About Me

My photo
Vellore, Tamil Nadu , India

Saturday, June 18, 2022

விசவிருட்சங்கள்

விசவிருட்சங்கள்...

முகத்திற்கு பூச்சிட்டு....
முழுமையாக கவரும் வகையில் 
மிடுக்கான ஆடை அணிந்து ....
சுண்டியிழுக்கும் நறுமணம் வீச...
பார்வைக்கு அழகாக தோற்றம் தரும்
இவர்கள் நடமாடும் விசவிருட்சங்கள்...!

காந்தக்கண் பார்வை...
கனிவான பேச்சு ...
கலகலப்பான சிரிப்பை 
கலப்படமாய் கலந்து....தமது
காரியத்தை மற்றவரை கொண்டு
கச்சிதமாய் நடத்திடும்
இவர்கள் நடமாடும் 
விசவிருட்சங்கள் ...!

அகவுணர்வை மறைத்து...
புற அழகைக் காட்டி...
பிறரது மனம் கவர்ந்து...
மற்றவர்களிடமிருந்து தேவைகளை
சூதானமாக நிறைவேற்றிடும்
இவர்கள் நடமாடும் 
விசவிருட்சங்கள் ...!
இவ்விசவிருட்சங்கள் 
சிறிது தலை அசைத்தால்....
கௌரவம் இவர்கள் காலில் விழும்...!
காசு பணம் இவர்கள் மடியில் கொட்டும்..!
பட்டம், பதவி தாமாய் தேடி வரும்...!
மதிப்பும் மரியாதையும் மண்டியிட்டு கிடக்கும் ..!

நடிப்பை மூலதனமாய் கொண்டு...
நயவஞ்சக புத்தியை ஆயுதமாய் ஏந்தி நல்லழகை பாதுகாப்பு கவசமாக்கி...
நஞ்சு மனதை மட்டும் உண்மையில் கொண்ட  நடமாடும் இவ்விருட்சங்களிடமிருந்து
நாம் நாலடி தள்ளியிருப்பதே சிறப்பு....

முடிந்தால் இவர்கள் நிழல் கூட படவிடாது தன்னம்பிக்கை வெயிலில்
தைரியமாய் கால் பதிப்போம்....!
வெந்தணலின் சூட்டில்
பக்குவப்பட்ட கால்களுடன்
பயணத்தை வெற்றிகரமாக முடிப்போம்...!
.          தெய்வம் நின்று கொல்லும்...

இன்னும் அறிவோம்...

பேரன்புடன்….
சுதாகர் G வைத்யா
நாடி பரிசோதனை மற்றும் மருத்துவ ஜோதிட ஆராய்ச்சியாளர்.

பாரம்பரிய மருத்துவத்தில் எங்களின் குறிகோள் உடல் நலம் மற்றும் சுகாதாரத்தை காப்பதே… இங்கு ஆயுர்வேதம், சித்தா, மற்றும் பிற மருத்துவ அறிவியல்களின் ஊடாக நாங்கள் தனிப்பட்ட ஆலோசனைகள், மற்றும் நோய் தீர்க்கும் சிகிச்சைகள், சுகாதாரம் மற்றும் அழகு தொடர்பான சேவைகளை வழங்குகிறோம்.

மேலும் மூலிகைகள் மற்றும் சித்தா, ஆயுர்வேத மருத்துவம் பற்றிய உங்களது சந்தேகங்களுக்கும், ஆலோசனைக்கும் தொடர்பு கொள்ளவும்…
Mayura Ayurvedasram (Vedic Pharmacy)
#40, Old Busstand Commercial Complex,
Vellore - 632 004.  Call : 90430 25336

Mayura Wellness Centre
(Holistic Healing Solutions)
Near Vani Vidyalaya School, 
Katpadi – 632 006.  Call : 90421 35336


#மனம் #மயூரா#ஆயுர்வேதம் #சித்தா  #வேலூர்

வாழ்க்கை வசப்படும்

வாழ்க்கை வசப்படும்...

