About Me

My photo
Vellore, Tamil Nadu , India
Showing posts with label பிரண்டை... (Pirandai) (Cissus quadrangularis). Show all posts
Showing posts with label பிரண்டை... (Pirandai) (Cissus quadrangularis). Show all posts

Thursday, August 5, 2021

பிட்னஸ் தரும் பிரண்டை...

 மாந்தம் வயிற்றுவலி வாயுவதி சாரமுளை சேர்ந்தமூ லங்கபமுட்

 செம்புனற்போக் - கோய்ந்த நடை யெல்லா மகலும் எழும்பும்

அதிகபசி மல்லார் பிரண்டை யுண்டு-வா.

உடலை வஜ்ரமாக்கும் வஜ்ரவல்லி ( பிரண்டை)


    சில வீடுகளில் அழகுக்காக வைத்து வளர்க்கப்படும் செடி கொடிகளில் பிரண்டையும் இருக் கும். வளர்ப்பவர்களுக்கு இதன் உபயோகம் தெரியாது. ஆனால் இன்றளவும் கிராமங்களிலும் சித்த மருத்துவர்களின் இல்லங்களிலும் இதன் அரிய மருத்துவ குணம் பயன் தெரிந்து இதை வளர்க் கிறார்கள். அல்லது வேலியோ ரங்களிலும் தோட்டங்களிலும் காடு மலைகளிலும் தன்னிச்சையாக வளரும் பிரண்டையைக் கொண்டு வந்து - மருந்தாகவோ. உணவுப் பொருளாகவோ பயன்படுத்துகிறார்கள். அநேகமாக பிரண்டை என்றவுடன் நம் நினைவுக்கு வருவது சுவையான பிரண்டைத் துவையல்தான் மற்ற காய்கறிகளைப் போலவே பிரண்டையை நெருப்பில் கட்டெடுத்து அதோடு உப்பு புளி மிளகாய் சேர்த்தரைத்து துவையலாகச் செய்து உணவோடு சேர்த்து சாப்பிடுவது நம் வழக்கம். சாப்பிட சுவையாக இருப்பதோடு உடலிலுள்ள பல நோய்களைத் தீர்க்கவும், சீரண சக்தியை அதிகரிக்கச் செய்து பசித்தீயை தூண்டவும் பயனாகிறது. அதோடு அக்கினி மந்தம், குன்மம், வாத அதிசாரம், (வாதக்கழிச்சல் நோய்) செரியாக் கழிச்சல். மூலநோய், கப சம்பந்தமான " நோய்கள், இரத்தபேதி போன்ற பல நோய்களும் குணமாகும் என்று பல சித்த மருத்துவ நூல்களில் இதன் பெருமை சொல்லப்பட்டிருக்கின்றது.

 குறிப்பாக அனுபவ வைத்தியம் என்கிற வகையில் இரத்த மூலத்திற்கு மிகச் சிறந்த மருந்தாக பிரண்டை பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. மூல நோய் என்பதே மிகவும் வேதனை தரத்தக்க நோய். அதிலும் அது முற்றிய நாட்பட்ட நிலையில் இரத்தமும் மலத்துடன் சேர்ந்தோ மலத்திற்கு முன்பாகவோ. பின்பாகவோ, வர ஆரம்பித்துவிட்டால் நோயாளிபடும் வேதனை சொல்லி மாளாது. அந்நோய் உள்ளவர்களுக்கு அற்புதமான மருந்தாக வரப்பிரசாதமாக பிரண்டை அமைகிறது.

இரத்த மூலத்திற்கு பிரண்டை

        இந்த இரத்த மூலம் உள்ளவர்கள் பிரண்டையைக் கொண்டு வந்த நெருப்பில் லேசாக சுட்டெடுத்து நெய் விட்டு அரைத்து-அரைத்த விழுதி சுமார் 10 கிராம் அளவிற்கு உணவிற்குப் பின் காலை மாலை இரு வேளை சாப்பிட்டுவர எட்டு நாட்களில் இரத்தமூலம் ஆச்சரியப்படத்தக்க வகையில் குணமாவதைக் காணலாம். அத்துடன் மூலத்துடன் இருக்கும் தாங்கமுடியாத வலி - குத்தல்-ஆசனக் கடுப்பும் குணமாவதோ குடலிலுள்ள புழு பூச்சிகளும் இதர கிருமிகளும் வெளியாகும். குட சுத்தமாகும்.

