About Me

My photo
Vellore, Tamil Nadu , India
Showing posts with label செம்பருத்தி… (Sembaruthi) (Hibiscus rosa-sinensis). Show all posts
Showing posts with label செம்பருத்தி… (Sembaruthi) (Hibiscus rosa-sinensis). Show all posts

Monday, August 9, 2021

செம்பருத்தி… மகாலட்சுமியை வழிபட செம்பரத்தம் பூ உகந்தது. என்றும், இதில் தங்கத்திற்கு நிகரான சத்து இருப்பதாகவும் நமது புரான நூல்களும், மருத்துவ நூல்களும் குறிப்பிடுகின்றன.

     'செம்பரத்தம் பூவை செம்பருத்தி என்றும் சொல்வார்கள். ஆயுர்வேதத்தில் சமஸ்கிருதத்தில் ஜபாபத்திரி என்று அழைப்பார்கள். ஆங்கிலத்தில் ஷு பிளவர்“ என்றும் தாவரவியலில் (Hibiscus rosa-sinensis) என்றும் அழைப்பார்கள். இது வீடுகளில் அழகுக்காக வளாக்கப்படும் செடியினமாகும். கடவுள் பூஜைக்கு உகந்த முக்கியமான மலர்களில் இதுவும் ஒன்று மகாலட்சுமியை வழிபட செம்பரத்தம் பூ உகந்தது. என்றும், இதில் தங்கத்திற்கு நிகரான சத்து இருப்பதாகவும் நமது புரான நூல்களும், மருத்துவ நூல்களும் குறிப்பிடுகின்றன.



            'சித்த மருத்துவத்தில் செம்பரத்தம் முக்கியமாகப் பயன் படுத்தப்படுகின்றது. பூவிற்கு இனிப்பும், துவர்ப்பும் கலந்த சுவையுண்டு. இது குளிர்ச்சியுண்டாக்கும் செய்கையுடையது. அது போக மலமிளக்கி ஆண்மைபெருக்கி, ருதுவுண்டாக்கி, வறட்சியகற்றி, உள்ளழலாற்றி ஆகிய செய்கைகளுடையது'.

பொதுவாக இதை எந்தெந்த வியாதிகளுக்கு பயன்படுத்தலாம்?

        உடல் வெப்பத்தைத் தணிக்கவும். ஆண்மையை அதிகரிக்கச் செய்யவும், நீர்எரிச்சல், நீர்க்கடுப்பு, மார்புவலி ஆகியவற்றை குணப்படுத்தி இருதயத்திற்கு வலுவைத் தரக்கூடியதும் ஆகும். மேலும் தலைமுடி செழித்து வளர இது அற்புதமான மருந்து. இதனை சேர்க்காத கூந்தல் தைலங்களே (Hair oil) இல்லை எனலாம். தாமதித்த மாதவிடாய், ஒழுங்கற்ற மாதவிடாய் போன்ற மாதவிடாய்த் தொல்லையுள்ள பெண்கள் செம்பரத்தம் பூ இதழ்கள் 50 கிராம் எடுத்து அரைத்து விழுதாக்கி தினசரி காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து சாப்பிட்டுவர ஒரு சில மாதங்களில் மாதவிடாய் ஒழுங்காக வரக்காணலாம்.

        'முக்கியமாக பெண்களுக்கு உண்டாகும் பெரும்பாடு. நாட்பட்ட வெள்ளைப்படுதல். உடல் அனல், சிறுநீர் எரிச்சல், ரத்த மேகம், இருதய நோய்கள், உயர் ரத்த அழுத்த நோய் போன்றவற்றிற்கு இது நல்ல மருந்தாகும்.

        இந்த வியாதிகளுக்கு செம்பரத்தம் பூவை எப்படிப் பயன்படுத்தினால் பலன் கிடைக்கும் பார்கலாம் வாருங்கள்