பூமியில் வசிப்பதற்கு பெரிய முயற்சியோ, நம்பிக்கையோ துணிச்சலோ தேவையில்லை. ஏனெனில் நம் பூமி எவ்வித பாகுபாடுமின்றி அனைவருக்கும் இடம் கொடுக்கும். ஆனால் இந்த பூமியில் வாழத்தான் நாம் பெரும் முயற்சி மேற் கொள்ள வேண்டியிருக்கிறது. நாம்தான் முடிவு செய்ய வேண்டும், நாம் வசிக்கப் பிறந்தோமா? அல்லது வாழப்பிறந்தோமா? என்று.

நல்வாழ்வு வாழ வேண்டும் என்று முடிவெடுத்தபின் நாம் செய்யவேண்டியது ஒரு சிறு விஷயம்தான் மாற்றம். அத்தகைய மாற்றம் நம்மில் இருந்தும், நம் அன்றாட செயல்களி லிருந்தும் ஆரம்பமாக வேண்டும். மாற்றங்களை விரும்பாத எவரும் மகத்தான வாழ்வு வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. மாறாத, மாறவிரும்பாத எந்த உயிரினமும் அதன் சந்ததியை பூமியில் விட்டுச் செல்லவில்லை. இதை நம்பினால் பூமியில் இனிய வாழ்வு வாழலாம்.

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணியும், ஒவ்வொரு நிமிடமும் ஏன் ஒவ்வொரு நொடியும் எஞ்சியுள்ள வாழ்வை ஆனந்தமாய் வாழ முடிவெடுக்கும் சக்தி நம் ஒவ்வொருவரிடமும் உண்டு என்பதை நாம் நம்பித்தான் ஆகவேண்டும்.

சூரியக் குடும்பத்தில் உள்ள எட்டு கோள்களில் (புளூட்டோ குள்ளக்கோள்) பூமி மட்டுமே ஜீவராசிகள் வாழத் தகுதி வாய்ந்தது. பூமியானது எந்தப் பிடிமானமுமின்றி தன்னைத் தானே சுற்றிக்கொண்டும், சூரியனையும் சுற்றி வருகிறது.

ஆனால், “பூமி சுற்றுவதை உணர முடிவதில்லை. நம்பித்தான் ஆகவேண்டும். ஏனெனில் அது உண்மை. அதேபோல் நம் ஒவ்வொருவரிடமும் சக்தி உள்ளது. இதை உணர முடிவதில்லை. ஆனால் நம்பித்தான் ஆகவேண்டும். ஏனெனில் இதுவும் உண்மை.”

சூரியன் தன் ஈர்ப்புச்சக்தியினால் எட்டு கோள்களையும் தன் கட்டுக்குள் வைத்திருக்கிறது. இந்த சக்தி சூரியனுக்கு எங்கிருந்து வந்தது? சூரியனுக்கு அச்சக்தி கொடுத்த பிரபஞ்சம்தான். நம் அனைவருக்கும் சக்தியை அனுதினமும் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

பிரபஞ்சத்தைப் பற்றி முழுவதுமாக அறிந்தவர்களில்லை. எனினும் சிறு துளிகள். நாம் உயிர் வாழும் பூமி போன்ற பல கோடிக்கணக்கான கோள்கள் அடங்கிய பால்வெளி மண்டலமும் கோடிக்கணக்கான விண்மீன்கள் தொகுப்பும் சேர்ந்தது அண்டம் ஆகும். பல கோடிக்கணக்காக அண்டங்களின் தொகுப்பே, பேரண்டம் (மய்ண்ஸ்ங்ழ்ள்ங்) பிரபஞ்சம் எனப்படுகிறது. மனிதனின் கற்பனைக்கும் எட்டாத ஒன்றுதான் பிரபஞ்சம்.
கற்பனையே செய்ய முடியாத பிரபஞ்சத்தின் ஒரு சிறுபகுதிதான். நாம் உயிர் வாழும் பூமி. இந்த பூமியை இயக்கிக்கொண்டிருப்பது பிரபஞ்ச சக்தி ஆகும். இதே பிரபஞ்ச சக்திதான் பூமியில் வாழ நினைப்பவர்களுக்கு வாழ்க்கையை கொடுக்கிறது. இருக்க நினைப்பவர்களுக்க வசிக்க இடம் கொடுக்கிறது. இந்த பிரபஞ்ச சக்தியானது நம் ஆழ்மனம் மூலமாக நம் ஒவ்வொருவருள்ளும், ஒவ்வொரு நொடியும் அளப்பரிய சக்தியை கொடுத்துக் கொண்டிருக்கிறது.