எலும்பு முறிவுக்கு பிரண்டை

        அடுத்து எலும்பு முறிவுக்கு சிறந்த மருந்தாக அமைவது பிரண்டையே. சித்த மருத்துவத்தில் எலும்பு முறிவுக்கு சிறந்த மருந்த பிரண்டை சொல்லப்பட்டிருக்கிறது. பிரண்டையின் வேரை நன்றாக நீரி அலம்பி நிழலில் நன்கு உலர்த்தி இடித்து சூரணித்து எடுத்துக்கொண் வேளைக்கு 1 (அ) 2 கிராம் வீதம் (ஒடிந்த எலும்பை சரியான முறையில் சேர்த்து வைத்து கட்டி) தினசரி காலை மாலை உள்ளுக்கு சாப்பிட்டு ஓடிந்த எலும்புகள் மிக விரைவில் கூடி இயல்பான நிலைமைக் வலுவானதாக கூடி வந்து விடும். அதே நேரத்தில் மீண்டும் எலும்புகள் உடையாதவாறு உறுதியாக அமையும்.


இரைப்பு நோய் (ஆஸ்த்மா) உள்ளவர்கள் முன்பு சொன்னபடியே பிரண்டையை இலேசாக கட்டெடுத்து பிரண்டையின் எடையில் 10ல் ஒரு பாகம் மிளகு கூட்டி அரைத்து வேளைக்கு 5 கிராம் அளவுக்கு காலை மாலை சாப்பிட்டு வர பயன் தெரியும்.

பிரண்டை உப்பு

            சித்த மருத்துவத்தில் இது பல்வேறு விதமான நோய்களுக்கு சிறந்த மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதில் முக்கியமாக வயிறு சம்பந்தமான நோய்களுக்கு பிரண்டை மிகச் சிறந்த மருந்து, இதை நாமே நம் வீட்டில் எளிதில் தயாரித்துக் கொள்ளலாம். பிரண்டையை அதன் எடை அளவிற்கு சோற்றுப்பு சேர்த்து கல்லுரலில் நன்றாக இடித்து ஒரு மண் குடுவையில் போட்டு வாய்ப்புறத்தை சரியாக இடைவெளியின்றி பொருந்தும்படியான மண் அகல் கொண்டு மூடி சீலை மண் கொண்டு இடை வெளியின்றி பூசிபுடக்குழியில் வைத்து நாற்புறங்களிலும் அடியிலும் மேற்புறத்திலும் மூடும்படியான அளவிற்கு வரட்டிகளை அடுக்கி எரித்து ஆறிய பின் பிரித்து உள்ளே உள்ளதை எடுத்து நன்றாக அரைத்து கண்ணாடி (அ) பீங்கான் குப்பியில் பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு வேளைக்கு 3 முதல் 5 கிராம் வரை உணவுக்குப் பின் காலை-மாலை மோரில் சாப்பிட்டு வர வயிற்று சம்பந்தமான நோய்கள் குறிப்பாக வாய்வு உப்பிசம் செரியாமை-வயிற்றுப் பொருமல்- நெஞ்செரிச்சல் - புளித்த ஏப்பம்-உஷ்ண வாய்வு செரியாக்கழிச்சல் அனைத்தும் குணமாகும்.

                பிரண்டையின் தண்டு பாகத்தை நெருப்பனலில் வதக்கிப் பிழிய சாறு வரும். இச்சாற்றினை காதுவலி, காதில் சீழ் வடிதல் போன்ற காது சம்பந்தமான நோய்களுக்கு 2 (அ) 3 துளி காலை இரவு இரு வேளை காதுகளை சுத்தம் செய்த பின்னர் காதில் விட்டு பஞ்சடைத்து வர விரைவில் குணமாகும்.

                   சிலருக்கு மூக்கில் இருந்து திடீரென இரத்தம் வடியும் அல்லது கொட்டும். இதனை ஆங்கிலத்தில் Epistaxis என்றும் சித்த மருத்துவத்தில் இரத்தப்பீனிசம் என்றும் சொல்வார்கள். பீனிச நோய் (Maxillary Sinusitis) உள்ளவர்களுக்கு இம்மாதிரி ஏற்படுவதுண்டு. இதற்கும் மேற்கூறியவாறு பிரண்டையிலிருந்து சாறு எடுத்து மூக்கில் விடுவதற்கு சொட்டு மருந்தாக பயன்படுத்தி வர குணம் காணலாம்.

