About Me

My photo
Vellore, Tamil Nadu , India

Monday, August 23, 2021

ஆதாரம் இல்லாமல் நான் வாழக்கூடும்… அன்பே… அன்பே…

ஆதாரம் இல்லாமல் நான் வாழக்கூடும்... அன்பே... அன்பே...

            தாவரங்கள் தோன்ற, உயிர் வாழ மண், நீர் நீ. காற்று ஆகாயம் என்ற ஐம்பூதங்களின் சேர்க்கை அவசியம் தேவை, ஆனால் இந் ஐம்பூதங்களின் சேர்க்கை இல்லாமலேயே தோன்றும் தாவரங்களும் இருக்கத்தான் செய்கின்றன. அதாவது தாவரங்கள் மண்ணில் வேருதிை. பூமியிலிருந்து நீரைப்பெற்று, சூரிய வெளிச்சம் பட்டுதான் வளர்ந்து பூ பூத்து காய்க்க வேண்டுமென்பதில்லை. எந்த வகையிலும் ஊன்றாமல், பூமியில் படாமல், வெறும் காற்றை சுவாசித்தே காற்றிலிருக்கும் ஈரத்தைப்பெற்றே, வளர்ந்து கொடியாகி இலை தளிர்விட்டு பூ பூத்து காய்க்கும் செடி கொடியினமும் உண்டு.




“என்னது பூமியில் ஊன்றாமல் கொடியா? ஆச்சரியமாக இருக்கிறதே. பூமியில் இல்லையென்றால் அந்த தாவரம் ஆகாசத்திலா விளையும் மண்ணில் வேரூன்றாமல், சூரிய வெப்பமில்லாமல், நீர்ச்சத்து பெறாமல் எப்படி வளர முடியும்? விந்தைதான். அப்படி என்னத் தாவரம் அது பார்க்கலாம் வாருங்கள்…



            "அந்தத் தாவரம் உங்களுக்கும் தெரிந்ததுதான். சில வீடுகளில் பார்த்திருப்பீர்கள். வீட்டின் முகப்பில் உயரத்தில் ஒரு கிழங்கை நூலில் கட்டி தொங்கவிட்டிருப்பார்கள். அந்தரத்தில் தொங்கியபடியே அந்த கிழங்கிலிருந்து தளிர்விட்டு கொடியாக படர ஆரம்பித்து அந்தரத்திலேயே வளர்ந்து கொண்டிருக்கும்." ''ஆமாம். நான் கூட பார்த்திருக்கிறேன். ஏதோ அழகுக்காக அதை கட்டி தொங்க விட்டிருக்கிறார்கள் என்றல்லவா இதுநாள் வரை எண்ணிக் கொண்டிருக்கிருப்பீர்கள்."

 இல்லை. அது அழகுக்காக மட்டுமில்லை. விஷ ஐந்துக்களான பாம்பு, தேள், பூரான் போன்றவை இது வளரும் வீடுகளில் வரவே வராது. முக்கியமாக பாம்புகளுக்கு இந்த கொடியின் வாடை பிடிக்கவே பிடிக்காது. ஓடிவிடும். மேலும் அப்படி யாருக்காவது முன் சொன்னபடி பாம்பு போன்றவற்றின் கடியினால் தீங்கு ஏற்பட்டால் அந்த விஷத்தை முறித்து "துட்டவிடம் பாண்டு வெப்பு சூலைவா தங்கிரந்தி குட்டம் அரிப்பக்கி கோண்குடல் நோய் - கெட்டகண்ட மாலைபோம் கொல்லன்கோ வைக்கிழங்கால் முத்தோட வேலைபோம் பாரில் விளம்பு"

            அரையாப்புக்கட்டி (PUBO), நாட்பட்ட வெள்ளை (Chronic Leucorrhoea), கொருக்குநோய், நாட்பட்ட ஆறாத விரணங்கள் ஆகியவை நீங்கும். எவ்வளவு கொடிய நஞ்சுள்ள நாகமாயினும் இக்கொடியைக் கண்டால் நடுங்கி ஓடுமென்பர்.

                    கண்டமாலை (Tubercular Adenitis) மற்றும் நஞ்சு முறிவுக்கு இக்கிழங்கு முக்கிய மருந்தாகப் பயன்படுகிறது. இந்த ஆகாச கருடன் கிழங்கு பச்சையாக இருக்கும்போதே எடுத்து அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து 60 மி.லி. வெந்நீரில் கரைத்துக்குடிக்க கொடுக்க வேண்டும். தினம் ஒரு வேளையாக 3 நாட்கள் தொடர்ந்து கொடுக்க குரங்கு, பூனை, நாய், நரி, சிறுத்தை, குதிரை, முதலை. வேங்கை இவைகளின் கடியினாலுண்டான நஞ்சுகள் நீங்கி குணமாகும். மேலும் அரைத்த விழுதை தொடர்ந்து 3 நாட்கள், கடிவாயிற் பூசி வர வேண்டும். இதேபோல் பச்சைக்கிழங்கை சிறுசிறு துண்டுகளாக்கி பட்டாணி அளவு கிழங்குத்துண்டுடன் வெற்றிலை சேர்த்து மென்று விழுங்க தேள். நட்டுவாக்காலி இவைகளினாலுண்டான நஞ்சும். அதனைத் தொடர்ந்து நெறி கட்டுதலும் குணமாகும்" என்றேன்.

''ஆகாச கருடன் கிழங்கு நஞ்சு முறிவு மருத்துவத்தில் பெரும் பங்கு வகிக்கிறது" 

        "இன்னும் இருக்கிறது. கருடன் கிழங்கு. குப்பைமேனி, அவுரி, ஆவாரை. கீழாநெல்லி இவ்வைந்து வகை இலைகளையும் இடித்து சாறு பிழிந்து, உள்ளுக்கு வேளைக்கு ஒரு அவுன்சு வீதம் குடிக்கக் கொடுத்து மேலுக்குத் தடவிவர எல்லாவிதமான கொடிய நாகத்தின் நஞ்சும் மறையும்".


கருடன் கிழங்கை வைத்து சித்த மருத்துவத்தில் முக்கியமான தயாரிப்பு முறை ஒன்றை சொல்லுகிறேன்" பயன்படுத்திக்கொள்ளுங்கள்....

