About Me

My photo
Vellore, Tamil Nadu , India

Monday, August 9, 2021

சிறுநீரகக் கற்களுக்கு சிறுபீளை அற்புதமான மருந்து...

             சிறுபீளைச்செடி, சிறுசிறு வட்ட வடிவ இலைகளைக் கொண்ட 6 முதல் 8 அங்குலம் வரை வளரக்கூடிய சிறு செடியாகும். இதன் ஒவ்வொரு இலைக்கும் சிறுசிறு உருண்டை வடிவ வெளுத்த மஞ்சள் நிறத்தில் பூக்கள் பூத்திருக்கும். இப்பூக்கள் நம் கண்களில் காணும் பிளையைப் போன்று உருவத்தில் ஒத்திருக்கும். அதனால் இதற்கு சிறுபீளை என்ற பெயர் வந்தது. இதன் செய்கையை வைத்து இதற்கு தமிழில் கற்கரைச்சி பாஷாணபேதி என்ற வேறு பெயர்களும் உண்டு. இன்னொரு முக்கிய அடையாளம் மாட்டுப்பொங்கலன்று இச்செடியை மாவிலை கரும்பு பிரண்டை ஆகியவற்றுடன் சேர்த்து மாலையாகக் கட்டி மாட்டின் கழுத்தில் அணிவிப்பார்களே அந்த பூதான் இது இதுதான் சிறுபீளை என்பது, நாட்டு வழக்கில் பூளை என்றும் பூலாப்பூ என்றும் சொல்வார்கள்.




            சிறுபீளை சாப்பிடும் போது உணவில் உப்பு, புளி, காரம் குறைக்க வேண்டும். மாமிச உணவை தவிர்க்க வேண்டும். ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற புளிப்பான பழங்களையும், தக்காளி, பீன்ஸ், வெண்டை, பட்டாணி போன்றவைகளையும் தவிர்த்து, பால், தயிர், மோர் போன்ற பால் பொருட்களை உண்ணுவதையும், தவிர்க்க வேண்டும். தேவையானால் வெண்ணெய் நீக்கிய மோரில் நீர் அதிகம் சேர்த்து உபயோகிக்கலாம். அதையும் மீறி மேற்கண்ட பொருட்களை உபயோகித்தால் சிறுநீரில் யூரிக் அமிலம், சுண்ணாம்பு படிவங்கள் அதிகமாகும். இதனால் மேலும் சிறுநீரகக்கற்கள் உற்பத்தியாகும் வாய்ப்பு அதிகம் என்றேன். நான் கூறிய ஆலோசனைப்படி குறிப்பிட்ட காலம்வரை சிறுபீனை கற்கத்தை குறிப்பிட்ட நாட்கள் சாப்பிட்ட வர சில தினங்களிலேயே சிறுநீருடன் ரத்தம் வருவது நின்றுபோகும்,அதன்பிறகு படிப்படியாக சிறுநீர்த்தாரையில் இருந்த வலியும் எரிச்சலும் நின்று போகும். சிறுநீர் இயல்பாக வெளியேற தொடங்கினாலும் ஆலோசனைப்படி குறிப்பிட்ட காலம் வரை சிறுபீளையை தொடர்ந்து சாப்பிட்டு வந்து  பின்னரே சாப்பிடுவதை நிறுத்தி வேண்டும் சிறிது நாட்கள் சாப்பிட்ட பிறகு  ரத்தம், சிறுநீர், எக்ஸ்ரே, ஸ்கேன் பரிசோதனை  முடிவுகள் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

        கல்லடைப்பு மற்றும் சிறுநீரகக் கற்கள் தொல்லையிலிருந்து பூரண குணமடைந்து இருப்பிர்கள்.

        "சிறுநீரகக் கற்களுக்கு  'சிறுபீளை அற்புதமான மருந்து, அதற்கு சுற்கரைச்சி, பாஷாண பேதி என்ற மற்ற பெயர்களும் நூற்றுக்கு நூறு சதவீதம் பொருத்தமான பெயர்தான் அது

கல்லடைப்பு, சிறுநீரகக்கற்கள் வியாதி ஏன் எப்படி வருகிறது?''

            ''நான் ஏற்கனவே சொன்ன காரணங்களோடு சித்த மருத்துவத்தில் சிறுநீர் பதினான்கு வேகங்களில் ஒன்றாக கூறப்பட்டுள்ளது. சிறுநீரை அடக்குவதால் கல்லடைப்பு நோய் வரும். கற்கள் உண்டாகும் எனவும் கூறப்பட்டுள்ளது. எனவே அடிக்கடி நல்ல தண்ணீர் குடித்து அவ்வப்போது சிறுநீர் கழிக்க வேண்டும். நாள்தோறும் 2 முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் பருகி 5-6 முறையாகிலும் சிறுநீர் கழித்தல் வேண்டும் ஆரோக்ய வாழ்விற்கு 'மும்மலம் - அறுநீர் என்பது சித்தர் வாக்கு குறிப்பாக வெயிலில் வேலை செய்வோர்.

