About Me

My photo
Vellore, Tamil Nadu , India

Friday, August 26, 2022

குரு ராயரின் கடைசி உரை மற்றும் பிருந்தாவன பிரவேசம்

குரு ராயரின் கடைசி உரை மற்றும் பிருந்தாவன பிரவேசம்
1671 ஆம் ஆண்டு ராகவேந்திர சுவாமிகள் பிருந்தாவனப் பிரவேசத்திற்கு முன் தன் பக்தர்களுக்காக மனம் நெகிழவைக்கும் ஒரு உரையை தந்தார்
சரியான வாழ்க்கை நடத்தையின்றி சரியான சிந்தனை வராது.
நல்ல மற்றும் தகுதிக்குரிய மக்களுக்கு செய்யப்படும் உதவி/தர்மம் கடவுளின் பூஜைக்கு நிகராகும்

சாஸ்த்திரத்தை பின்பற்றாமல் தங்களை கடவுள் என்று கூறிக்கொண்டு அதிசயங்களை செய்பவர்களிடமிருந்து விலகி இருங்கள். 

நானும் ஸ்ரீமத் ஆசாரியாரும் நிறைய அதிசயங்களை நிகழ்த்தியிருக்கிறோம். அவையெல்லாம் யோக சித்தியினாலும் கடவுளின் அருளினாலும் எங்களால் செய்ய முடிந்தது. 
அவற்றில் எந்த பொய்யோ பித்தலாட்டமோ இல்லை. அவ்வதிசயங்கள் கடவுளின் மகிமையையும் அவர் அருளால் ஒருவர் எப்பேற்பட்ட சக்திகளை அடைய முடியும் என்று பறை சாற்றவுமே செய்யப்பட்டது. 

சரியான ஞானத்தை மிஞ்சிய எந்த அதிசயமோ அற்புதங்களோ கிடையாது சரியான ஞானம் இல்லாமல் செய்யப்படும் அற்புதங்கள் வெறும் சூனிய வித்தையே ஆகும். அவ்வித்தைகளை செய்பவருக்கோ அதை நம்புகிறவருக்கோ எந்த ஒரு நன்மையும் நேராது.
கடவுளின் மேல் நல்ல பக்தி இருத்தல் வேண்டும். இப்பக்தி குருட்டு நம்பிக்கையாக இருக்கக்கூடாது'. கடவுளின் மேலான்மையை முழு மனதோடு ஏற்றுக்கொள்ளுதல் பக்தி ஆகும். 

குருட்டு நம்பிக்கை உண்மையான பக்தி ஆகாது. அது வெறும் முட்டாள்தனமே ஆகும். நமக்கு கடவுள் மேல் மற்றுமின்றி மற்ற இதர தேவதைகளிடமும் அவர்களின் தகுதிக்கேற்ப பக்தி இருத்தல் வேண்டும்.
இவ்வாறு உரையாற்றிய பிறகு ராகவேந்திரர் பிரணவ மந்திரத்தை ஜபித்துக்கொண்டு ஆழ்ந்த தியானத்தில் இறங்கினார்.

ஒரு தருவாயில் அவர் கையில் இருந்த ஜபமாலை நின்றது. அந்த அறிகுறியைப் புரிந்துகொண்ட அவர் சீடர்கள் அவரை சுற்றி பிருந்தாவன சுவர் எழுப்பத் தொடங்கினார்கள்.
நன்றி...
விக்கிப்பீடியா

Wednesday, August 3, 2022

சித்தர்களின் நாடி விஞ்ஞானம் (கர்பபையிலிருந்து கடைசி வரை)

தமிழர் பாரம்பரிய மருத்துவமான சித்த மருத்துவமானது எமது வாழ்வியலில் பின்னிப் பிணைந்த வரலாற்றைக் கொண்ட ஒரு தொன்மை மிக்க மருத்துவமாக இருந்த போதும் நவீன மயமாதல் எனும் கால ஓட்டத்தில் அகப்பட்டு பாரியதொரு இடைவெளியைக் கொண்ட மருத்துவமாக இன்று காணப்படுகின்றது.  சுகாதார சேவை வழங்கலில் ஒரு குறிப்பிடத்தக்க பங்கினை வகிக்கும் மருத்துவ முறைகளில் ஒன்றாக இருந்த போதிலும் சித்தர்களின் ஞானதிருஷ்டி மூலம் பெறப்பட்ட பல, ஆழமான, பயன் உள்ள, சிறப்பம்சங்களை மீளவும், வெளிக்கொண்டு வருவதில் சேவை வழங்குநராகிய எனக்கூறினால் நாம் அது பாரிய ஒரு சவாலை எதிர்நோக்கியுள்ளோம் என கூறினால் அது மிகையாகாது.