            *கருடன் கிழங்கு 1200 கிராம் வாளுழுவை அரிசி, சுக்கு, மிளகு. திப்பிலி, கருஞ்சீரகம் வகைக்கு 100 கிராம். இவை எல்லாவற்றையும் உரலிலிட்டு நன்றாக இடித்து, 10 விட்டர் நீரிலிட்டு சுண்டக்காய்ச்சி. நீரை வடிகட்டி, அத்துடன் 2 லிட்டர் சிற்றாமணக் கெண்ணெய் கூட்டி, மீண்டும். அடுப்பிலேற்றி எரித்து, அதில் 1200 கிராம் வெள்ளை வெங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக அரிந்து போட்டு மிதமான தீயால் எரிக்க வெங்காயம்நன்றாக எரிந்து மிதக்கும் சமயம், இறக்கி வடிகட்டி பத்திரப்படுத்திக் கொள்ளவும்

'கருடன் கிழங்கு எண்ணெயை எந்தெந்த வியாதிக்கு எப்படி பயன்படுத்த பலன்தரும்'' 

             இந்த எண்ணெயை வேளைக்கு 10 மி.லி. முதல் 15 மி.லி வரை உடல்நிலைக்கு தக்கவாறு தினசரி ஒருவேளை காலையில் தொடர்ந்து 3 முதல் 5 நாட்கள் வரை நீராகாரத்துடன் சாப்பிட்டு பத்தியம் காக்க வேண்டும். தேவைப்பட்டால் ஒரு மாதம் கழித்து மீண்டும் இதேபோல் சாப்பிடலாம். இதனால் வெள்ளை, வெட்டை, குட்டம், வெண்குட்டம், அரையாப்பு, கொருக்கு நோய், மேக விரணம், மூட்டுவாத நோய்கள், மேக சம்பந்தமான நோய்கள் அனைத்தும் குணமாகும்"

அடுத்த பதிவில் வேறொரு மூலிகை பற்றி பார்ப்போம்.

மேலும் மூலிகைகள் மற்றும் சித்த மருந்துகளை பற்றிய உங்களது சந்தேகங்களுக்கும், ஆலோசனைக்கும் தொடர்பு கொள்ளவும்…

இன்னும் அறிவோம்...

இலவச சித்தா, ஆயுர்வேத மருத்துவ ஆலோசனை மற்றும் சந்தேகங்களுக்கு அழைக்கவும்...

பேரன்புடன்….
சுதாகர் G வைத்யா
நாடி பரிசோதனை மற்றும் மருத்துவ ஜோதிட ஆராய்ச்சியாளர்.

பாரம்பரிய மருத்துவத்தில் எங்களின் குறிகோள் உடல் நலம் மற்றும் சுகாதாரத்தை காப்பதே… இங்கு ஆயுர்வேதம், சித்தா, மற்றும் பிற மருத்துவ அறிவியல்களின் ஊடாக நாங்கள் தனிப்பட்ட ஆலோசனைகள், மற்றும் நோய் தீர்க்கும் சிகிச்சைகள், சுகாதாரம் மற்றும் அழகு தொடர்பான சேவைகளை வழங்குகிறோம்.

மேலும் மூலிகைகள் மற்றும் சித்தா, ஆயுர்வேத மருத்துவம் பற்றிய உங்களது சந்தேகங்களுக்கும், ஆலோசனைக்கும் தொடர்பு கொள்ளவும்…
Mayura Ayurvedasram (Vedic Pharmacy)
#40, Old Busstand Commercial Complex,
Vellore - 632 004.  Call : 90430 25336

Mayura Wellness Centre
(Holistic Healing Solutions)
Near Vani Vidyalaya School, 
Katpadi – 632 006.  Call : 90421 35336


#மனம் #ஆயுர்வேதம் #சித்தா #மயூரா #வேலூர்

Friday, August 20, 2021

" வருமுன் காப்பது" என்பது தற்காப்பு தான்.

 நசியம் - தற்காப்பு

சண்டையோ, விளையாட்டோ அதில் தாக்குதல் எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு  தற்காப்பிற்க்கும் இடம் உண்டு.



        " வருமுன் காப்பது" என்பது தற்காப்பு தான். உணவுகளில் சேர்க்கும் வயிற்றை சீராக்கும் சீரகம்(சீர்+அகம்) ஆகட்டும்,பகைவன் வீட்டில் கூட உணவருந்த கூடிய தைரியம் அளிக்கும் மிளகு ஆகட்டும், இல்லை கோவில் விழாக்களில் தெளிக்கும் மஞ்சள் நீராகட்டும், எங்கள் ஊருக்குள் வராதே என சொல்லும் கொடி ஏற்றுதல், காப்பு கட்டுவது என எல்லாமே தற்காப்பை நோக்கியே இருந்தது.

நோய்கள் நம்மை தாக்காமல் இருக்க சித்தர்கள் சொன்ன நோய் அணுகா விதியானது

6 மாதங்களுக்கு ஒருமுறை வாந்திக்கு மருந்தும்,

4 மாதங்களுக்கு ஒருமுறை பேதிக்கு மருந்தும்,

 ஒன்றரை மாதத்திற்கு ஒருமுறை மூக்கில் நசியமும் இட வேண்டும் என்று சொல்கிறது.

மூன்றாவது அலை வரலாம் எனும் நிலையில் கோரோனா பெருந் தொற்றை கட்டுப்படுத்த உலகில் உள்ள மருந்து நிறுவனங்களின் கவனம் இப்போது மூக்கில் இடும் தடுப்பூசிகளை  நோக்கி திரும்பியுள்ளது.இன்னும் அது செயல் வடிவத்திற்கு வரவில்லை.

        கைகளில் இடும் தடுப்பூசியை விட மூக்கின் வழியாக மருந்தை செலுத்தும் போது கொடுக்கப்படும் மருந்து கொஞ்சம் கூட வீணாகாமல் அதன் முழு பலனும் நமக்கு கிடைக்கும்.மூக்கின் வழியாக கொடுப்பது எளிது, மேலும் யார் வேண்டுமானாலும் மூக்கில் சொட்டு மருந்தை இடலாம் இதற்கென தனிப்பயிற்சி எல்லாம் தேவை இல்லை.

        மூக்கின் சளிச்சவ்வின் வழியாக தான் கோரோனா நம் உடலில் உட்புகும். தாக்குதல் நடக்கும் இடத்திலேயே மருந்தை செலுத்தும் போது நோயை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்த முடியும் என்பதால் தான் மூக்கின் வழியாக செலுத்தும் மருந்தின் மேல் இப்போது கவனம் திரும்பி உள்ளது.

     தாக்கும் இடத்தில் தற்காப்பு இருக்கும் இல்லையா? ஆம், மூக்கு சளிசவ்வில் வலுவான தற்காப்பு அமைப்பு இயற்கையாகவே நமக்கு இருக்கிறது.

நோய் எதிர்ப்பு புரதமான Antimicrobial புரதங்கள் (Lactoferrin) மூலம் இந்த தற்காப்பு நமக்கு கிடைக்கிறது.

1.நோய் கிருமி உள்ளே நுழையும் போது அதை தடுத்து அதன் செயல் திறனை குறைத்தல்,

2.நோய் கிருமிகளின் சுவற்றை சேதப்படுத்தல்,

3.நோய் கிருமிகளை சளியில் சிக்க வைத்து பின் cilia மூலம் வெளியேற்றல் ஆகிய செயல்களை மேற்கண்ட புரதங்கள் செய்கின்றன.

        நோய் தாக்குதலின் ஆரம்ப காலத்தில் A வின் செயல் என்பது மிக முக்கியமான ஒன்று. இந்த  A வின் செயலை மேம்படுத்தும் வேலையை தான் மூக்கின் வழியே செலுத்தும்  தடுப்பூசிகள் செய்கின்றன.

        இந்த A மற்றும் நோய் எதிர்ப்பு புரதமான Lactoferrin இரண்டும் தாய் பால், வெள்ளாட்டு பால், பசும் பாலில் அதிகம் உள்ளது.