     வெப்பத்தை தரும் இயந்திரங்களில் பணி புரிவோர். அடுப்பனலில் வேலை செய்வோர் இந்த விதி முறைகளை அவசியம் பின்பற்ற வேண்டும். இந்த காரணங்கள் மற்றும் உங்களுடைய உணவு மற்றும் பழக்க வழக்கங்களினால் இந்த வியாதி வரலாம்.

        சித்த மருத்துவத்தில் என்னதான் சிறுநீரகக்கற்கள் உற்பத்தியாகும் வாய்ப்பு குறைவு என்றாலும் உங்களின் உணவு, வேலை, பழக்க வழக்கங்கள் மீண்டும் முன்பு போலவே தொடருமானால் சிறுநீரக கற்கள் மீண்டும் உற்பத்தியாகலாம். எனவே மருத்துவ ஆலோசனையை கடைபிடித்து ஆறு மாதத்திற்கு ஒரு முறையேனும் இந்த பரிசோதனைகளை மீண்டும் மேற்கொள்ளுங்கள். 

உணவில் கல் மண் கலந்து அதையும் சாப்பிட்டுவிட்டால் அது சிறுநீரகக் கற்களாக மாறுகிறது என்கிறார்களே?" "அது தவறு. உணவில் கல்மண் கலந்து தவறுதலாக சாப்பிட்டுவிட்டால் அது சிறுநீரகக் கற்களாக மாற வாய்ப்பே இல்லை. அவை செரிமனமாகி மலத்துடன் வெளியேறிவிடும்" 

        சிறுபீளைச் செடியினால் வேறு எந்தெந்த நோய்கள் குணமாகும்? என்பதை பார்ப்போம்

        "சிறுபீளைச் செடியினால் உடல் வெளுப்பு, வாத பித்த, கப் நோய்கள், சிறுநீரக சம்பந்தமான நோய்களான கல்லடைப்பு, சிறுநீரக கற்கள், நீர்ச்சுருக்கு. நீர்க்கடுப்பு, வலி, வெள்ளை, வெட்டை ஆகிய நோய்கள் குணமாகும்."

        சிறுபீளைச் செடியின் இதர பாகங்கள் சித்த மருத்துவத்தில் 

        சிறுபீளைச் செடியின் வேரை பஞ்சு போல் நசுக்கி போதுமான அளவு நீர்விட்டு ஊறவிட்டு பின்னர் கொதிக்க வைத்து எட்டில் ஒன்றாக சுண்டக்காய்ச்சி வடிகட்டி வேளைக்கு 1 அவுன்சு முதல் 2 அவுன்சு வரை காலை-மாலை இருவேளை குடித்துவர சிறுநீர் அடைப்பு நீங்கி சிறுநீர் தாராளமாக வெளியேறும் மேற்சொன்ன வியாதிகளும் குணமாகும் என்றேன்.

        "கல்லடைப்பு நோய் வரும் காரணம். சிறுநீரகக் கற்கள் உருவாகக காரணம்-அதற்கு சிறுபீளை எந்த அளவில் மருந்தாகி குணப்படுத்துகிறது என்பதை எல்லாம் பார்த்தோம்.

அடுத்த பதிவில் வேறொரு மூலிகை பற்றி பார்ப்போம்.

மேலும் மூலிகைகள் மற்றும் சித்த மருந்துகளை பற்றிய உங்களது சந்தேகங்களுக்கும், ஆலோசனைக்கும் தொடர்பு கொள்ளவும்

Mayura Wellness Clinic
(Healing solutions for General Wellness)
Call 90421 35336

நான் உங்கள் சுதாகர் G வைத்யா

        மக்களிடையே இறைசக்தியை பற்றியும், இயற்கையைப் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தி, அதன் வாயிலாக அவர்களின் உடல், மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதை எனது வாழ்வின் விருப்பமாகக் கொண்டுள்ளேன். அதற்கான பல்வேறு பணிகளில் நான் என்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளேன்.  வாழ்வியல் முறைகளையும், வாழ்வியல் முறையின் தத்துவங்களையும், இறைவழி மருத்துவ சிகிச்சை முறைகளையும் கற்றுக் கொடுப்பது மற்றும் அது சார்ந்த மருத்துவக் கருத்துக்களை பல்வேறு சமூக ஊடகங்கள் மூலமும், நேரடியாக மக்களை சந்தித்தும் எடுத்துரைப்பது போன்ற பணிகள் அவைகளில் முக்கியமானவை.











நன்றி : மரு.ராமலிங்கம்

No comments:

Post a Comment

“மூட்டு அகற்றுவது தீர்வு அல்ல; அதன் இயற்கை இயக்கத்தை மீட்டெடுப்பதே மருத்துவம்.”

மூட்டு வலிக்கு அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வா? உண்மை என்ன சொல்கிறது? ✨ மூட்டு வலி இன்று பலருக்கும் வாழ்க்கைத் தரத்தை குறைக்கும் ஒ...