            உயிர்ச்சத்து 'சி' பற்றாக்குறையின் காரணமாக ஏற்படும் ஸ்கர்வி (Scurvy) என்னும் நோய்க்கும் பிரண்டை மிகச் சிறந்த மருந்தாக விளங்குகிறது. அதே போல் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய்க் கோளாறுகள் குறிப்பாக தாமதித்த மாதவிடாய், ஒழுங்கற்ற மாதவிடாய் போன்றவற்றை சரி செய்வதற்கும் சித்த மருத்துவத்தில் பிரண்டை மிகச் சிறந்த மருந்துப் பொருளாக பயன்பட்டு வருகிறது.

பிரண்டை சூரணம்

            பிரண்டையின் முற்றாத தண்டுகளை இலையோடு சேர்த்து நிழலிவ் நன்கு உலர்த்தி சம அளவுக்கு சுக்கு-மிளகு-சேர்த்து இடித்து சலித்து சூரணமாக்கி வைத்துக் கொண்டு வேளைக்கு 5 கிராம் வீதம் உணவுக்குப் பின் காலை மாலை வெந்நீருடன் சாப்பிட்டு வர வயிறு சம்பந்தமான நோய்கள் குணமாகும். செரியாமை நீங்கும். இதே சூரணத்தை பாலில் கற்கண்டு சேர்த்து அத்துடன் சாப்பிட்டு வர இளைத்த உடல் தேறி உடலுக்கு. வலுவுண்டாகும்.



பிரண்டைக்குடிநீர்

                பிரண்டை - இலந்தை இலை - வேம்பின் ஈர்க்கு-முருக்கன் விதை ஓமம் இவைகளை முறைப்படி சுத்தி செய்து தேவையான அளவு நீர் சேர்த்து நான்கில் ஒரு பாகமாக வற்றக்காய்ச்சி குடிநீரிட்டு வடிகட்டி காலையில் குடித்துவர வயிற்றில் தங்கிய வாய்வு வெளியேறும். குடல் புழுக்கள் வெளியேறும்.

பிரண்டை வடகம்

            பிரண்டையை உப்பிட்ட மோரில் ஊற வைத்து வெயிலில் வைத்து நன்றாக உலர்த்தி எடுத்துக்கொண்டு வேண்டும் போது நெய் (அ) எண்ணெயில் பொறித்து உணவோடு சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். பிரண்டையின்கண் கூறப்பட்ட அனைத்து பயன்களையும் பிரண்டை வடகம் (அ) வற்றல் சாப்பிடுவதன் மூலமும் பெறலாம்.

அடுத்த பதிவில் வேறொரு மூலிகை பற்றி பார்ப்போம்.

மேலும் மூலிகைகள் மற்றும் சித்த மருந்துகளை பற்றிய உங்களது சந்தேகங்களுக்கும், இலவச மருத்துவ  ஆலோசனைக்கும் தொடர்பு கொள்ளவும்…



மயூரா சுதாகர் G 
Consultant for Holistic Wellness
Mayura Wellness Clinic
(Healing solutions for General Wellness)
90421 35336

நான் உங்கள் மயூரா சுதாகர்...

            மக்களிடையே இறைசக்தியை பற்றியும், இயற்கையைப் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தி, அதன் வாயிலாக அவர்களின் உடல், மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதை எனது வாழ்வின் விருப்பமாகக் கொண்டுள்ளேன். அதற்கான பல்வேறு பணிகளில் நான் என்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளேன்.  வாழ்வியல் முறைகளையும், வாழ்வியல் முறையின் தத்துவங்களையும், இறைவழி மருத்துவ சிகிச்சை முறைகளையும் கற்றுக் கொடுப்பது மற்றும் அது சார்ந்த மருத்துவக் கருத்துக்களை பல்வேறு சமூக ஊடகங்கள் மூலமும், நேரடியாக மக்களை சந்தித்தும் எடுத்துரைப்பது போன்ற பணிகள் அவைகளில் முக்கியமானவை.


“மூட்டு அகற்றுவது தீர்வு அல்ல; அதன் இயற்கை இயக்கத்தை மீட்டெடுப்பதே மருத்துவம்.”

மூட்டு வலிக்கு அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வா? உண்மை என்ன சொல்கிறது? ✨ மூட்டு வலி இன்று பலருக்கும் வாழ்க்கைத் தரத்தை குறைக்கும் ஒ...