About Me

My photo
Vellore, Tamil Nadu , India

Thursday, June 27, 2024

சிறுநீரகம் ஜாக்கிரதை...

ஹரி ஓம்...

தற்கால மனிதனின் அவசரம், நேரமின்மை என்ற எண்ணம், உண்ணும் உணவில் கவனமின்மை, எப்படியாவது சம்பாதிக்க வேண்டும் என்கிற உணவு தயாரிப்பாளரின் பேராசை போன்றவை, மனிதனுக்குள் பலவித நோய்களை வளர்க்கிறது.
பெரியவர்கள், முன்னோர்கள், சித்தர்கள் சொன்ன வாழ்க்கை முறையை உதறி தள்ளிவிட்டு, சற்றும் நன்னடத்தை இல்லா வாழ்க்கை வாழும்போது உடல் உள்உறுப்புகள் செயல்படுவது பாதிக்கப்பட்டு பலவித நோய்களை உருவாக்குகிறது. ரத்தத்தில் "கிரியாடினின்" என்கிற ஒரு பொருள் அதிகமாக இருந்தால், சிறுநீரகம் பாதிக்கப்படுகிறது என்று அர்த்தம்.

"கிரியாடினின்" என்பது குடல் அழற்சியினால் உற்பத்தி செய்யப்படுகிற ஒரு வகை திரவம். இதன் அளவு ஒருவரின் ரத்தத்தில் 0.5 - 1.20 mg அளவு இருந்தால் சிறுநீரகம் சரியாக செயல் படுகிறது என்று அர்த்தம். 1.20 க்கு மேல் கிரியாடினின் ரத்தத்தில் இருந்தால், சிறுநீரகம் செயல்பாடு பாதிக்கப்பட்டிருக்கிறது என மருத்துவர்கள் கூறுவார்கள். இதன் அளவு 3 அல்லது 4 என்கிற அளவை தாண்டும் பொழுது "டயாலிசிஸ்" (ரத்த சுத்தி) செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். 
அதிக ப்ரோடீன், செயற்கை எண்ணெய்கள், உணவில் சேர்க்க கூடாத ரசாயனங்கள், கண்டதை எல்லாம், கண்டவனிடம் வாங்கி உண்கிற பழக்கம் போன்றவை, இக்காலத்தில் 20 வயது வந்தவர்களுக்கே சிறுநீரகம் செயலிழக்க காரணமாகிறது. உணவில் கட்டுப்பாடு இருந்தால், இதன் அளவை ஓரளவுக்கு குறைத்து விடலாம்.

இயற்கை மருத்துவத்தில்  (சித்த மருத்துவம்) இந்த குறையை நிவர்த்தி செய்ய என்ன கூறப்பட்டுள்ளது என்று தேடிய பொழுது, நம் வீட்டில் சமையல் அறையில் இருக்கும் "பார்லி" விதைகள் "கிரியாடினின்" அளவை குறைக்க உதவும் என்று தெரிந்தது.
மூன்று ஸ்பூன் பார்லியை, ஒரு டம்ளர் நீரில் இரவு படுக்க போகும்போது எடுத்து வைத்து, அதிகாலை 5 மணிக்கு எழுந்து வெறும் வயிற்றில் அதை வடிகட்டி, நீரை மட்டும் பருகிவர, ஒரு வாரத்தில் "கிரியாடினின்" அளவு நன்றாக குறையும். ஒரு மாதத்தில் "கிரியாடினின்" கட்டுப்பாட்டுக்குள் வந்து உடல் இயல்பு நிலைக்கு வந்துவிடும். நன்றாக ஊறிய பார்லியை சாதம் வடிக்கும் பொழுது அதனுடன் கலந்து உண்ணலாம்.

"கிரியாடினின்" அளவு 1.70 இருந்த ஒருவருக்கு இதை கொடுக்க, மூன்று வாரங்களில் "கிரியாடினின்" அளவு 1.28 ஆக குறைந்தது. இந்த முறையை தொடரும் பொழுது உணவில் "காரம்" நிறைய அளவுக்கு குறைத்துக் கொள்ளவும்.

பின்விளைவு:- இதை எடுத்துக் கொள்ள தொடங்கினால், மிகுந்த பசி வரும். ரத்தத்தில் "கிரியாடினின்" அளவை சுத்தம் பண்ணி, குடலை அழற்சியில் நின்று காப்பாற்றி, சிறுநீரகத்தை இயல்பாக செயல்பட வைக்கும்.

இயற்கையாக நலம் பெறுக!

இன்னும் அறிவோம்...!