    நசியமாக இடப்படும் மருந்துகள் பெரும்பாலும் தாய் பாலிலோ இல்லை பசு நெய்யிலோ கலந்து இடப்படும் மருந்துகள் தான் , எனவே ஒவ்வொரு முறை நசியம் இடும் போது நாம் Ig A வையும், Lactoferrin யையும் சேர்த்தே மூக்கில் விடுகிறோம்,இதனால் மூக்கின் சளி சவ்விற்கு இரு மடங்கு சக்தி கிடைக்கிறது.

        சளி சவ்வின் இயல்பு மாறாமல் இருக்க அதில் உள்ள நன்மை செய்யும் கிருமிகளின் அளவு சரியாக இருக்க வேண்டும், இதை தாய்ப்பாலில் உள்ள HMO எனும் Human oligo saccharide செய்கிறது.சளி சவ்வு இயல்பு மாறாமல் இருந்தாலே நோய் கிருமிகள் நுழைவது மிககடினம்.

            எனவே ஒன்றரை மாதத்திற்கு ஒருமுறை நசியமிட்டு தற்காப்புடன் இருப்போம்.

        (தற்காப்பு என்பது நோய் வராமல் தடுக்கும், அதை மீறி வந்தால் நோயின் தீவிரத்தை குறைக்கும்).


இன்னும் அறிவோம்...

அடுத்த பதிவில் வேறொரு மூலிகை பற்றி பார்ப்போம்.

மேலும் மூலிகைகள் மற்றும் சித்த மருந்துகளை பற்றிய உங்களது சந்தேகங்களுக்கும், ஆலோசனைக்கும் தொடர்பு கொள்ளவும்…

இன்னும் அறிவோம்...

இலவச சித்தா, ஆயுர்வேத மருத்துவ ஆலோசனை மற்றும் சந்தேகங்களுக்கு அழைக்கவும்...

பேரன்புடன்….
சுதாகர் G வைத்யா
நாடி பரிசோதனை மற்றும் மருத்துவ ஜோதிட ஆராய்ச்சியாளர்.

பாரம்பரிய மருத்துவத்தில் எங்களின் குறிகோள் உடல் நலம் மற்றும் சுகாதாரத்தை காப்பதே… இங்கு ஆயுர்வேதம், சித்தா, மற்றும் பிற மருத்துவ அறிவியல்களின் ஊடாக நாங்கள் தனிப்பட்ட ஆலோசனைகள், மற்றும் நோய் தீர்க்கும் சிகிச்சைகள், சுகாதாரம் மற்றும் அழகு தொடர்பான சேவைகளை வழங்குகிறோம்.

மேலும் மூலிகைகள் மற்றும் சித்தா, ஆயுர்வேத மருத்துவம் பற்றிய உங்களது சந்தேகங்களுக்கும், ஆலோசனைக்கும் தொடர்பு கொள்ளவும்…
Mayura Ayurvedasram (Vedic Pharmacy)
#40, Old Busstand Commercial Complex,
Vellore - 632 004.  Call : 90430 25336

Mayura Wellness Centre
(Holistic Healing Solutions)
Near Vani Vidyalaya School, 
Katpadi – 632 006.  Call : 90421 35336


#மனம் #ஆயுர்வேதம் #சித்தா #மயூரா #வேலூர்


"ஆயுளை காக்கும் ஆமணக்கு"

         ஆமணக்கு செடி சராசரி 8 முதல் 10 அடி உயரம் வரை வளரக்கூடியது தோட்டப்பயிராகவும், மானாவாரி யாகவும் விளையக்கூடியது ஆமணக்கு செடியின் பயனுள்ள பாகமே அதன் வித்துதான். இதை முத்துக்கொட்டை என்றும் சொல்வார்கள் இதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்தான் ஆமணக்கு எண்ணெய் என்பது இதை ஆமணக்கு நெய் என்றும் சொல்லார்கள். ஆனால் ஊர்களில் விளக்கெண்ணெய் என்று சொன்னால்தான் தெரியும் ஆங்கிலத்தில் கேஸ்டர் ஆயில் என்று குறிப்பிடுவார்கள்.


ஆமணக்கு நெய்யால் நலமுண்டாம் யாவர்க்கும் 
பூமணக்கு மேனி புரிகுழலே வாய்மணக்கக் கொள்ளில் 
வயிறுவிடுங் கோமுள்ள வாயுவறும் 
உள்ளில்வரு குன்மம்போது மோது.

        இந்த விளக்கெண்ணையின் மருத்துவ குணங்களுக்காக சித்த, ஆயுர்வேத மருத்துவ முறைகளில் பரவலாக மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள். நாட்டுப்புறங்களில் இன்றளவும் பல்வேறு விதங்களில் இதனை சிறந்த மருந்தாக பயன்படுத்துகிறார்கள். மற்றும் தலைமுடித் தைலமாகவும் சமையலுக்கும், உணவை தயாரிப்பதற்கும் பயன்படுத்துகின்றனர். இதற்கு மலமிளக்கி, பால்பெருக்கி, தாதுவெப்பகற்றி ஆகிய செய்கைகளுண்டு. சுத்தமான ஆமணக்கு எண்ணெய் தண்ணீர் போல் சற்று வழவழப்பாக நிறமின்றி. சுவையின்றி, மணமின்றி இருக்கும்.

            ஆமணக்கு எண்ணெயில் ஏதேதோ வகைகள் இருப்பதாக சொல்கிறார்களே அது என்னவென்று பார்க்கலாம்...

    ஆமணக்கில் சிற்றாமணக்கு பேராமணக்கு என இருவகைகள் உண்டு. எப்படியிருப்பினும் எண்ணெயின் குணம் ஒன்று தான். எண்ணெய் தயாரிக்கும் முறையில்தான் வேறுபாடே தவிர. குணம் ஒன்றுதான் என்றேன்.

                    ஆமணக்கு எண்ணெயின் பயன்கள் பற்றி விரிவாக சொல்லுகிறேன்.

            'ஆமணக்கு எண்ணெய்க்கு மலமிளக்கி செய்கை உண்டு. சற்று அதிகமாக சாப்பிட நீர்மலம் போக்கி செய்கை உண்டு. பேதியாகும்.. இதனால் குன்மம். குடல் அண்டவாதம், குடலிறக்கம். குடலேற்றம், வாத நோய்கள், மலச்சிக்கல், மெய், வாய், கண், மூக்கு, செவி இவைகளிலுன் டாகும் எரிச்சலும் நீங்கும். அளவோடு பயன்படுத்த உடலுக்கு நல்ல ஆரோக்கியமும் நல்லநிறமும் உண்டாகும். தாதுவிருத்தியும் உண்டாகும்.

