About Me

My photo
Vellore, Tamil Nadu , India
Showing posts with label கோவைக்காய்... (Kovakkai ) (Coccinia). Show all posts
Showing posts with label கோவைக்காய்... (Kovakkai ) (Coccinia). Show all posts

Saturday, August 7, 2021

சர்க்கரை நோய்க்கு இயற்கையின் வரபிரசாதம் கோவைக்காய்...

      “நீரிழிவு நோய்க்கு கோவைக்காய் சிறந்த மருந்தென நிரூபிக்கப்பட்டுள்ளது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு இயற்கை அளித்த வரப்பிரசாதம் எனலாம். மிக எளிதில் கிளைகோசூரியா என்னும் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைத்து நிலைப்படுத்துவதால் இதற்கு இன்சுலினுக்கான இந்திய மாற்று (Indian Substitute for insu lin) என்ற பெயர் வந்தது."



            சர்க்கரை வியாதி என்றதுமே அஞ்சி நடுங்கும் நாம் பாகற்காயைத் தேடி ஓடுகிறோம். மூக்கைப் பிடித்துக் கொண்டு காலை வெறும் வயிற்றில் பாகற்காய்ச் சாற்றினை மடக், மடக்கென்று குடிக்கின்றோம். பிறகு பாகற்காய் வத்தல், பாகற்காய் பொரியல். பாகற்காய் சூரணம் என்று பாகற்காய் புராணம்தான். முடிவு. சர்க்கரை நோய் நம்முடன் கண்ணாமூச்சி ஆடுகிறது. ஆனால் சர்க்கரை வியாதிக்கு பாகற்காயை விட அதிக பயனுள்ளதும், விலை மலிவானதுமாள ஒரு காயை நாம் எண்ணிப் பார்க்க மறந்து விடுகிறோம். அதுதான் கோவைக்காய். தவிர, முலிகை வகைகளிலேயே சர்க்கரை நோய்க்கு நேர் சரியான மருந்து உண்டென்றால் அது கோவைக்காய்தான்! கோவைக்காயைப் பற்றி நீண்ட நெடுங்காலமாக நிகழ்ந்து வரும் பல்வேறு ஆராய்ச்சிகளின் முடிவுகள் நீரிழிவு நோய்க்கு கோவைக்காய் சிறந்த மருந்தென நிரூபிக்கப்பட்டுள்ளது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு இயற்கை அளித்த வரப்பிரசாதம் எனலாம் மிக எளிதில் கிளைகோசூரியா என்னும் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைத்து நிலைப்படுத்துவதால் இதற்கு 'இன்சுலினுக்கான இந்திய மாற்று' (Indian Substitute for Insulini). என்ற பெயர் வந்தது. வழக்கமாக இன்சுலின் மருந்து ஒன்றே இதற்கு பயன்படுத்தப்பட்டு வந்ததால் கோவைக்காய்க்கு இப்பெயர் வந்தது. கோலைப் பழத்தில் உள்ள Glucokemi என்ற சத்துப் பொருள் ரத்தத்தில் அதிகப்படியான சர்க்கரையின் அளவைக் குறைத்து உடலுக்குத் தேவையான இயல்பு நிலைக்கு கொண்டு வருகிறது.

    கோவைக்காய் கொடியில் காய்ப்பது. இக்கொடி வேலியோரம் தன்னிச்சையாகப் படரும் வகையைச் சார்ந்தது. இதன் காய் நம் விரல் பருமனில் சுமார் 1 அங்குலம் முதல் 2 அங்குலம் வரை பச்சை நிறத்தில் இருக்கும் அதில் வெள்ளை நிறத்தில் அரிசி போன்ற சிறிய புள்ளிகள் காணப்படும். காய் பழுத்ததும் நல்ல சிவப்பு நிறமாக மாறிவிடும். காயை பள்ளி மாணவர்கள் எழுதும் சிலேட்டுப் பலகையை துடைத்துப் பளபளப்பாக்க பயன்படுத்துவார்கள். பழம், கிளிகளுக்கு விரும்பி உண்ணும் உணவாகப் பயன்படுகிறது. இதனை தாவரவியலார். *செப்லெண்டிரியா இண்டிகா' மற்றும் 'கொக்சினா இண்டிகா' என்ற பெயர்களிலும்  அழைப்பர்.