இலவச சித்தா, ஆயுர்வேத மருத்துவ ஆலோசனை மற்றும் சந்தேகங்களுக்கு அழைக்கவும்...

பேரன்புடன்….
சுதாகர் G வைத்யா
நாடி பரிசோதனை மற்றும் மருத்துவ ஜோதிட ஆராய்ச்சியாளர்.

பாரம்பரிய மருத்துவத்தில் எங்களின் குறிகோள் உடல் நலம் மற்றும் சுகாதாரத்தை காப்பதே… இங்கு ஆயுர்வேதம், சித்தா, மற்றும் பிற மருத்துவ அறிவியல்களின் ஊடாக நாங்கள் தனிப்பட்ட ஆலோசனைகள், மற்றும் நோய் தீர்க்கும் சிகிச்சைகள், சுகாதாரம் மற்றும் அழகு தொடர்பான சேவைகளை வழங்குகிறோம்.

மேலும் மூலிகைகள் மற்றும் சித்தா, ஆயுர்வேத மருத்துவம் பற்றிய உங்களது சந்தேகங்களுக்கும், ஆலோசனைக்கும் தொடர்பு கொள்ளவும்…
Mayura Vedic Pharmacy
#40, Old Busstand Commercial Complex,
Vellore - 632 004.  Call : 90430 25336

Mayura Vaidya Salai
(Holistic Healing Solutions)
Near Vani Vidyalaya School, 
Katpadi – 632 006.  Call : 90421 35336


#மனம் #ஆயுர்வேதம் #சித்தா #மயூரா #வேலூர்

Tuesday, June 25, 2024

நாடி... அதை நாடி...

ஜோதிடம், நாடி ஜோதிடம் பற்றிய பதிவுகளில் வரும் கமெண்டுகளை ஆராய்ந்தால் பொதுவாக இரண்டே இரண்டு  வகை தான்.
ஜோதிடம், நாடி ஜோதிடத்தில் சொன்னது எல்லாம் என் வாழ்க்கையில் நடந்தது. என் வாழ்க்கையையே திசை திருப்பியது. எனக்கு முழு நம்பிக்கை உண்டு. ஆனால் சரியான ஜோதிடர்களைஅணுக வேண்டும்.

இதெல்லாம் ஹம்பக். காசு பறிக்கும் வித்தை. எதுவுமே எனக்கு நடக்கவில்லை. மனம் பலகீனமானவர்கள் பிரச்னையை கையாள தெரியாமல் போகும் புகலிடம் என்ற கடுமையான வாதம்.

அவரவர் அனுபவத்தால் வந்த 
சிந்தனை துளிகள் இவைகள்
என எடுத்து கொள்ளலாம்.

எதற்கு ஜோதிடம், நாடி ஜோதிடத்தை 
நாடி போகிறோம்?
1) என்ன முயன்றும் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கவில்லை. ஏதாவது வழி கிடைக்காதா ? என்று நாடுவோர்.

2) என்னதான் சொல்கிறார்கள் பார்ப்போமே என்ற ஆர்வம் மிகுந்தவர்கள்.

3) பயம், மரணபயம் உடையோர்., பிரச்னையின் அழுத்தத்தால் சுயமாக சிந்திக்க முடியாமல், மற்றவர் உதவியை நாடுவோர்.
இதற்கு மேல் இருப்பதாக தெரியவில்லை.

எல்லோரிடமும் பொதுவாக  இருப்பது, என்னால் முடியவில்லை, உதவி தேவை.

ஜோதிடம், நாடி ஜோதிடத்தில் கிரக பலன்கள், இதுவரை  நடந்த நிகழ்வுகளை கூறி, இனி இப்படி பரிகாரம், ஸ்தல யாத்திரை சென்றால் உங்கள் பிரச்னைகள் தீர வாய்ப்புண்டு என்று நலிந்த மனதிற்கு ஆறுதல் கூறி, நம்பிக்கை ஊட்டுகிறார்கள்.

இந்த மன நம்பிக்கையை பெற அங்கே ஏன் போய், காசை செலவழித்து, தேவையற்ற விஷயங்களையும் உள்வாங்குவானேன்?
சுயமாக சிந்தித்து, நம் நலம் நாடுவோரிடம் கலந்து ஆலோசித்து ஒரு தீர்வு காணலாமே. பொதுவாக ஜோதிடம், நாடி ஜோதிடம் எல்லாம் பணம் பறிக்கும் கும்பலின் ஆளுமை என்று ஒரு சாரார் வாதம்.