        கண்ணில் விழுந்த மலினங்களை அகற்ற, கண்சிவப்பு கண்நோய், 'கண் எரிச்சலுக்கு கண்களில்விட்டு பாபன்படுத்தலாம் பாலுட்டும் தாய்மார்களுக்கு மார்பகக் காம்பில் ஏற்படும் விரணம். வெடிப்பு இவைகளை அகற்ற அடிக்கடி தடவி வரலாம். எப்போதாவது ஒருமுறை குழந்தைகளுக்கு பேதிக்கு கொடுக்க இது அற்புதமான பேதிமருந்து. குழந்தைகளின் வயது உடல் நிலைமைக்கேற்ப தாய்ப்பாவில் சாப்பிட சில தடவைகள் பேதியாகும். இதனால் குழந்தைகளின் வயிற்று உப்பிசம். வயிற்றுவலி, பசியின்மை. வாய்வு சம்பந்தமான நோய்கள் குணமாகும். முக்கியமான செய்தி என்னவென்றால், மண் தின்னும் குழந்தைகளுக்கு இப்படி ஆமணக்கு நெய்-பேதி மருந்தாகக் கொடுக்க குழந்தை மண்தின்பதை நிறுத்துவதுடன் அப்பழக்கத்தினால் ஏற்பட்ட உடல் கோளாறுகளும் சீராகும்.

**ஆமணக்கு எண்ணெயை குழந்தைகள் தவிர பெரியவர்களும் உபயோகிக்கலாமா?"

                 "பிரசவித்த தாய்மார்களுக்கும். மூலநோயுள்ளோர்களுக்கும் மலச்சிக்கலினால் அவதியுறும் வயோதிகர்களுக்கும் இது மிகச்சிறந்த மருந்து. இன்னொரு செய்தி தெரியுமா? இது பேதியுண்டாக்கும் மருந்துதான். ஆனால் சீதபேதியுள்ளோர்க்கு அதை நிறுத்த இதுவே சிறந்த மருந்து. மிகவும் அரிதாக வயிற்றுவலி வயிறு சம்பந்தமான நோய்கள், கடுமையான நாட்பட்ட மலச்சிக்கல் போன்றவற்றிற்கு ஆமணக்கு எண்ணையை பீச்சாக (எனிமா) உபயோகிப்பார்கள். மேலும் ஆமணக்கு எண்ணையை இளஞ்சூட்டுடன் மூக்கில் உறிஞ்ச மூக்கடைப்பு பீனிச நோய்கள் குணமாகும். மற்றும் நாட்பட்ட வாயு, மூட்டுவாத நோய்களுக்கும் மேலுக்குத்தடவும் மருந்தாகவும், உள்ளுக்குச் சாப்பிடும் மருந்தாகவும்சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. ஆமணக்கு இலையின் தளிர்களை நீரில் கழுவி சுத்தம் செய்து நன்கு அரைத்த கற்கம் 5 கிராம் அளவு காலை வெறும் வயிற்றிலும் மாலையிலும் தண்ணீருடன் சாப்பிட்டுவர காமாலை குணமாகும். கை கால்களில் சொறி சிரங்கு நோயினால் துன்புறுவோர் தினசரி இரவு படுக்குமுன் ஆமணக்கு இலைகளை சுத்தம் செய்து சொறி சிரங்கினால் பாதிக்கப்பட்ட இடங்களில் வைத்துக்கட்டி மறுநாள் காலை பிரித்துப் பார்க்க அவ்விடங்களில் சொறி-சிரங்கு ஆறி நீர் வடியக் காணலாம். பின்னர் சுத்தமான நீரால் அவ் விடங்களைக் கழுவி உலர்ந்தபின் மேற்பூச்சாக பகலில் அருகம்புல் தைலம் தடவிவர சில நாட்களில் சொறி-சிரங்கு பூரணமாக குணமாகிவிடும்."

        "சித்த மருத்துவத்தில் அப்படி என்னென்ன மருந்துகள் ஆமணக்கு எண்ணையிலிருந்து தயாரிக்கப்படுகின்றன?" பார்க்கலாம் பூர எண்ணெய் என்ற வெள்ளை எண்ணெய். மூலக்குடார எண்ணெய், வாதகேசரித்தைலம். இரசத்தைலம், கணத்தைலம், கருடன் கிழங்கெண்ணெய், கழற்சி தைலம். சித்தாதி எண்ணெய், கலிங்காதி எண்ணெய் என்ற மலைவேம்பாதித்தைலம், மாந்த எண்ணெய். மெருகுள்ளித்தைலம், மேனித்தைலம் போன்ற எண்ணற்ற மருந்துகள் இதைக்கொண்டு தயாரிக்கப்படுகிறது. அத்துடன் பல மருந்துப் பொருட் களை சுத்தம் செய்யவும் ஆமணக்கு எண்ணெய் பயன்படுகிறது" என்று சொன்னேன். 

                    ஆனால்  ஆமணக்கு எண்ணையை பயன்படுத்தவே கூடாது என்று ஒரு சாரார் சொல்கிறார்களே. அதைப்பற்றி?

            அது தவறு, நமது உடலுக்கு நமது தட்ப வெப்ப நிலைக்கு நம் உணவுப்பழக்க வழக்கங்களுக்கேற்ப நாம் ஒரு குறிப்பிட்ட அளவில் மட்டும் ஆமணக்கு எண்ணையை நேரடியாகவோ, மருந்தாகவோ பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறோம். ஆமணக்கு நெய்யை இப்படி அளவோடு பயன்படுத்துவது நன்மையே தவிர கெடுதல் ஏதும் இல்லை அப்படி கெடுதல் நிகழ்ந்ததாக சான்று ஏதும் இல்லை. ஆனால் இதை அடிக்கடியோ தினசரியோ, தொடர்ந்தோ பயன்படுத்தக் கூடாது. எனவே இது நல்ல மருந்துப் பொருள்தான்"


அடுத்த பதிவில் வேறொரு மூலிகை பற்றி பார்ப்போம்.

மேலும் மூலிகைகள் மற்றும் சித்த மருந்துகளை பற்றிய உங்களது சந்தேகங்களுக்கும், ஆலோசனைக்கும் தொடர்பு கொள்ளவும்…

ஆதிரா 
Consultant for Holistic Wellness
Mayura Wellness Clinic
(Healing solutions for General Wellness)
97862 25999







Tuesday, August 17, 2021

ஓ என்ற சொல்லிருக்கும் மனித உருக்கும்… தொப்புள் ளிருக்கும். தொடர்பு என்ன என்பதின் விளக்கம் …

 ஓ என்ற சொல்லிருக்கும் மனித உருக்கும்… தொப்புள் ளிருக்கும். தொடர்பு என்ன என்பதின் விளக்கம்