            "செம்பரத்தம் பூவின் கேசரம்-காம்பு இவைகளை நீக்கி இதழ்களை மட்டும் சேகரித்து 100 கிராம் பூ இதழ்களுக்கு 1 லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து அடுப்பிலிட்டு வேக வைத்து, பிசைந்து அந்நீரை வடிகட்டி தேவையான அளவு சர்க்கரை சேர்த்துக் கரைத்து மீண்டும் அடுப்பிலேற்றிக் காய்ச்சி பாகுபதம் வந்ததும் இறக்கி ஆறவிட்டு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இது செம்பரத்தம் பூ மணப்பாகு எனப்படும். நாட்டு வழக்கில் செம்பரத்தம் பூ சர்பத் என்றும் சொல்வார்கள். இதனைவேளைக்கு அரை அவுன்சு வீதம் சிறிது தண்ணீரில் கலந்து தினசரி 2 அல்லது 3 முறை சாப்பிட மிகவும் சுவையாக இருப்பதுடன்  முன் சொன்ன அனைத்து வியாதிகளையும் குணப்படுத்தும், இருதய வியாதிகளைக் குணமாக்கி இருதயத்திற்கு பலம் தரும். இருதயத்திற்கு ரத்தத்தைக் கொண்டு செல்லும்போது ரத்த நாளங்களில் கொழுப்பு படிவங்கள் ஏற்படாமல் பாதுகாக்கும். மேலும் சிறுநீர் எரிச்சல், வெள்ளைபடுதல். ரத்தமேகம் போன்ற சிறுநீர் சம்மந்தமான நோய்களையும் குணப்படுத்தும். பெரும்பாடு எனும் மாதாந்திர அதிக உதிரப்போக்கினால் அவதியுறும் பெண்கள் இதனை தினசரி தொடர்ந்து தவறாமல் சாப்பிட்டு வர குணமாகும்'. இதற்கெல்லாம் செம்பரத்தம் பூ மணப்பாகு தான் செய்து சாப்பிட வேண்டுமென்பதில்லை. செம்பரத்தம் பூ இதழ்களை நீரிலிட்டுக் காய்ச்சி வடிகட்டிக் குடிக்கலாம். அல்லது அக்குடிநீருடன் பால், சர்க்கரை சிறிது ஓமம் சேர்த்து சாப்பிட்டு வரலாம். அல்லது செம்பரத்தம் பூ இதழ்களை நிழலில் உலர்த்தி தூள் செய்து வைத்துக்கொண்டு சம அளவு தேயிலைத்தூளில் கலந்து தேநீர் செய்தும் பயன்படுத்தலாம்'.

        'செம்பரத்தம் பூவை தலைமுடி சம்பந்தமான நோய்களுக்கு பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்

               'செம்பரத்தம் பூவை இடித்துப் பிழிந்த சாற்றுக்கு சமஅளவு தேங்காய் எண்ணெய் கலந்து நீர்சேர்த்து கண்டக்காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொண்டு அத்தையத்தை தினசரி தலைக்கு தேய்த்துவர உடல் வெப்பம், கண் எரிச்சல். கண் சிவப்பு குணமாகும். மூளை குளிர்ச்சியடையும். தலைப்பொடுகு குணமாகும். தலைமுடி கொட்டுதல் நின்று, தலைமுடி கருமையாக செழித்து வளரும் மற்றும் இதை வேறுவிதமாகவும் பயன்படுத்தலாம். நம் வீடுகளில் பல்வேறு மூலிகைகளைக் கொண்டு தலைமுடி தைலம் காய்ச்சுவோம். அத்தைலத்தைக் காய்ச்சி அடுப்பிலிருந்து இறக்கும் போது அதில் குறிப்பிட்ட அளவு செம்பரத்தம் பூ இதழ்களைப் போட்டு இறக்க அத்தைலம் மிருந்த பயனைத்தரும். அதுமட்டுமல்லாமல் செம்பரத்தம் பூ நிறைய பூக்கும் காலங்களில் அவைகளை சேகரித்து நிழலில் உலர்த்தி வைத்துக்கொண்டு வேண்டும்போது பயன்படுத்திக் கொள்ளலாம். இதை நாம் தலைக்குத் தேய்த்து குளிக்கும் சிகைக்காய் பொடி உடம்புக்குத் தேய்த்துக்குளிக்கும் குளியல் பொடி போன்றவற்றிலும் பயன்படுத்த நல்ல பலனைக் கொடுக்கும்  'நம்மால் முடியும்.

இதையெல்லாம் செஞ்சி வைத்துக்கொள்ளலாம். 

முடியாதவங்க என்னபண்ணலாம்?"

