'அறுகம்புல் வாத பித்த ஐயமோ டீளை சிறுக
அறுக்குமின்னுஞ் செப்ப - அறிவுதரும் கண்ணோ யொடுதலைநோய்
கண்புகையி ரத்தபித்தம் உண்ணோ யொழிக்கு முரை''
நமது நாட்டில் இப்பொழுது மருத்துவத்தைப் பற்றிய விழிப் புணர்வு மக்களிடையே பரவலாகத் தோன்றியுள்ளது. எளிமையான பாதுகாப்பான பின் விளை வில்லாத - பாரம்பரிய மருத்துவ மான சித்த மருத்துவத்தைப் பற்றித் தெரிந்து கொள்வதிலும் பயன்படுத்துவதிலும் நம் மக்கள் முனைப்புக் காட்டி வருகின்றனர். இது ஒரு நல்ல அறிகுறியே.
சித்த மருத்துவத்தில் மூலிகை- ரசம் - பாடாணங்கள் - தாது வர்க்கங்கள் - காய கற்ப முறைகள் கட்டு களங்கு வகைகள் யோகம் - பிராணயாமம் ஞான மார்க்கம் என்று பல்வேறு இருப்பினும்
எக்காலத்திற்கும் - எல்லா வயதினருக்கும் எந்தச் சூழ்நிலைக்கும் ஏற்ற முறையாக மூலிகை மருத்துவமாம். சித்த மருத்துவம் சிறந்து விளங்குகின்றது.
சித்த மருத்துவத்தில் மூலிகைகள் மூலம் நோயைக் குணப்படுத்தில் கொள்ளவும் முடியும். நரை, திரை, மூப்பு இன்றி உடலைப் பாதுகாத்துக் கொள்ளவும் முடியும்! இந்த முறைக்குக் ''காய கற்ப முறை” என்று பெயர்.
அறுகம்புல் தரையில் படரும் கொடியிளத்தைச் சார்ந்தது. இது எப்படிப்பட்ட வறட்சியிலும் பஞ்சத்திலும் கூடச் செழித்து வளரும். இது ஒன்றே இந்தப் புல்லின் பலனுக்குக் கண் கண்ட சாட்சி. இளைத்த உடம்பைத் தேற்ற பாதுகாக்க இது ஓர் அற்புத மூலிகை. இது ஆங்கிலத்தில் (Cynodon dactylon) என்றும் சமஸ்கிருதத்தில் "தூர்வை'" என்றும் அழைக்கப்படுகிறது.
அறுகம்புல்லில் நார்ச் சத்து, புரதச் சத்து. சாம்பல் சத்து, நைட்ரஜன், சுண்ணாம்புச் சத்து, பொட்டாசியம். கந்தகச் சத்து ஆகியவை உள்ளன.
இப்பொழுது பரவலாக அறுகம்புல் சாறு மற்றும் அறுகம்புல் குடிநீர் (கஷாயம்) எல்லோராலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அறுகம்புல் சாறு குடிப்பதால் வயிற்றில் உள்ள அதிகப்படியான அமிலச் சத்து (Hyper acidity) கட்டுப்படுத்தப்படுகின்றது. வயிற்றுப் பொருமல், வாய்வு, அஜீரணம் ஆகியவற்றை நீக்கிப் பசியைத் தூண்டுகிறது. மலச்சிக்கலை நீக்குகிறது: போதைப் பொருள் உட்கொள்பவர்களுக்கு அதனால் ஏற்படக் கூடிய நச்சுத்தன்மையை மாற்றி, போதைப் பொருளைப் பயன்படுத்தும். எண்ணத்தை அறவே ஒழிக்கின்றது.
இரத்தத்தில் ஹீமோ குளோபின் எனப்படும் இரத்தச் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கத் தேவையான குளோரபில் பிராண வாயு - புரதம் - தாது. உப்புக்கள் ஆகியவை இதில் ஏரானமாக அடங்கியுள்ளன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகரிக்கின்றது. இரத்தத்தில் ஏற்படக் கூடிய புற்று நோய் (Leukemia) நோயாளிகளுக்கு அளிக்கப் பெறும் மருத்துவத்தோடு அறுகம்புல் சாறு தினசரி சேர்த்துக் கொடுத்து வர அதற்கு நல்ல பயன் கிடைப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
அறுகம்புல் சாறு தினசரி சாப்பிடுவதால் எந்த விதத்திலும் எந்தக் கெடுதியும் வர வாய்ப்பில்லை. மாறாக ஊளைச் சதையும் தொந்தியும் குறைந்து உடலுக்குச் சுறுசுறுப்பைக் கொடுக்கின்றது. பல் ஈறுகளில் ஏற்படும் இரத்தக் கசிவைத் தடுத்து நிறுத்துகிறது. வாய் துர்நாற்றத்தைப் போக்க இதை வாயிலிட்டு மென்று விரலால் பல் துலக்கி, ஈறுகளை மசாஜ் செய்து வாய் கொப்பளிக்கக் குணமாகும் பல்லுக்கு உறுதியும் ஏற்படும்! தீரிழிவு மாரடைப்பு - மற்றும் தோல் சம்பந்தமான நோய் உள்ளவர்களுக்கும் அறுகம்புல் ஒரு சிறந்த நோய் நீக்கி: நிவாரணி அருகம்புல் தைலம் ("தூர்வாதித் தைலம்)" இதற்கு உதவும் மிகச் சிறந்த மருந்து.
அறுகம்புல் சாறு தினசரி சாப்பிடுவதால் மோ பிலியா என்ற நோய்க்கு மருந்தாகிறது. இரத்தப் போக்கை நிறுத்த உதவி புரிகிறது. காயங்கள் விரைவில் ஆறும். ஆஸ்த்துமா - ஈரல் நோய்கள் இரத்த அழுதத நோய் ஆகியவைகளுக்கும் இது மிகச் சிறந்த மருந்து.
பச்சை அருகம்புல்லை நன்கு கழுவி சிறு சிறு துண்டுகளாக்கித் தண்ணீ விட்டு அரைத்து வடிகட்டி தினசரி காலை 100 மில்லி லிட்டர் வீதம் குடிக்கலாம். அல்லது அறுகம்புல்லுடன் நிறைய தண்ணீர் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைத்து புல்லின் நிறம் மாறும்போது இறக்கி வடிகட்டி சிறிது மிளகுத் தூள் சேர்த்துப் பருகலாம்.
அறுகம்புல் சாற்றைத் தினசரி அருந்தினால்
தோலில் ஏற்படும் அரிப்பு தடிப்பு அலர்ஜி நீங்கும். மற்றும் நாட்பட்ட வெள்ளை சிறுநீர் சம்பந்தமான நோய்கள் - சிறுநீர் எரிச்சல் . நீரடைப்பு . நீர்க் கடுப்பு ஆகியன குணமாகும் அருகம்புல்லுடன் மஞ்சள் சேர்த்தரைத்துச் சொறி, சிரங்குக்குப் பூசக் குணமாகும். சாறுடன் தேன் அல்லது நீராகாரம் சேர்த்துப் பருகலாம். இது உடலுக்கு நல்லது.
இன்னும் அறிவோம்...
அடுத்த பதிவில் வேறொரு மூலிகை பற்றி பார்ப்போம்.
மேலும் மூலிகைகள் மற்றும் சித்த மருந்துகளை பற்றிய உங்களது சந்தேகங்களுக்கும், ஆலோசனைக்கும் தொடர்பு கொள்ளவும்…





மிகவும் பயனுள்ள தகவல் நன்றி 🙏
ReplyDeleteநன்றிங்க...
Delete