கருப்பையில் இருக்கும் குழந்தை "ஓம்" வடிவில்தான் உள்ளது என்பதே "ஓம்" மந்திர சொல்லுக்கும், மனித வாழ்விற்கும் உள்ள நெருங்கிய தொடர்பினை உணர்த்தும்.. ..
மனிதனின் உடலும் இறைவனின் இயற்கை வடிவான ஓங்கார வடிவத்துடன் அமைந்திருக்கிறது.
மனித வடிவமும் அருள் வடிவம்தான்….
தொப்புளில் பிராணன் எனப்படும் மூச்சுக் காற்று ஒரு மனிதன் எவ்வளவு நாள் வாழ்வான் என்பதற்கு ஏற்ப, அந்தந்த வயதுக்குத் தக்கபடி எவ்வளவு மூச்சுகள் இருக்க வேண்டுமோ அவ்வளவு மூச்சும் அநேக சுற்றுகளாய் சுற்றிப்படுத்துக் கொண்டு, அதிலிருந்து இரவு பகலாய் மூச்சு செலவழிந்து கொண்டே வந்து, இறுதியில் தொப்புளில் மூச்சு எதுவுமில்லாமல் காலியாகிவிடும். மூச்சு தொப்புளில் காலியாகிவிட்டால் உயிர் போய்விட்டது என்று சொல்வார்கள். இந்த மூச்சே உயிர் என்றும், பிராணன் என்றும் சொல்லப்படும்…..
நாம் உயிர் வாழ சுவாசிக்கிறோம். நமக்குத் தேவையான வாயு நாசித்துவாரங்கள் வழியாக (சிலர் வாய் வழியாகவும் சுவாசிப்பதுண்டு) நுரையீரலுக்குச் சென்று அதை இயங்கச் செய்யும். இது நாம் சுவாசிக்கும் முறை. ஆனால் யோகியர்களும் சித்தர்களும் யோக நிலையில் இப்படி வெளிக்காற்றை நாசிகள் வழியாக சுவாசிப்பதில்லை. அவர்கள் சுவாசிக்கும் முறையே வேறு.
கருப்பையில் இருக்கும் குழந்தை சுவாசிப்பதைப் போலவே அவர்கள் சுவாசிப்பர். அதாவது தொப்பு ளைச் சுற்றியிருக்கும் பிராணன் எனப்படும் வாயுவைக் கொண்டு நுரையீரலை இயங்கச் செய்வர்.
தொப்புளில் "ஓ" என்ற எழுத்தின் ஒலி வடிவம் தொடங்குகிறது என்றால், தொப்புளைச் சுற்றி காற்று இருக்கிறது என்பது தெளிவு. அந்த காற்றே உயிர்க்காற்று. அதுவே நம் உடம்பிற்கு உயிரூட்டுவதால் உயிர்மூச்சு. இப்படி உயிரா கிய- பிராணனாகிய வாயுவிலிருந்து உருவெ டுத்து மேலெழும்பி வருவதே "ஓம்" எனும் மந்திரம். பிராணனிலிருந்து வெளிப்படு வதாலேயே இது பிரணவ மந்திரம் என்றாயிற்று.
நாம் சொல்லும் மந்திரங்களிலும் நாமங்களிலும் "ஓம்" என்ற பிரணவத்தை முதலில் கூறக் காரணமே, சொல்லும் மந்திரங்களும் தெய்வங்களின் நாமங்களும் உயிரோட்டமாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான். அநேகமாக நாம் பேசும்போது உள்காற்று வெளியேற்றப்படுகிறது; ஆனால் "ஓம்" என உச்சரிக் கும்போது வெளிக்காற்று உள்வாங்கப்படுகிறது.
அடுத்து, காதுகள் "ஓம்" என்ற பிரணவ எழுத்து வடிவத்திலேயே அமைந்துள்ளன. நமது காதுகளுக்குள்ள தனிச்சிறப்பு என்னவெனில், இது எப்போதும், எக்காலமும் நிறம் மாறாத ஓர் உறுப்பு. குழந்தை கருவறையிலிருந்து வெளி உலகுக்கு வந்தவுடன் செக்கச் செவேரென்றோ, நல்ல வெள்ளையாகவோ இருக்கும்.
வெளியுலகம் கண்டவுடன் சூரியனின் கதிர்கள், வெளிக்காற்று களின் தாக்கம் மற்றும் கால நிலைக்கேற்ப அதன் நிறம் சிறிது சிறிதாக மாறுபடும். சிவப்பாக அல்லது வெள்ளையாக இருந்த குழந்தை கறுப்பாக மாறலாம். ஆனால் காதுகள் அப்படியல்ல.
பிறந்த குழந்தை பெரியவனானதும் எந்த நிறத்திலிருக்கும் என்பதை அறிய குழந்தையின் காதுகளின் நிறத்தை வைத்தே தெரிந்துகொள்ளலாம். காரணம் காதுகள் ஒருபோதும் நிறம் மாறுவதில்லை.
ஆக, நாம் கருவில் "ஓம்" என்ற பிரணவத்தின் எழுத்து வடிவத்திலிருந்தோம். ஒலி அதிர்வுகளைக் கேட்க வைக்கும் காதுகள் "ஓம்" என்ற எழுத்து வடிவத்தில் நிலையாக அமைந்துவிட்டது.
இன்றைய நவீன உலகில் தினந்தோறும் நாம் எவ்வளவோ ஒலிகளைக் காதுகளால் கேட்கிறோம். கண்களால் எவ்வளவே காட்சிகளைக் காண்கி றோம். ஆனால் அவற்றிலெல்லாம் கிடைக்காத சுகத்தை, மன அமைதியை "ஓம்" என்ற பிரண வத்தை உச்சரிப்பதாலும் காதுகளால் கேட்பதாலும் பெற முடிகிறது
ஆலயத்தினுள் எழுப்பப்படும் "ஓம்" என்ற மந்திர அதிர்வலைகள் நம் உடலெங்கும் பாய்ந்து, நம்மை ஒரு பரவச நிலைக்குக் கொண்டு செல்கின்றன. அது மந்திர ஜாலமா, மாயா ஜாலமா, இந்திர ஜாலமா என்பதை நாமறியோம். ஆனால் அது நமது ஐம்புலன்களையும் ஒரு சேர அதிரவைத்து, அடக்கி கட்டுக்குள் வைக்கிறது என்பது மட்டும் உண்மை.
"ஓம்" என்ற பிரணவத்தை உச்சரிக்கும்போது முதல் முதல் நாபியில் அதிர்வலைகள் உருவாகி, உடலெங்கும் மின் ஆற்றல் பாய்வதை உணர முடியும். இந்த அதிர்வலைகளில் ஒருவித காந்த சக்தி இருப்பதை உணரலாம். இன்று மருத்துவ உலகில் மின்காந்த சிகிச்சையினால் பல நோய்கள் குணப்படுத்தப்படுகின்றன…..

அடுத்த பதிவில் வேறொரு மூலிகை பற்றி பார்ப்போம்.

மேலும் மூலிகைகள் மற்றும் சித்த மருந்துகளை பற்றிய உங்களது சந்தேகங்களுக்கும், ஆலோசனைக்கும் தொடர்பு கொள்ளவும்…

இன்னும் அறிவோம்...

இலவச சித்தா, ஆயுர்வேத மருத்துவ ஆலோசனை மற்றும் சந்தேகங்களுக்கு அழைக்கவும்...

பேரன்புடன்….
சுதாகர் G வைத்யா
நாடி பரிசோதனை மற்றும் மருத்துவ ஜோதிட ஆராய்ச்சியாளர்.

பாரம்பரிய மருத்துவத்தில் எங்களின் குறிகோள் உடல் நலம் மற்றும் சுகாதாரத்தை காப்பதே… இங்கு ஆயுர்வேதம், சித்தா, மற்றும் பிற மருத்துவ அறிவியல்களின் ஊடாக நாங்கள் தனிப்பட்ட ஆலோசனைகள், மற்றும் நோய் தீர்க்கும் சிகிச்சைகள், சுகாதாரம் மற்றும் அழகு தொடர்பான சேவைகளை வழங்குகிறோம்.