        மருந்து கடைகளிலேயே செம்பரத்தம் பூவைக் கொண்டு செய்த தைலம் கிடைக்கிறது. செம்பரத்தியாதி தைலம் அல்லது ஜபாபத்திரியாதி தைலம் என்ற பெயர்களில் கிடைக்கிறது இத்தைலத்தை மேற்பூச்சாக உபயோகிக்க உடலில் ஏற்படும் அரிப்பு தடிப்பு, சொரி, சிரங்கு, கரப்பான் போன்ற தோல் நோய்கள், தலையில் ஏற்படும் பொடுகு போன்றவை குணமாகும். முக்கியமாக இளஞ்சிறார்களுக்கு தலையில் ஏற்படும் புண். சொரி, சிரங்கு, கரப்பான் இவைகள் விரைவில் குணமாகும்".

        கடைசியாக செம்பரத்தம் பூ மட்டும்தான் மருந்தாகப் பயனாகிறதா? அல்லது அச்செடியின் இதர பாகங்களும் மருந்தாகிறதா என்பதை பார்க்கலாம்?' 

        செம்பரத்தம் இலைகளைக் குடிநீரிலிட்டுக் குடித்து வர வெள்ளைபடுதல், சிறுநீர் எரிச்சல் குணமாகும். பூவின் மொட்டுகளை நிழலில் உலர்த்தி காம்புநீக்கி இடித்து சூரணம் செய்து வைத்துக்கொண்டு வேளைக்கு அரை ஸ்பூன் வீதம் தினசரி காலை, மாலை இருவேளை பசும்பாலுடன் சாப்பிட்டுவர ஆண்மை பெருகும்' 'அடேங்கப்பா. செம்பரத்தம் பூச்செடிக்கு இவ்வளவு மருத்துவ பயன்கள் இருக்கிறதா! இதெல்லாம் இதுநாள் வரை எனக்குத் தெரியாமற் போயிற்றே. ஏதோ வீடுகளில் அழகுக்காகவும், கண்கவரும் விதவிதமான வண்ணப் பூக்களுக்காகவும்தான் இதனை வளர்க்கலாம் என எண்ணியிருந்தேன். இனிமேல் வீட்டில் செம்பருத்தி செடி நிறைய நட்டு பூக்கின்ற பூவையெல்லாம் சேகரித்து நிழலில் உலர்த்தி வைத்துக்கொண்டு தேவையான போது பயன்படுத்திக் கொள்ளுங்கள், அதோடு மற்றவர்களுக்கும் இலவசமாகத் தந்து உதவுங்கள்.

உங்களின்

அடுத்த பதிவில் வேறொரு மூலிகை பற்றி பார்ப்போம்.

மேலும் மூலிகைகள் மற்றும் சித்த மருந்துகளை பற்றிய உங்களது சந்தேகங்களுக்கும், ஆலோசனைக்கும் தொடர்பு கொள்ளவும்

ஆதிரா 
Consultant for Holistic Wellness
Mayura Wellness Clinic
(Healing solutions for General Wellness)
97862 25999. 

நான் உங்கள் ஆதிரா 
எனும்
மயூரா சுதாகர் 

          மக்களிடையே இறைசக்தியை பற்றியும், இயற்கையைப் பற்றியுமான விழிப்புணர்வை ஏற்படுத்தி, அதன் வாயிலாக அவர்களின் உடல், மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதை எனது வாழ்வின் விருப்பமாகக் கொண்டுள்ளேன். அதற்கான பல்வேறு பணிகளில் நான் என்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளேன்.  வாழ்வியல் முறைகளையும்,, வாழ்வியல் முறையின் தத்துவங்களையும், இறைவழி மருத்துவ சிகிச்சை முறைகளையும் கற்றுக்கொடுப்பது மற்றும் அது சார்ந்த மருத்துவக் கருத்துக்களை பல்வேறு சமூக ஊடகங்கள் மூலமும், நேரடியாக மக்களை சந்தித்தும் எடுத்துரைப்பது போன்ற பணிகள் அவைகளில் முக்கியமானவை.










“மூட்டு அகற்றுவது தீர்வு அல்ல; அதன் இயற்கை இயக்கத்தை மீட்டெடுப்பதே மருத்துவம்.”

மூட்டு வலிக்கு அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வா? உண்மை என்ன சொல்கிறது? ✨ மூட்டு வலி இன்று பலருக்கும் வாழ்க்கைத் தரத்தை குறைக்கும் ஒ...