About Me

My photo
Vellore, Tamil Nadu , India

Monday, December 22, 2025

நவ கிரகங்களும்,நோய்களும்...

நவ கிரகங்களும் நோய்களும்... 
நவகிரகங்களின் கட்டுப்பாட்டில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களும் இருக்கின்றனர். நவகிரகங்களும் 12 ராசிகள் 27 நட்சத்திரங்களை கட்டுப்படுத்துகின்றன. ராகு கேது தவிர சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய கிரகங்கள் மனித உடம்பின் பாகங்களை கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. எந்த கிரகம் பாதிக்கப்படுகிறதோ அந்த கிரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள உடலின் பாகம் பாதிக்கப்படும். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களும் நவகிரகங்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றனர். எந்த கிரகம் பாதிக்கப்படுகிறதோ அந்த கிரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள உடலின் பாகம் பாதிக்கப்படும்.
 சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்ரன், சனி, ராகு கேது என நவகிரகங்களால் ஏற்படும் நோய்களையும் குணப்படுத்த செய்யும் பரிகாரங்களையும் பார்க்கலாம்.

ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து ஆறாம் இடம் ருண ரோக சத்ரு ஸ்தானம். ஒருவருக்கு எப்படிப்பட்ட நோய் வரும், அந்த நோய் எளிதில் தீருமா, அல்லது கடனாளி ஆக்கி விடுமா என்று ஆறாமிடத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
நோய் தொற்று பரவும் இன்றைய கால கட்டத்தில் யாரை எந்த நேரத்தில் நோய் தாக்குகிறது என்று சொல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. உடம்பில் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரித்துக்கொண்டால் நோய் வராமல் தடுக்கலாம். நோய் வந்தாலும் எளிதில் குணமடையும். நவகிரகங்களில் எந்த கிரகம் பாதிக்கப்பட்டால் என்ன நோய் வரும் என்று பார்த்து அதற்கேற்ப பரிகாரம் செய்தால் நோய்களில் இருந்தும் தப்பிக்கலாம்.

நோய்களும் கிரகங்களும்...

நோய்களும் கிரகங்களும்
தலை, இருதயம் சூரியனின் கட்டுப்பாட்டிலும், முகம், தொண்டை சந்திரன் கட்டுப்பாட்டிலும், கைகள், தோள்கள் செவ்வாயின் கட்டுப்பாட்டிலும், மார்பு புதன் கட்டுப்பாட்டிலும் உள்ளது. வயிறு, உடல் தோல் பாகம் குருவின் ஆதிக்கத்திலும் அடிவயிறு, பிறப்பு உறுப்பு சுக்கிரன் கட்டுப்பாட்டிலும் உள்ளது. அதே போல தொடை, கால்,பாதம் சனியின் ஆதிக்கத்தின் கீழும் வரும். இராகு, கேதுக்கள் நிழல் கிரகம் என்பதால் மனித உடலில் இடம் கொடுக்கப்படவில்லை.

நோய் எதிர்ப்பு சக்தி
ஜாதகத்தில் 6 ஆம் பாவாதிபதியுடன் எந்த கிரகம் சேர்க்கை பெற்று இருந்தாலும் அந்த கிரகத்திற்குரிய நோய்கள் வரக்கூடும். ஒருவரின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க நவகிரக வழிபாடு அவசியம். முக்கியமாக குரு, சூரியனை வழிபட வேண்டும். உடல் கட்டமைப்பு மற்றும் எலும்பின் காரகர் சனி பகவான் ஆவார். அவர் நல்ல நிலையில் ஜாதகத்தில் இருந்தாலே நோய்கள் எட்டிப்பார்க்காது.

சூரியன்

ஜாதகத்தில் சூரியன் பாதிக்கப்பட்டால் மலச்சிக்கல், அஜீரணம், தூக்கமின்மை, கண் நோய்கள், ரத்த அழுத்தம், இதய நோய், ஆஸ்துமா, வயிற்றில் பூச்சிகள் போன்ற நோய் களையும் ஜுரம் போன்றவை ஏற்படும்.