மேலும் மூலிகைகள் மற்றும் சித்தா, ஆயுர்வேத மருத்துவம் பற்றிய உங்களது சந்தேகங்களுக்கும், ஆலோசனைக்கும் தொடர்பு கொள்ளவும்…
Mayura Ayurvedasram (Vedic Pharmacy)
#40, Old Busstand Commercial Complex,
Vellore - 632 004.  Call : 90430 25336

Mayura Wellness Centre
(Holistic Healing Solutions)
Near Vani Vidyalaya School, 
Katpadi – 632 006.  Call : 90421 35336


#மனம் #ஆயுர்வேதம் #சித்தா #மயூரா #வேலூர்

அதிசயம், அற்புதம்!! அஷ்டமா சித்தி வரம்…

 தமிழ்ச் சித்தர்கள் கண்டுபிடித்த ஆமை அதிசயம்!

ஒருமையுள் மை போல் ஐந்தடக்கல் ஆற்றின்

எழுமையும் ஏமாப் புடத்து

-திருக்குறள் 126-


ஒரு பிறவியில் ஒருவன் ஆமை போல் ஐம்பொறிகளயும் அடக்கி வாழக் கற்றுக் கொண்டால் அந்த அடக்கம் அவன் எடுக்கும் ஏழு பிறவிகளுக்கும் பாதுகாவலாக அமையும் என்பது திருவள்ளுவரின் கூற்றாகும்.

ஆனால் திருமூலர் மட்டுமே ஆமையையும் ஆயுள் நீட்டிப்பையும் இணைத்துப் பேசுகிறார். இதை இன்றைய உயிரியல் விஞ்ஞானமும் கின்னஸ் சாதனை நூலும் உறுதிப்படுத்தி விட்டன.

ஆமை தன் உறுப்புகளை ஓட்டுக்குள் இழுத்துப் பாதுகாப்பது போல ஒருவன் ஐந்து புலன்களயும் உள்ளுக்குள் இழுத்து ஒடுக்கி விட்டால் ஆன்ம ஒளி பிறக்கும் என்று கூறி விடலாம். ஆனால் திருமந்திரம் இதற்கு மேலாக ஒரு படி செல்கிறது.

இன்றைய உயிரியல்(Biology) படித்தோருக்கு உலகிலேயே நீண்ட நாள் வாழும் பிராணி ஆமை தான் என்று தெரியும். இதை கின்னஸ் சாதனை நூலிலும் காணலாம்.

இதையே திருமூலரும் கூறுகிறார்:-

ஊமைக் கிணற்றகத்துள்ளே உறைவதோர்

ஆமையின் உள்ளே யழுவைகள் ஐந்துள

வாய்மையினுள்ளே வழுவா தொடுங்குமேல்

ஆமையின் மேலுமோ ராயிரத் தாண்டே

-திருமந்திரம் 

மரணம் இலாப் பெருவாழ்வு வாழ வேண்டுமானால் - ஆமையை விட ஆயிரம் ஆண்டு கூடுதலாக வாழ வேண்டுமானால் - என்ன செய்ய வேண்டும் என்று கூறுகிறார்:

வாயில்லாக் கிணற்றுள் உறையும் பிரணவ வழிபாட்டாளரிடம் உறைப்புடன் தங்கும் நின்மல சாக்கிரம் முதலிய 5 நிலைகள் உண்டு. அந்நிலையில் ஆன்ம ஒளியில் நழுவா அறிவு ஒடுங்குமேல் அவர் பிரணவ உடலுடன் மேலும் ஒரு ஆயிரம் ஆண்டு உயிர் வாழலாம்.

இதிலுள்ள தத்துவ விஷயங்களை மறந்து விட்டு ஆமையை விட ஆயிரம் ஆண்டு உயிர் வாழ்வது எப்படி என்ற வரிகளை மட்டும் கவனிக்கவும். ஆமை தான் உலகில் நீண்ட காலம் வாழும் பிராணி என்பதைத் தமிழர்கள் அறிந்திருந்தனர்.

மனிதனைப் போல மூன்று மடங்கு ஆயுள் உடையது ஆமை. இதைக் கண்டுபிடித்து எழுதி வைக்கக் கூட ஒருவர் பல தலைமுறைகளுக்கு வாழ்ந்திருக்க வேண்டும். அல்லது சரியான தகவலைப் பரப்பும் உத்தி இருந்திருக்க வேண்டும். திருமூலர் 3000 ஆண்டு வாழ்ந்ததாக ஒரு நம்பிக்கையும் உண்டு.


அடுத்த பதிவில் வேறொரு மூலிகை பற்றி பார்ப்போம்.

மேலும் மூலிகைகள் மற்றும் சித்த மருந்துகளை பற்றிய உங்களது சந்தேகங்களுக்கும், ஆலோசனைக்கும் தொடர்பு கொள்ளவும்…

Mayura Sudhakar G 

Consultant 

Mayura Wellness Clinic
(Healing solutions for General Wellness)
97862 25999






யோகத்தை உணர்த்தும் ஆமை…

 தமிழ்ச் சித்தர்கள் கண்டுபிடித்த ஆமை அதிசயம்!

ஒருமையுள் மை போல் ஐந்தடக்கல் ஆற்றின்

எழுமையும் ஏமாப் புடத்து

-திருக்குறள் 126-



ஒரு பிறவியில் ஒருவன் ஆமை போல் ஐம்பொறிகளயும் அடக்கி வாழக் கற்றுக் கொண்டால் அந்த அடக்கம் அவன் எடுக்கும் ஏழு பிறவிகளுக்கும் பாதுகாவலாக அமையும் என்பது திருவள்ளுவரின் கூற்றாகும்.

ஆனால் திருமூலர் மட்டுமே ஆமையையும் ஆயுள் நீட்டிப்பையும் இணைத்துப் பேசுகிறார். இதை இன்றைய உயிரியல் விஞ்ஞானமும் கின்னஸ் சாதனை நூலும் உறுதிப்படுத்தி விட்டன.

ஆமை தன் உறுப்புகளை ஓட்டுக்குள் இழுத்துப் பாதுகாப்பது போல ஒருவன் ஐந்து புலன்களயும் உள்ளுக்குள் இழுத்து ஒடுக்கி விட்டால் ஆன்ம ஒளி பிறக்கும் என்று கூறி விடலாம். ஆனால் திருமந்திரம் இதற்கு மேலாக ஒரு படி செல்கிறது.

இன்றைய உயிரியல்(Biology) படித்தோருக்கு உலகிலேயே நீண்ட நாள் வாழும் பிராணி ஆமை தான் என்று தெரியும். இதை கின்னஸ் சாதனை நூலிலும் காணலாம்.

இதையே திருமூலரும் கூறுகிறார்:-

ஊமைக் கிணற்றகத்துள்ளே உறைவதோர்

ஆமையின் உள்ளே யழுவைகள் ஐந்துள

வாய்மையினுள்ளே வழுவா தொடுங்குமேல்

ஆமையின் மேலுமோ ராயிரத் தாண்டே

-திருமந்திரம் 2264, 2304-

மரணம் இலாப் பெருவாழ்வு வாழ வேண்டுமானால் - ஆமையை விட ஆயிரம் ஆண்டு கூடுதலாக வாழ வேண்டுமானால் - என்ன செய்ய வேண்டும் என்று கூறுகிறார்:

வாயில்லாக் கிணற்றுள் உறையும் பிரணவ வழிபாட்டாளரிடம் உறைப்புடன் தங்கும் நின்மல சாக்கிரம் முதலிய 5 நிலைகள் உண்டு. அந்நிலையில் ஆன்ம ஒளியில் நழுவா அறிவு ஒடுங்குமேல் அவர் பிரணவ உடலுடன் மேலும் ஒரு ஆயிரம் ஆண்டு உயிர் வாழலாம்.