 முற்றிலும் மேலைத்தேய நவீன வாழ்க்கை முறைக்கும் விஞ்ஞான அடிப்படையிலும் மட்டுப்படுத்தப்பட்ட எமது அறிவானது. இவற்றிற்கு எல்லாம் அப்பாற்பட்ட மேன்மையான சூட்சுமமான அறிவுசார்ந்த விடயங்களான சித்த மருத்துவ தத்துவங்களை வெளிக்கொணர நாம் பகிரத பிரயோர்த்தனம் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

https://youtu.be/LgP7smIwogg?si=DbOW5nXUw9LEBQPR

இந்த வகையில் நாடிப்பரீட்சை/ நாடிவிஞ்ஞானம்/ நாடிதர்ப்பணம் எனும் நாடி தத்துவத்தினை சித்த மருத்துவத்தின் அடிப்படை எனலாம். ஒரு கர்ப்பப்பைக்குள் ஆரம்பிக்கும் வாழ்க்கை முதல் வாழ்வின் மனிதனின் கர்ப்பப்பைக்குள் இறுதியான மரணம் வரையிலான அவன் சார்ந்த சகல விடயங்களையும் அறிந்து கொள்ளக்கூய ஆழமான தத்துவங்களை இந்நாடி விஞ்ஞானம் கொண்டிருக்கின்றது என்பதை உண்மையான சித்த மருத்துவத்தை கையாளும் அனைத்து மருத்துவர்களாலும் உணரப்பட்டுள்ளது. நவீன மருத்துவத்தின் கீழ் உள்ளடங்கும் உடலின் உள்ளார்ந்த மாற்றங்களை அவதானிக்கக்கூடிய MRI Scan,CT Scan போன்ற தொழில்நுட்பம் சார்ந்த பரிசோதனைகளால் கூட கண்டுபிடிக்க முடியாத உடலியக்கம் சார்ந்த, கடந்த கால, நிகழ்கால மாற்றங்களுக்கு அப்பால் எதிர்காலத்தாக்கங்களை கூட எதிர்வு கூறக்கூடிய ஆழமான அறிவே நாடி விஞ்ஞானம் எனப்படும்.


எனினும் மேலைத்தேய விஞ்ஞானம் கூறும் Puls எனும் விடயத்திற்கு அப்பால் செல்லாமல் நம் நாடியை மட்டுப்படுத்தியதன் விளைவே இன்று நாடி விஞ்ஞானத்தின் சரியான அறிவையும் பயன்பாட்டையும் தவறவிட்டமைக்கு ஒரு பிரதான காரணமாக கூறலாம்.

எனவே சித்த மருத்துவத்தின் உண்மையான எதிர்காலமும். பயன்பாடும் சரியான நாடி அறிதல் மூலமே மீளவும் கட்டியெழுப்ப முடியும் என்னும் எண்ணக்கருவுடன் முயன்றால் மட்டுமே சித்த வைத்தியம் நம் மக்களை,  தலைமுறைகளை போய் சேரும்.

Visit Online Store : www.mayuraayur.com

பேரன்புடன்….
சுதாகர் G வைத்யா
மயுரா ஆயுர்வேதாஸ்ரம்
நாடி பரிசோதனை மற்றும் மருத்துவ ஜோதிட ஆராய்ச்சியாளர்.

பாரம்பரிய மருத்துவத்தில் எங்களின் குறிகோள் உடல் நலம் மற்றும் சுகாதாரத்தை காப்பதே… இங்கு ஆயுர்வேதம், சித்தா, மற்றும் பிற மருத்துவ அறிவியல்களின் ஊடாக நாங்கள் தனிப்பட்ட ஆலோசனைகள், மற்றும் நோய் தீர்க்கும் சிகிச்சைகள், சுகாதாரம் மற்றும் அழகு தொடர்பான சேவைகளை வழங்குகிறோம்.

மேலும் மூலிகைகள் மற்றும் சித்தா, ஆயுர்வேத மருத்துவம் பற்றிய உங்களது சந்தேகங்களுக்கும், ஆலோசனைக்கும் தொடர்பு கொள்ளவும்…

Mayura Vedic Pharmacy
(Siddha & Ayurvedha)
#40, Old Busstand Commercial Complex,
Near Thiruvalluvar Statue,
Anna Salai. Vellore – 632 004
Call :90430 25336

Mayura Vaidy Salai
(Holistic Healing Solutions)
Near Vani Vidyalaya School 
V.G.Nagar, Katpadi – 632 006
Call : 90421 35336

#மனம் #ஆயுர்வேதம் #சித்தா #மயூரா #வேலூர்


Tuesday, August 2, 2022

பெண்கள் எலும்பு ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியம்...

பெண்கள் எலும்பு ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியம்...

பெண்களுக்கு 30 வயதுக்கு பின்னர் எலும்பில் இருக்கும் கால்சியம் குறைய தொடங்குவதினால், அவர்கள் எலும்புகள் சார்ந்த பிரச்சனையை எதிர்நோக்குகின்றனர்.