சந்திரன்

ஜாதகத்தில் சந்திரன் பாதிக்கப்பட்டால் மனநோய்கள், உணர்ச்சி வசப்படுதல், அதிவேக இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம், காச நோய், ரத்த சோகை, சளி, கபம், பாலியல் நோய்கள் இரைப்பைப் புண், நீரிழிவு, குடல் புண் ஏற்படும்.

செவ்வாய்

ஜாதகத்தில் செவ்வாய் பாதிக்கப்பட்டால் மூலநோய், நீரிழிவு, இரைப்பை மற்றும் குடல் நோய்கள், மன அழுத்தம், தோல் வியாதிகள், இதய நோய், நரம்புத் தளர்ச்சி, அம்மை, விபத்து மற்றும் ஆயுதங்களால் பாதிக்கப்படும்.


புதன்

ஜாதகத்தில் புதன் பாதிக்கப்பட்டிருந்தால் இதய நோய்கள், ரத்த அழுத்தம், வயிற்றுப்புண், புற்றுநோய், தோல் நோய்கள், நரம்பு தளர்ச்சி, இரைப்பை புண் ஏற்படும்.

குரு

ஜாதகத்தில் குரு பாதிக்கப்பட்டால் தொண்டை சம்பந்தமான நோய்கள், தைராய்டு, அம்மை, முடக்கு வாதம், காமாலை, நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகள், பக்க வாதம், கீழ் வாதம், நீரிழிவு நோய் ஏற்படும்.

சுக்கிரன்

ஜாதகத்தில் சுக்கிரன் பாதிக்கப்பட்டால் கண், காது, மூக்கு நோய்கள். நுரையீரல் நோய், இருமல், குடல்புண், இருதய நோய், ரத்த அழுத்தம், பாலியல் தொடர்பான நோய்கள் ஏற்படும்.

சனி

ஜாதகத்தில் சனி பாதிக்கப்பட்டால் மனநோய், கை கால் வலிப்பு, மூளை பாதிப்பு, தோல் நோய், நீண்ட கால வியாதிகள், சிறுநீரக நோய், பித்தம், குடல் நோய், விபத்தால் பாதிக்கப்படும்.

ராகு - கேது

ராகு பாதிக்கப்பட்டால் அதிக அமிலம் சுரத்தல், வயிறு கோளாறுகள், அஜீரணம், தூக்கமின்மை, மூளை நோய், குடல் புண், தோல் வியாதிகள் ஏற்படும். அது போல கேது பாதிக்கப்பட்டால் புற்றுநோய், வாதம், தோல் நோய்கள், காலரா, நரம்புத் தளர்ச்சி, சிறுநீரகக் கோளாறு ஏற்படும்.


நவ கிரக வழிபாடு :

நோய்களில் இருந்து தப்பிக்க குரு, சூரியன் சந்திரன் இவர்களை வழிபடுவது சிறந்த பலனளிக்கும்.
 தேவ மருத்துவரான தன்வந்திரி வழிபாடு மிகச்சிறந்த நோய் எதிர்ப்பாற்றலை ஏற்படுத்தும். புதன் மற்றும் வியாழன் கிழமைகளில் தன்வந்திரி வழிபாடு செய்யலாம்.


குல தெய்வ வழிபாடு:

உடம்பில் நோய் பாதிப்பு குறைந்து நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்க குல தெய்வ வழிபாடு அவசியம். குல தெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்டு வருவது சிறந்த நோய் எதிர்ப்பாற்றலை ஏற்படுத்தும். அமாவாசை நாட்களில் பித்ரு வழிபாடு எனும் முன்னோருக்கு செய்யும் திதிகளை சரியாக செய்தாலே நோய்கள் பாதிப்பு ஏற்படாது. தினசரியும் சூரிய நமஸ்காரம் செய்வது சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை தரும்.