இதிலுள்ள தத்துவ விஷயங்களை மறந்து விட்டு ஆமையை விட ஆயிரம் ஆண்டு உயிர் வாழ்வது எப்படி என்ற வரிகளை மட்டும் கவனிக்கவும். ஆமை தான் உலகில் நீண்ட காலம் வாழும் பிராணி என்பதைத் தமிழர்கள் அறிந்திருந்தனர்.

மனிதனைப் போல மூன்று மடங்கு ஆயுள் உடையது ஆமை. இதைக் கண்டுபிடித்து எழுதி வைக்கக் கூட ஒருவர் பல தலைமுறைகளுக்கு வாழ்ந்திருக்க வேண்டும். அல்லது சரியான தகவலைப் பரப்பும் உத்தி இருந்திருக்க வேண்டும். திருமூலர் 3000 ஆண்டு வாழ்ந்ததாக ஒரு நம்பிக்கையும் உண்டு.


அடுத்த பதிவில் வேறொரு மூலிகை பற்றி பார்ப்போம்.

இன்னும் அறிவோம்...

இலவச சித்தா, ஆயுர்வேத மருத்துவ ஆலோசனை மற்றும் சந்தேகங்களுக்கு அழைக்கவும்...

பேரன்புடன்….
சுதாகர் G வைத்யா
நாடி பரிசோதனை மற்றும் மருத்துவ ஜோதிட ஆராய்ச்சியாளர்.

பாரம்பரிய மருத்துவத்தில் எங்களின் குறிகோள் உடல் நலம் மற்றும் சுகாதாரத்தை காப்பதே… இங்கு ஆயுர்வேதம், சித்தா, மற்றும் பிற மருத்துவ அறிவியல்களின் ஊடாக நாங்கள் தனிப்பட்ட ஆலோசனைகள், மற்றும் நோய் தீர்க்கும் சிகிச்சைகள், சுகாதாரம் மற்றும் அழகு தொடர்பான சேவைகளை வழங்குகிறோம்.

மேலும் மூலிகைகள் மற்றும் சித்தா, ஆயுர்வேத மருத்துவம் பற்றிய உங்களது சந்தேகங்களுக்கும், ஆலோசனைக்கும் தொடர்பு கொள்ளவும்…
Mayura Ayurvedasram (Vedic Pharmacy)
#40, Old Busstand Commercial Complex,
Vellore - 632 004.  Call : 90430 25336

Mayura Wellness Centre
(Holistic Healing Solutions)
Near Vani Vidyalaya School, 
Katpadi – 632 006.  Call : 90421 35336


#மனம் #ஆயுர்வேதம் #சித்தா #மயூரா #வேலூர்




நீண்டநாள் வாழ்வது எப்படி?

 நீண்டநாள் வாழ்வது எப்படி?



ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசிக்கிறான் (மேலை நாட்டுக் கணக்குப் படி ஒரு நிமிடத்திற்கு 18 முறை). இந்தக் கணக்குப் படி ஒரு மணிக்கு 900 முறை. ஒரு நாளைக்கு 21,600 முறை சுவாசிக்கிறான். இந்த சுவாசத்தை எவ்வளவுக்கு எவ்வளவு குறைக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு ஆயுள் கூடும்!
எவ்வளவுக்கு எவ்வளவு கூடுதலாகச் செலவழிக்கிறோமோ, அந்த அளவுக்கு ஆயுள் குறையும். இது ஒரு பாங்கில் பணம் சேமிப்பது போல. பாங்கிலுள்ள பணத்தை விரைவில் செலவழித்தால் என்ன ஆகுமோ அதைப் போலத் தான் உயிர் வாழும் ஆண்டுகளும்.
இந்தத் தத்துவத்தைத் திருமூலர் பாடலிலும் ''கோயில்'' என்ற சொல்லால் பிரபலமான தில்லைச் சிதம்பரத்திலும் காணலாம். சிதம்பரம் கோவிலில் 72,000 ஆணிகள் அறையப் பட்ட 21,600 பொன் தகடுகள் இருந்ததாக அல்லது இருப்பதாகச் சொல்வர். 64 விதமான மரத்தாலான வேலைப்பாடுகளைப் பார்க்கலாம். ஆங்கிலத்தில் "beam" என்று சொல்லப் படும் இவை 64 கலைகளைக் குறிக்கும். 21,600 தங்க ஓடுகள் ஒரு மனிதன் ஒரு நாளில் விடும் 21,600 மூச்சுக் காற்றைக் குறிக்கும். 72,000 ஆணிகள் நம் உடலில் உள்ள நாடி, நரம்புகளையும் நாடித்துடிப்பையும் குறிக்கும்.
#திருமூலர் தனது பாடலில்:-
விளங்கிடு முந்நூற்று முப்பத்தோ டொருபான்
தனங்கொளிரட்டிய தாறு நடந்தால்
வணங்கிடு ஆமைம்மலம் வாயுவெழுந்து
விளங்கிடு மவ்வழி தத்துவ நின்றே
விளக்கமிக்க முந்நூறும், முப்பதைப் பத்தினால் பெருக்கிக் கிடைத்த முந்நூறும் சேர்ந்து அறுநூறு ஆகும். இரட்டியதாறு என்பது ஆறும் ஆறும் பெருக்க முப்பத்தாறு ஆகும். இம்முப்பத்தாறை அறுநூறோடு பெருக்க 21,600 ஆகும். இதுவே ஒருநாள் நாம் சுவாசிக்கும் சுவாசங்கள்.
ஆனால் வரவு 7200 சுவாசம் தான். பாக்கி 14,400. இது தான் நம் மொத்த ஆயுளிலிருந்து கழிந்து கொண்டே வரும். இதைத் தடுக்க மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும். பிராணாயாமம் (மூச்சுப் பயிற்சி) செய்தால் ஆயுள் விருத்தியாகும்.
ஒரு சுவையான கணக்கைப் பாருங்கள். ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனுக்கு விதித்த ஆண்டு 100.
ஒரு நிமிடத்திற்கு ஒரு மனிதன்
18 முறை சுவாசித்தால் அவன் வயது 83 1/3 ஆண்டுகள்
2 முறை சுவாசித்தால் அவன் வயது 750 ஆண்டு
1 முறை சுவாசித்தால் அவன் வயது 1500 ஆண்டு
0 முறை சுவாசித்தால் முடிவேயில்லை
(இது சித்தர்களால் மட்டுமே முடியும்)
ஆமை ஒரு நிமிடத்திற்கு மூன்று முறை தான் சுவாசிக்கிறதாம். ஆயினும் அதற்குப் புற பத்துகள் அதிகம்.
ஒரு மனிதன் ஓம்காரம் சொன்னால் அவனுடய சுவாசத்தின் நீளம் குறைந்து சுவாசம் மிச்சப் படுகிறதாம். ஆகையால் பிரணவ மந்திர (ஓம்) ரகசியம் அறிந்தவர்களும் நீண்ட நாள் வாழலாம்!

