About Me

My photo
Vellore, Tamil Nadu , India

Thursday, August 12, 2021

"திகிலுட்டும் திகைப்பூண்டு"

 அபூர்வ மூலிகைகளை காக்கும் 

"திகிலுட்டும் திகைப்பூண்டு"



                    'அடர்ந்த காடுகளில் 'திகைப்பூண்டு' என்ற ஒரு செடி இருக்கிறது. இதை யாராவது மிதித்துவிட்டால் அவர்கள் வந்த வழி. வந்த வேலையெல்லாம் மறந்து, சித்தம் கலங்கினாற்போல் ஆகிவிடுவார்கள். இப்படி வழி மறந்து திகைத்து நின்று விடுவதாலேயே இதற்கு திகைப்பூண்டு என்ற பெயர் வந்தது. கொடைக்கானல் மலைமேல் பேரிஜம் ஏரிக்கு செல்லும் வழியில் 'மதிகெட்டான் சோலை" என்றோர் பகுதியுண்டு. பல நூற்றுக் கணக்கான ஏக்கர் பரந்து விரிந்துள்ள இப்பகுதி முழுவதும் வெளியாட் களோ - விலங்குகளோ உள்ளே நுழையாதவாறு பாதுகாப்பான முட்கம்பி வேலி போட்டு அடைக்கப்பட்டிருக்கும். தமிழக வனத்துறையினர் வனபாதுகாப்புக்காக இவ்வாறு வேலி அமைத்திருக்கக் கூடும் என்று நான் எண்ணிய வேளையில் - அங்கிருந்த உள்ளூர்க்காரர்கள் சொன்ன தகவல் என்னை திகைப்படைய வைத்தது. அந்தக் காட்டினுள்ளே சில அபூர்வ மூலிகைகள் உண்டென்றும் அம்மூலிகைகளில் ஒருவகை மூலிகை திகைப்பூண்டு வகையைச் சேர்ந்ததென்றும் அம்மூலிகை உடல்மீது பட்டவுடன் அல்லது அதை மிதித்தவுடன் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு மூளையில் இரத்தஓட்டம் கலங்கி நினைவு தடுமாறி - தன் நிலைமறந்து அந்தக் காட்டினுள்ளே மீண்டும் மீண்டும் சுற்றி சுற்றி வந்து அன்ன ஆகாரமன்றி தண்ணீரின்றி சுற்றி சுற்றி கடைசியில் இறந்து விடுவார்களாம். அக்காட்டினுள்ளே ஆராய்ச்சிக்குச் சென்ற சில வெளிநாட்டவர்களுக்கு இம்மூலிகையின் பாதிப்பு ஏற்பட்டு சித்தம் கலங்கி ஊருக்குத் திரும்ப வழியின்றி அங்கேயே அலைந்து திரிந்து கடைசியில் இறந்து போனதாகவும். வேறு யாருக்கும் இந்நிலை வந்து விடக்கூடாது என்று. பின்னர் அக்காடு முழுவதும் வேலி அடைக்கப்பட்டதாக ஒரு தகவலைக் கூறினார்கள்.

அடுத்த பதிவில் வேறொரு மூலிகை பற்றி பார்ப்போம்.

மேலும் மூலிகைகள் மற்றும் சித்த மருந்துகளை பற்றிய உங்களது சந்தேகங்களுக்கும், ஆலோசனைக்கும் தொடர்பு கொள்ளவும்…


            
ஆதிரா 
Consultant for Holistic Wellness
Mayura Wellness Clinic
(Healing solutions for General Wellness)
97862 25999

















No comments:

Post a Comment

“மூட்டு அகற்றுவது தீர்வு அல்ல; அதன் இயற்கை இயக்கத்தை மீட்டெடுப்பதே மருத்துவம்.”

மூட்டு வலிக்கு அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வா? உண்மை என்ன சொல்கிறது? ✨ மூட்டு வலி இன்று பலருக்கும் வாழ்க்கைத் தரத்தை குறைக்கும் ஒ...