவங்கப்பட்டை, வகைக்கு 15 கிராம், 1 லிட்டர் தண்ணீரில் போட்டு 250 மி.லி. யாக சுண்டக்காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும். இவ்விதம் காலை, மாலை இருவேளை தொடர்ந்து சாப்பிட்டுவர இதய நோய்கள் குணமாகும். மற்ற சூழ்நிலைகளில் இது பெரும்பாடு, பேதி, சீதபேதி இவற்றையும் குணமாக்கும். இவைதவிர பூச்சிக்கடியினால் (காணாக்கடி- Urticaria) வரும் தோல் அரிப்பும் - தடிப்பும் குணமாகும்.
மருதம்பட்டைச் சூரணம் சம அளவு சர்க்கரையுடன் கலந்து வைத்துக்கொண்டு வேளைக்கு 1 அல்லது 2 கிராம் வீதம் காய்ச்சிய பசும் பாலுடன் சாப்பிட இதய நோய்கள் குணமாகும்.
அர்ச்சுனனுக்கு பார்த்தன் என்ற ஒரு பெயருண்டு. ஆயுர்வேதத்தில் மருதம்பட்டையைக் கொண்டு இதய நோய்க்காகத் தயாரிக்கப்படும் அர்ஜூனாரிஷ்டம் - 'பார்த்தயாதியரிஷ்டம்' என்ற பெயரிலும் வழங்கப்படுகிறது. இதய நோய்க்கு மற்றொரு சிறந்த மருந்தான பிரபாகரவடியும் மருதம்பட்டையைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.
அடுத்த பதிவில் வேறொரு மூலிகை பற்றி பார்ப்போம்.
மேலும் மூலிகைகள் மற்றும் சித்த மருந்துகளை பற்றிய உங்களது சந்தேகங்களுக்கும், ஆலோசனைக்கும் தொடர்பு கொள்ளவும்…








No comments:
Post a Comment