கடந்த சில வருடங்களாக எலும்பு சார்ந்த பிரச்சனைகளால் அவதிப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எலும்பு பிரச்சனையை தொடக்கத்திலேயே கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். உடல் அமைப்பை கட்டமைப்பது, உறுப்புகளை பாதுகாப்பது, தசையினை வலுப்படுத்துதல், கால்சியத்தை சேமித்தல் போன்றவை எலும்புகளின் நலனுக்கும், உடல் நலனுக்கும் முக்கியமானது.

குழந்தை பருவத்தில் இருந்து வலுவான மற்றும் ஆரோக்கியமான எலும்புகளை உருவாக்குவது அவசியமாகிறது. பெண்களுக்கு 30 வயதுக்கு பின்னர் எலும்பில் இருக்கும் கால்சியம் குறைய தொடங்குவதினால், அவர்கள் எலும்புகள் சார்ந்த பிரச்சனையை எதிர்நோக்குகின்றனர்.  பெண்கள் எலும்பு பிரச்சனையால் சமீபத்தில் அதிகளவில் பாதிக்கவும் தொடங்கியுள்ளனர்.

ஈஸ்டிரோஜனின் செயல்பாடால் பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி நடைபெறும் நிலையில், இதே ஹார்மோன் பெண்களின் எலும்பு வளர்ச்சி மற்றும் வலிமைக்கு முக்கியமானதாக இருந்து வருகிறது. இதே சமயத்தில், ஈஸ்டிரோஜனின் அளவு குறைவதால் மெனோபாஸ் நிலை எட்டத்தொடங்குகின்றனர். மேற்கத்திய பெண்களை காட்டிலும், பெண்கள் முன்னதாகவே மெனோபாஸ் நிலையை அடைகின்றனர். இதனால் எலும்பின் வலிமை விரைந்து குறைகிறது.

எலும்புகளுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்கும் உணவுகளை பெண்கள் குறைவாக சாப்பிட்டு வருகின்றனர். கால்சியம் சத்துக்கள் நிறைந்த பால், தயிர் போன்ற உணவுகளை பெண்கள் அதிகளவு எடுத்துக்கொள்ள வேண்டும். அதனைப்போல இறைச்சி, மீன், முட்டை போன்றவற்றையும் சாப்பிட வேண்டும். உணவுப்பழக்க வழக்கத்துடன் உடற்பயிற்சி, வைட்டமின் சத்துக்கள் கொண்ட உணவுகளை சாப்பிடுதல் வேண்டும்...

இன்னும் அறிவோம்...

இலவச சித்தா, ஆயுர்வேத மருத்துவ ஆலோசனை மற்றும் சந்தேகங்களுக்கு அழைக்கவும்...

பேரன்புடன்….
சுதாகர் G வைத்யா
மயுரா ஆயுர்வேதாஸ்ரம்
நாடி பரிசோதனை மற்றும் மருத்துவ ஜோதிட ஆராய்ச்சியாளர்.
பாரம்பரிய மருத்துவத்தில் எங்களின் குறிகோள் உடல் நலம் மற்றும் சுகாதாரத்தை காப்பதே… இங்கு ஆயுர்வேதம், சித்தா, மற்றும் பிற மருத்துவ ஜோதிட அறிவியலின் ஊடாக நாங்கள் தனிப்பட்ட ஆலோசனைகள், மற்றும் நோய் தீர்க்கும் சிகிச்சைகள், சுகாதாரம் மற்றும் அழகு தொடர்பான சேவைகளை வழங்குகிறோம்.

மேலும் மூலிகைகள் மற்றும் சித்தா, ஆயுர்வேத மருத்துவம் பற்றிய உங்களது சந்தேகங்களுக்கும், ஆலோசனைக்கும் தொடர்பு கொள்ளவும்…

Mayura Vedic Pharmacy
(Siddha & Ayurvedha)
#40, Old Busstand Commercial Complex,
Near Thiruvalluvar Statue,
Anna Salai. Vellore – 632 004
Call :90430 25336

Mayura Vaidya Salai
( Holistic Healing Solutions for General Wellness)
Near Vani Vidyalaya School 
V.G.Rao Nagar, Katpadi – 632 006
Call : 90421 35336

#மனம் #ஆயுர்வேதம் #சித்தா #மயூரா #வேலூர்

“மூட்டு அகற்றுவது தீர்வு அல்ல; அதன் இயற்கை இயக்கத்தை மீட்டெடுப்பதே மருத்துவம்.”

மூட்டு வலிக்கு அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வா? உண்மை என்ன சொல்கிறது? ✨ மூட்டு வலி இன்று பலருக்கும் வாழ்க்கைத் தரத்தை குறைக்கும் ஒ...