தீராத நோய் தீர்க்கும் பரிகாரம்
செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமை அன்று அம்மன் கோவிலுக்கு சென்று கொடி மரத்தின் முன்பாக உங்கள் கையாலேயே கல் உப்பை கொட்டி வர, உங்களது உடலில் இருக்கும் நோய் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. வாரம் தோறும் வரும் வெள்ளிக்கிழமை அன்றும் செவ்வாய்க் கிழமை அன்றும் அம்மனுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வைத்துவிட்டு, உங்கள் கையால் உப்பைக் கொட்டி வந்தால் நிச்சயம் உங்களுடைய ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தெரியும். மருத்துவ சிகிச்சை தொடர்ந்து செய்ய நோய்கள் எளிதில் குணமடையும்.

பழனி முருகன் சந்தனம்: 

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக போற்றப்படும் பழனிக்கு சென்று முருகப்பெருமானை காலை 4.00 மணி அளவில் பிரம்ம முகூர்த்தத்தில் தரிசனம் செய்ய வேண்டும். அந்த சமயத்தில், கோவிலுக்கு வருகை தரக்கூடிய பக்தர்களுக்கு சந்தனத்தை பிரசாதமாக கொடுப்பார்கள். இந்த சந்தனத்தை எடுத்து நெற்றியில் இட்டுக் கொள்ளலாம். அதில் இருந்து ஒரு சொட்டு சந்தனத்தை எடுத்து தண்ணீரில் கலந்து பருக நோய்கள் நீங்கும். 
பழனி முருகனின் சிலையில் இருந்து சந்தனம் மொத்தமாக தான் எடுத்து பக்தர்களுக்கு வினியோகம் செய்யப்படும். முருகனின் தொப்புள் பகுதியில் இருக்கக்கூடிய சந்தனம் எவருக்கு கிடைக்கின்றதோ அவர்கள் அதிர்ஷ்டசாலிகள். நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்பவர்களுக்கு சரும நோய்களும், உடல் நலக்கோளாறுகளும் எளிதில் நீங்கும்.

இன்னும் அறிவோம்...

சித்தா, ஆயுர்வேத மருத்துவ ஆலோசனை மற்றும் சந்தேகங்களுக்கு அழைக்கவும்...

பேரன்புடன்….
சுதாகர் G வைத்யா
நாடி பரிசோதனை மற்றும் மருத்துவ ஜோதிட ஆராய்ச்சியாளர்.

பாரம்பரிய மருத்துவத்தில் எங்களின் குறிகோள் உடல் நலம் மற்றும் சுகாதாரத்தை காப்பதே… இங்கு ஆயுர்வேதம், சித்தா, மற்றும் பிற மருத்துவ ஜோதிட அறிவியலின் ஊடாக நாங்கள் தனிப்பட்ட ஆலோசனைகள், மற்றும் நோய் தீர்க்கும் சிகிச்சைகள், சுகாதாரம் மற்றும் அழகு தொடர்பான சேவைகளை வழங்குகிறோம்.

மேலும் மூலிகைகள் மற்றும் சித்தா, ஆயுர்வேத மருத்துவம் பற்றிய உங்களது சந்தேகங்களுக்கும், ஆலோசனைக்கும் தொடர்பு கொள்ளவும்…
Mayura Vedic Pharmacy
#40, Old Busstand Commercial Complex,
Vellore - 632 004.  Call : 90430 25336

Mayura Vaidya Salai
(Holistic Healing Solutions)
Near Silkmill Bus stop, 
Katpadi – 632 006.  Call : 90421 35336


#அக்கறை #உடலும் #உயிரும் #மனம் #மயூரா #ஆயுர்வேதம் #சித்தா #நாடிபரிசோதனை #மருத்துவஜோதிடம் #வேலூர்

https://mayuraayur.com/pages/appointment




 

No comments:

Post a Comment

“மூட்டு அகற்றுவது தீர்வு அல்ல; அதன் இயற்கை இயக்கத்தை மீட்டெடுப்பதே மருத்துவம்.”

மூட்டு வலிக்கு அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வா? உண்மை என்ன சொல்கிறது? ✨ மூட்டு வலி இன்று பலருக்கும் வாழ்க்கைத் தரத்தை குறைக்கும் ஒ...