            கோவையின் இலை, பூ. காய், கனி, வேர், பட்டை அனைத்தும் மருத்துவ பயன்கள் நிறைந்தது. கோவையில் இசிவசுற்றி, கோழையகற்றி ஆகிய செய்கைகள் நிறைந்துள்ளது இலைச்சாறு நம் உடலில் உள்ள சுரப்பிகளின் வீக்கத்தையும். தாபிதத்தையும் குணப்படுத்துகிறது. சோரியாசிஸ் என்கிற தோல் நோயைக் குணப்படுத்த வல்லதாக இருக்கிறது. தோலில் உண்டாகும் வெண் படைகளுக்கு இலைச்சாற்றை மேலே பூசி வர மறைந்து குணமளிக்கிறது. உள்ளுக்கு கொடுக்க மேக நோய்கள், வெட்டை நோய்கள் குணமாகின்றன; கடுமையான கரத்தின் போது எழும் உடற்குட்டைத் தணிக்க கோவையிலைச் சாற்றை மேலே பூச குணம் காணலாம். வியர்வை உண்டாகி உடற்சூடு தணித்து சுரம் குறையக் காணலாம். இலையையும் தண்டையும் தண்ணீரிலிட்டுக் கொதிக்கவைத்துக் குடிநீரை வடிகட்டி (கஷாயம்) குடித்துவர நுரையீரலில் இறுகிய சுபம் இளகி வெளியேறி சுகமான சுவாசம் கிடைக்கும். இலையை நல்லெண்ணையில் வேக வைத்து எண்ணெயை வடிகட்டி நாட்பட்ட விரணங்கள், ஆறாத விரணங்கள், படர்தாமரை, கரப்பான். சோரியாசிஸ் போன்ற கடுமையான தோல் நோய்களுக்குத் தடவிவர குணமாகக் காணலாம்.

        கோவைப் பழத்தை இதர பழங்கள் போல் வாயிலிட்டுச் சுவைத்துச் சாப்பிட வாய்ப்புண், நாக்குப்புண் ஆகியவை குணமாகிவிடுகின்றன. இக்கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போன்று நீரிழிவு நோயாளிகள் இக்காயை எந்த வகையிலாவது தினசரி பயன்படுத்திவர நீரிழிவு நோயில் இருந்து அறவே விடுபடலாம். கோவைக்காய் அதிகமாகக் கிடைக்கும் காலங்களில் சிறு சிறு துண்டுகளாக்கி உப்பிட்ட மோரில் ஊறவிட்டு. வெயிலில் வைத்து வற்றலாக்கி, நல்லெண்ணெயில் பொரித்துச் சாப்பிட சுவையாக இருப்பதுடன் மேற்சொன்ன பயன்களைப் பெறலாம்.

        நீரிழிவு (சர்க்கரை) நோயாளிகள் உணவுடன் தினசரி கோவைக்காயைப் பயன்படுத்தி பலனடையலாம்.

அடுத்த பதிவில் வேறொரு மூலிகை பற்றி பார்ப்போம்.

மேலும் மூலிகைகள் மற்றும் சித்த மருந்துகளை பற்றிய உங்களது சந்தேகங்களுக்கும், ஆலோசனைக்கும் தொடர்பு கொள்ளவும்…


ஆதிரா 
Consultant for Holistic Wellness
Mayura Wellness Clinic
(Healing solutions for General Wellness)
97862 25999

நான் உங்கள் ஆதிரா 
எனும் 
மயூரா சுதாகர் 

        மக்களிடையே இறைசக்தியை பற்றியும், இயற்கையைப் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தி, அதன் வாயிலாக அவர்களின் உடல், மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதை எனது வாழ்வின் விருப்பமாகக் கொண்டுள்ளேன். அதற்கான பல்வேறு பணிகளில் நான் என்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளேன்.  வாழ்வியல் முறைகளையும், வாழ்வியல் முறையின் தத்துவங்களையும், இறைவழி மருத்துவ சிகிச்சை முறைகளையும் கற்றுக் கொடுப்பது மற்றும் அது சார்ந்த மருத்துவக் கருத்துக்களை பல்வேறு சமூக ஊடகங்கள் மூலமும், நேரடியாக மக்களை சந்தித்தும் எடுத்துரைப்பது போன்ற பணிகள் அவைகளில் முக்கியமானவை.


“மூட்டு அகற்றுவது தீர்வு அல்ல; அதன் இயற்கை இயக்கத்தை மீட்டெடுப்பதே மருத்துவம்.”

மூட்டு வலிக்கு அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வா? உண்மை என்ன சொல்கிறது? ✨ மூட்டு வலி இன்று பலருக்கும் வாழ்க்கைத் தரத்தை குறைக்கும் ஒ...