ஆழ்மனம் என்ற ஒன்று தனியாக இல்லை. மனித மனம்தான் அறிவுமனம், ஆழ்மனம் என்று இருவிதமாக வேலை செய்து கொண்டு இருக்கிறது.

“உருவமே இல்லாத ஆழ்மனம்தான் இந்த உலகத்தை உருவாக்குகிறது. அடையாளம் காண முடியாத ஆழ்மனம்தான் நம்மை இந்த உலகிற்கு அடையாளம் காட்டுகிறது. அறிய முடியாத ஆழ் மனம்தான் நம் வாழ்க்கையில் அற்புதத்தை நிகழ்த்துகிறது.” இதுவரை நாம் வாழ்ந்த நாட் களுக்கும், இனி வாழும் வாழ்க்கைக்கும் மூலதனம் நம் ஆழ்மனம் ஆகும். இன்று நாம் வாழும் வாழ்க்கை நமக்கு பிடித்திருந்தாலும் பிடிக்காதிருந் தாலும் அது நாம் தெரிந்தோ, தெரியாமலோ நம் மனம் விரும்பியது தான்!

ஏன் ஒரு சிலருக்கு தொட்டதெல்லாம் துலங்குகிறது? ஏன் சிலருக்கு தொட்டதெல்லாம் சுடுகிறது? ஏன் ஒரு சிலருக்கு தொட்டதெல்லாம் தொலைந்தே போகிறது? இப்போது இதற்கு காரணம் உங்களால் சொல்லமுடியும். நீங்கள் யூகிப்பது முற்றிலும் சரியே. ஆம். எல்லாவற்றிற்கும் காரணம் நம் எண்ணங்களே. எதை நாம் விரும்பி நினைக்கிறோமோ அதுதான் நடக்கும். நாம் நினைக்கும் அனைத்தையும் நடத்திக் கொடுக்கும் சக்தி நம் ஆழ்மனத்திற்கு உண்டு.

நாம் நாள் முழுவதும் என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறோமோ அதுவாகவே ஆகிறோம். காரணம் நம் ஆழ்மனம். நாம் விரும்பிய அனைத்தையும் நம் கண்முன்னே கொண்டு வந்து வைக்கும் ஒரு விசுவாசமுள்ள வேலையாள்தான் நம் ஆழ்மனம்.

நாம் விரும்பியதை அடைய ஒரே வழி, நம் எண்ணங்களை சீர் செய்வதுதான். அந்த எண்ணங் களுக்கு உருவம் கொடுப்பதுதான்.

ஏனெனில் நம் ஆழ்மனத்திற்கு வார்த்தைகள் தெரியாது. நல்லது எது? கெட்டது எது? என்று பிரித்துப்பபார்க்கத் தெரியாது. எண்ணத்தை வலிமைப்படுத்துவதுதான் ஆழ்மனதை வசியப் படுத்த ஒரே வழி.

ஓர் எண்ணத்தை மனதில் விதைத்து, அதை அனுதினமும் நினைத்து, அந்த எண்ணத்தை நம் ஐம்புலன்களாலும் உணர்ந்து வாழ்ந்தால் அந்த எண்ணம் வண்ணமாவது திண்ணம்.

பிரபஞ்சம் இன்னும் அறிவோம்...
இலவச சித்தா , ஆயுர்வேதம் மற்றும் இயற்கை மருத்துவ ஆலோசனைக்கு...
மயூரா ஆயுர்வேதாஸ்ரம் | வேலூர்
மயூரா நல மையம் | காட்பாடி
Call : 90421 35336

“மூட்டு அகற்றுவது தீர்வு அல்ல; அதன் இயற்கை இயக்கத்தை மீட்டெடுப்பதே மருத்துவம்.”

மூட்டு வலிக்கு அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வா? உண்மை என்ன சொல்கிறது? ✨ மூட்டு வலி இன்று பலருக்கும் வாழ்க்கைத் தரத்தை குறைக்கும் ஒ...