அவரவர் செய்த வினைகளை அவரவர் அனுபவித்துத்தான் ஆக வேண்டும். செயல் விளைவு தத்துவம். பரிகாரம் எல்லாம் வெறும் மனதிருப்திக்கு மட்டுமே.நல்ல எண்ணங்களால் நற்செயல்களால், தீய வினைபதிவுகள் கழிந்தால் மட்டுமே நன்மை மலர ஆரம்பிக்கும் என்பது தியானம் போன்றவற்றில் ஈடுபாடு கொண்டவர்களின் வாதம்.
நுட்பமான சக்தி ஒன்று அனைத்தையும் சமநிலையில் வைத்திருக்கிறது.
அதனை உணருங்கள்.....
அதனை கிரகியுங்கள்.....
அதனிடம் திறந்திருங்கள்.....

ஆனால் ஒரு விஷயம் உறுதி:

விஷயங்கள் அனைத்தும் கவனிக்கப்படுகின்றன.

பிறகு எதற்கு இந்த பொறுமையின்மை,
எதற்காக இந்த திட்டமிடுதல்?
பிறகு எதற்காக இந்த பரபரப்பு?
பிறகு எதற்காக இந்த வருத்தம்?

பொறுமையாக இருங்கள்.....

காத்திருங்கள்....
நம்புங்கள்......
உணருங்கள்....

பார்வைக்கு புலப்படாத கரங்கள் 
எப்போதும் உங்களை சுற்றிலும் வியாபித்திருக்கின்றன....
அவரவர் சிந்தனை அவரவர்க்கு.

தீர ஆராய்ந்து சரியான முடிவை 
எடுப்பது அவரவர் தரத்திற்கேற்ப,
அவரவர் எண்ணங்களே.

இன்னும் அறிவோம்...

இலவச சித்தா, ஆயுர்வேத மருத்துவ ஆலோசனை மற்றும் சந்தேகங்களுக்கு அழைக்கவும்...

பேரன்புடன்….
சுதாகர் G வைத்யா
நாடி பரிசோதனை மற்றும் மருத்துவ ஜோதிட ஆராய்ச்சியாளர்.

பாரம்பரிய மருத்துவத்தில் எங்களின் குறிகோள் உடல் நலம் மற்றும் சுகாதாரத்தை காப்பதே… இங்கு ஆயுர்வேதம், சித்தா, மற்றும் பிற மருத்துவ ஜோதிட அறிவியல்களின் ஊடாக நாங்கள் தனிப்பட்ட ஆலோசனைகள், மற்றும் நோய் தீர்க்கும் சிகிச்சைகள், சுகாதாரம் மற்றும் அழகு தொடர்பான சேவைகளை வழங்குகிறோம்.

மேலும் மூலிகைகள் மற்றும் சித்தா, ஆயுர்வேத மருத்துவம் பற்றிய உங்களது சந்தேகங்களுக்கும், ஆலோசனைக்கும் தொடர்பு கொள்ளவும்…

Mayura Vedic Pharmacy
#40, Old Busstand Commercial Complex,
Vellore - 632 004.  Call : 90430 25336

Mayura Vaidya Salai
(Holistic Healing Solutions)
Near Vani Vidyalaya School, 
Katpadi – 632 006.  Call : 90421 35336


#அக்கறை #உடலும் #உயிரும் #மனம் #மயூரா #ஆயுர்வேதம் #சித்தா #நாடிபரிசோதனை #மருத்துவஜோதிடம் #வேலூர்

ஜோதிடம் உண்மையா?


மனிதனின் எதிர்கால வாழ்வினை அறிய, அருள் வாக்கோ, ஜோதிடமோ பார்ப்பதில் தவறில்லை. 


ஆயினும், மனிதர்களின் முன் ஜென்ம பாவத்தின் அடிப்படையில் அமைவது 
தான், அவன் வாழ்வு. 

எம்மை நாடுவதாலோ, எமது வகை அறிவதாலோ மட்டும் உடன் உயர்ந்த 
பலன் கிட்டிவிடாது. 

விதி, முதலில் அதன் வேலையை செய்துகொண்டே இருக்கும். அதன் போக்கிலே சென்றுதான் திசை திருப்பவேண்டும்.

விதி எப்படி நிர்ணயிக்கப் படுகிறது?

ஒவ்வொரு ஆத்மாவும், ஒவ்வொரு பிறவியிலும் செய்த பாவ, புண்ணிய 
அளவை வைத்து, நடப்பு பிறவியிலே 
அதற்கு ஏற்றவாறு தாய், தந்தை உறவினர், நட்பு, பணி, கல்வி, ஆரோக்கியம் போன்றவை முன்னரே தீர்மானிக்கப்படுகிறது. 

