About Me

My photo
Vellore, Tamil Nadu , India
Showing posts with label ஆவாரம்பூ... (Avarampoo) (Cassia Auriculata.). Show all posts
Showing posts with label ஆவாரம்பூ... (Avarampoo) (Cassia Auriculata.). Show all posts

Friday, August 6, 2021

''ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ"

 ''ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ"

        நீரிழிவைக் குணப்படுத்த வல்லது ஆவாரை. ஆவாரையைத் தக்கபடி பயன்படுத்தும் நோயாளிகளுக்கு நீரிழிவினால் சாவு என்பதே இல்லை என்ற வகையில் ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ என்ற சொல் வழக்கு வழி வழியாய் இருந்து வருகிறது.




(Click this image)

           ஆவாரம்பூ கொன்றை, நாவற்கொட்டை, கடலழிஞ்சில், கோஷ்டம், மருதம் பட்டை, முத்தக்காசு (கோரைக்கிழங்கு) இவைகளை சமஅளவுஎடுத்து ஒன்றிரண்டாக இடித்துப் பொடித்து வைத்துக்கொண்டு 200 மி.லி. தண்ணீரில் 1 டீஸ்பூன் அளவு பொடியைப் போட்டு சில மணி நேரம் ஊறவிட்டு 100 மி லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி ஆறவிட்டு குடிக்க வேண்டும். காலை மாலை உணவுக்கு முன்பாக தொடர்ந்து சாப்பிட்டு வரவேண்டும். ஒவ்வொரு முறையும் புதியதாகத் தயாரித்து சாப்பிட வேண்டும். தொடர்ந்து இவ்வாறு சாப்பிட்டு வர நீரிழிவு நோய் எத்த நிலையிலும் குணமாகும்.

(Click this image)

        இதே போன்று ஆவாரஞ் செடியின் எல்லா பாகங்களையும் நிழலில் உலர்த்தி குடிநீரிட்டுக் காய்ச்சி வடிகட்டி காலை மாலை குடித்து வர நீரிழிவு நோய் குணமாகும்.

                ஆவாரம்பூ, அதன் இளந்தளிர் இலைகள் - நிழலினுர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு குடிநீர் (சுஷாயம்) தயார் செய்து அத்துடன் பாவ் சேர்த்து தேநீர் போன்று சாப்பிடும் வழக்கம் இன்றளவும் இலங்கையில் உள்ளது. இதனால் சர்க்கரை நோய், உடல் வெப்பம். இதய நோய்கள், தரம்புத் தளர்ச்சி, மார்பு படபடப்பு குணமாகிறது. ஆவாரம்பூவின் மொட்டுக்களைப் பறித்து மோர் ஊற்றி உப்பிட்டு ஊற வைத்து வெயிலிலிட்டு உலர்த்தி வற்றல் செய்து வைத்துக் கொண்டு இதனை வேண்டும்போது அப்பளம், வற்றல் பொரிப்பது போன்று எண்ணெயில் பொரித்து சாப்பிட சுவையாக இருப்பதுடன் தீரிழிவு நோயினர்க்கு நல்ல உணவும், மருந்தும் ஆகும்.

        ஆவாரம்பூ மருந்தாக மட்டுமின்றி அழகு சாதன (Cosmetic) மாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. நாம் அன்றாடம் குளிக்க பயன்படுத்தும் ஸ்நானபொடி (Bath Powder) யுடன் இதனையும் சேர்த்து பயன்படுத்திவர உடல் வறட்சி, தோல் சுருக்கம் நீங்கி தோல் நல்ல நிறமும், பளபளப்பும் அடையும். அத்துடன் இதனால் உடலில் வீசும் கற்றாழை நாற்றம் நீங்கும்.

(Click this image)
        ஆவாரம்பூ மற்றும் இலைகள் சேர்த்து நிழலில் உலர்த்தி அரைத்தெடுத்த பொடியில் தயாரித்த கஷாயத்தை யோனியுள் தினசரி காமல, இரவு பிச்சு (Douch) செய்து வர பெரும்பாடு, வெள்ளைப்படுதல் நோய் குணமாகும், ஆவாரம் பட்டையிலுள்ள டேனின் (Tanin) என்ற சத்தும், துவர்ப்பு சத்தும் மேற்கண்ட கருப்பை சம்பந்தமான நோய்களைத் தீர்க்க வல்லவை களாகத் திகழ்கின்றன. இதனாலேயே இதன் குச்சிகளை பல்துலக்க (Tooth Brush) பயன்படுத்துகின்றனர்.

        ஆவாரம் பிசினும் நல்ல மருந்தே நீரிழிவு நோய்க்குரிய குடிநீர்களில் இப்பிசின் தவறாமல் சேர்க்கப்படுகிறது. ஆவாரம் விதையும் நல்ல மருந்தே. கண் சம்பந்தமான எல்லா நோய்களுக்கும் சிறந்த மருந்து விதையை நீரில் இழைத்து தினசரி இரவு உறங்கச் செல்லுமுன் கண் இரைப்பை மீது பற்றிட்டு வர சாதாரணமாக கண்களில் வரக்கூடிய பொதுவான நோய்கள் குணமாகும்.

அடுத்த பதிவில் வேறொரு மூலிகை பற்றி பார்ப்போம்.

மேலும் மூலிகைகள் மற்றும் சித்த மருந்துகளை பற்றிய உங்களது சந்தேகங்களுக்கும், ஆலோசனைக்கும் தொடர்பு கொள்ளவும்…


ஆதிரா 
Consultant for Holistic Wellness
Mayura Wellness Clinic
(Healing solutions for General Wellness)
97862 25999

நான் உங்கள் ஆதிரா 
எனும் 
மயூரா சுதாகர் 

        மக்களிடையே இறைசக்தியை பற்றியும், இயற்கையைப் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தி, அதன் வாயிலாக அவர்களின் உடல், மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதை எனது வாழ்வின் விருப்பமாகக் கொண்டுள்ளேன். அதற்கான பல்வேறு பணிகளில் நான் என்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளேன்.  வாழ்வியல் முறைகளையும், வாழ்வியல் முறையின் தத்துவங்களையும், இறைவழி மருத்துவ சிகிச்சை முறைகளையும் கற்றுக் கொடுப்பது மற்றும் அது சார்ந்த மருத்துவக் கருத்துக்களை பல்வேறு சமூக ஊடகங்கள் மூலமும், நேரடியாக மக்களை சந்தித்தும் எடுத்துரைப்பது போன்ற பணிகள் அவைகளில் முக்கியமானவை.






“மூட்டு அகற்றுவது தீர்வு அல்ல; அதன் இயற்கை இயக்கத்தை மீட்டெடுப்பதே மருத்துவம்.”

மூட்டு வலிக்கு அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வா? உண்மை என்ன சொல்கிறது? ✨ மூட்டு வலி இன்று பலருக்கும் வாழ்க்கைத் தரத்தை குறைக்கும் ஒ...