அதில், விரும்பக்கூடியதை, மனிதன், ஏதும் சொல்லாமல் ஏற்றுக் கொள்கிறான்.

விரும்பக் கூடாததை மட்டும் 
மாற்றினால் நன்மை என்று 
எண்ணுகிறான்.

அது தவறில்லை. என்றாலும் விதி 
அதற்கு அனுமதி தராது. 

ஆத்மார்த்தமான பிரார்த்தனைகள், 
தர்மங்கள் செய்துதான் பிரச்சினைகளில் இருந்து மெல்ல, மெல்ல வெளியே வர வேண்டும். 

ஒருவனுக்கு நடக்கும் நிகழ்வு, வேறொரு மனிதனுக்கு நடக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.

ஏனென்றால், ஒவ்வொரு மனிதனின் கர்மா, பாவங்கள், தனித்தனியான அளவீடுகளை கொண்டதாக இருக்கிறது. 

எம்மை நாடுவதும், வாக்கை அறிவதும், அறிந்த பிறகு ஆதி பிழறாமல் செய்தும், எவ்வித மாற்றமும் இல்லை என்று வருந்துகின்ற மனிதர்கள் பலருண்டு. 

அங்கும் விதி கடுமையாக உள்ளதை, 
புரிந்து கொள்ளவேண்டும். மனச்சோர்வு கொள்ளாமல், மீண்டும், மீண்டும் இறைவனிடம் பிரார்த்தனையை வைத்துக் கொண்டே இருக்கவேண்டும்.

துன்பமே இல்லாத வாழ்க்கை என்று ஒன்றுமே கிடையாது. எப்படி இன்பம் ஒரு மாயையோ, துன்பமும் ஒரு மாயைதான். 

ஆக, இவ்விரண்டையும் தாங்கக்கூடிய மனோ பக்குவத்தை ஒரு மனிதன் வளர்த்துக் கொள்ளவேண்டும். 

கர்மத்தால் வருகின்ற துன்பம் யாவும், தர்மத்தால் தீர வழியுண்டு. ஆயினும் சில கர்மாக்களை அனுபவித்தே கழிக்க வேண்டும்.

அதற்குத்தான், "ஞானநிலை" 
என்று பெயர். அந்த ஞானத்தைத்தான் ஒவ்வொரு மனிதனும் அடையவேண்டும்.

என்பதே அகத்தியப் பெருமானின் 
அருள் வாக்கு...

இன்னும் அறிவோம்...

இலவச சித்தா, ஆயுர்வேத மருத்துவ ஆலோசனை மற்றும் சந்தேகங்களுக்கு அழைக்கவும்...

பேரன்புடன்….
சுதாகர் G வைத்யா
நாடி பரிசோதனை மற்றும் மருத்துவ ஜோதிட ஆராய்ச்சியாளர்.

பாரம்பரிய மருத்துவத்தில் எங்களின் குறிகோள் உடல் நலம் மற்றும் சுகாதாரத்தை காப்பதே… இங்கு ஆயுர்வேதம், சித்தா, மற்றும் பிற மருத்துவ அறிவியல்களின் ஊடாக நாங்கள் தனிப்பட்ட ஆலோசனைகள், மற்றும் நோய் தீர்க்கும் சிகிச்சைகள், சுகாதாரம் மற்றும் அழகு தொடர்பான சேவைகளை வழங்குகிறோம்.

மேலும் மூலிகைகள் மற்றும் சித்தா, ஆயுர்வேத மருத்துவம் பற்றிய உங்களது சந்தேகங்களுக்கும், ஆலோசனைக்கும் தொடர்பு கொள்ளவும்…
Mayura Ayurvedasram (Vedic Pharmacy)
#40, Old Busstand Commercial Complex,
Vellore - 632 004.  Call : 90430 25336

Mayura Wellness Centre
(Holistic Healing Solutions)
Near Vani Vidyalaya School, 
Katpadi – 632 006.  Call : 90421 35336


#மனம் #ஆயுர்வேதம் #சித்தா #மயூரா #வேலூர்


“மூட்டு அகற்றுவது தீர்வு அல்ல; அதன் இயற்கை இயக்கத்தை மீட்டெடுப்பதே மருத்துவம்.”

மூட்டு வலிக்கு அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வா? உண்மை என்ன சொல்கிறது? ✨ மூட்டு வலி இன்று பலருக்கும் வாழ்க்கைத் தரத்தை குறைக்கும் ஒ...