அடுத்த பதிவில் வேறொரு மூலிகை பற்றி பார்ப்போம்.

இன்னும் அறிவோம்...

இலவச சித்தா, ஆயுர்வேத மருத்துவ ஆலோசனை மற்றும் சந்தேகங்களுக்கு அழைக்கவும்...

பேரன்புடன்….
சுதாகர் G வைத்யா
நாடி பரிசோதனை மற்றும் மருத்துவ ஜோதிட ஆராய்ச்சியாளர்.

பாரம்பரிய மருத்துவத்தில் எங்களின் குறிகோள் உடல் நலம் மற்றும் சுகாதாரத்தை காப்பதே… இங்கு ஆயுர்வேதம், சித்தா, மற்றும் பிற மருத்துவ அறிவியல்களின் ஊடாக நாங்கள் தனிப்பட்ட ஆலோசனைகள், மற்றும் நோய் தீர்க்கும் சிகிச்சைகள், சுகாதாரம் மற்றும் அழகு தொடர்பான சேவைகளை வழங்குகிறோம்.

மேலும் மூலிகைகள் மற்றும் சித்தா, ஆயுர்வேத மருத்துவம் பற்றிய உங்களது சந்தேகங்களுக்கும், ஆலோசனைக்கும் தொடர்பு கொள்ளவும்…
Mayura Ayurvedasram (Vedic Pharmacy)
#40, Old Busstand Commercial Complex,
Vellore - 632 004.  Call : 90430 25336

Mayura Wellness Centre
(Holistic Healing Solutions)
Near Vani Vidyalaya School, 
Katpadi – 632 006.  Call : 90421 35336


#மனம் #ஆயுர்வேதம் #சித்தா #மயூரா #வேலூர்

ஆங்கிலமருந்தின் விஷத்தினை போக்கும் எட்டிவிதை சித்தமருந்து..!!

ஆங்கிலமருந்தின் விஷத்தினை போக்கும் எட்டிவிதை சித்தமருந்து..!!

அகத்தியர், காளங்கிநாதர்,தேரையர்,புலிப்பாணி போன்ற சித்தர்கள் எட்டியின் மகிமையை சிலாகித்தே உள்ளனர். ஔவையார் அவர்களும் இதனை காஞ்சிரங்காய் என்று குறிபிடுகிறார்

எட்டி மரத்தின் கொட்டைகள் பல ஆயிரம் டன்கள் மேலைநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யபடுகிறது ஆனால் உள்நாட்டில் இதன் பயன்பாடு வெகுவாக குறைக்கபட்டு மறக்கடிக்கபடுகிறது.
கொசுக்கள் என்னை கடிப்பதில்லையே ஏன்? என்ற பலவருட கேள்விகளுக்கு விடை கிடைத்தது, இருளர் இன மக்களின் மருத்துவம் அதாவது எப்பேர்பட்ட பாம்பு ,தேள் போன்றவை கடித்தாலும் எட்டியை மருந்தாக கொடுத்தால் பிழைத்து கொள்ளலாம்.
பாம்பு பிடிப்பதை தொழிலாக செய்யும் பழங்குடியினர் வருடத்திற்கு ஒரு மண்டலம் எட்டிவிதை கற்பத்தை எடுத்து கொள்வதை கவனத்தில் கொள்வோம்.
தேன் பூச்சிகளும் கடிப்பதில்லை இவர்களை. ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது கட்டுவிரியன் பாம்பு கடித்து மிகவும் அபாயமான கட்டத்தில் இருந்து என்னை எட்டி விதை,மற்றும் மரத்தின் பட்டையை கசாயமாக கொடுத்து காப்பாற்றினார்கள். அன்றிலிருந்து இன்று வரை கொசுக்கள் என்மீது வந்து அமரும் ஆனால் கடிக்காமல் பறந்து போய்விடும்.
ஆங்கில மருத்து மாத்திரைகலால் உடலில் ஏற்பட்டு இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற Nux Vomica(நக்ஸ்வாமிகா) எனப்படும் நஞ்சு முறிவு மருந்தை ஹோமியோபதி மருத்துவர்கள் பயன்படுத்தி உடலின் நச்சு தன்மை வெளியேற்றிய பின்பே வைத்தியம் பார்கிறார்கள் என கருதுகிறேன். இந்த மருந்து எட்டி விதைகளில் இருந்து தயாரிக்கபடுகிறது.
மேலை நாடுகளில் இந்த Nux Vomica Tinctureஐ பயன்படுத்தி இருதய வியாதிகளை குணபடுத்தியதாக செய்திகளில் படித்தது உண்டு.
மேலும் முகவாதம் எனப்படும் நோயை போக்க சீன மருத்துவத்தில் எட்டியில் இருந்து எடுக்கப்படும் மருந்து பயன்படுத்தபடுகிறது. இதில் சிட்ரக்னைன், புருனைன், வாடிசைன் எனப்படும் மூன்று முக்கிய அல்காய்டுகள் உள்ளன.

நடைமுறையில் எட்டி மரத்தின் பயன்கள்.
1. பெண்களுக்கு பேய் பிடித்தல் எனப்படும் இஸ்டீரியா மயக்கநோய் ஏற்பட காரணமாக இருப்பது கருப்பையின் சுற்று புறங்களில் உள்ள இரத்த நரம்புகள் பாதிக்கப்படுவதால் இந்த குறைபாடு உண்டாகிறது. அதனை போக்க எட்டி மரத்து வேரை எடுத்து நீர் சேர்த்து இரண்டில் ஒரு பாகமாக காய்ச்சி கொடுக்க நோய் குணமாகிறது இதே கசாயத்தை பயன்படுத்தி இருதய கோளாறுகளையும் சரி செய்யலாம்.

2.எட்டி கற்பத்தை பயன்படுத்தி நரம்பு மண்டலத்தை பலப்படுத்தலாம் அதன் மூலம் மூளையின் செயல்பாடுகள் சிறப்பாக அமையும் அதிகமாக கோபபடுதல், சாரயம் போன்ற போதை மீதான இச்சைகள் தீரும்.
எட்டி கற்பம் செய்முறையில் பல முறைகள் இருக்கிறது இது ஒரு எளியமுறை. தேவையான அளவு எட்டி விதைகளை நெல் உமியின் மீது பரப்பி உமியை எரிக்க எட்டிவிதை எரிந்து திருநீறு போலாகிவிடும் அதை எடுத்து சிறிதளவு தேனுடன் கலந்து சாப்பிட்டபின் வெள்ளாட்டுபால்//மாட்டுபால் குடித்து வர உடலானது வன்மையாக மாறும் பெண்போகம் அதிகரிக்கும்,அதை கட்டுபடுத்தி உடலை வளமாக்க ஆயுளை நீட்டிக்கும் என ஏடுகளில் குறிப்புகள் உண்டு.

ஆயுளை அதிகரிப்பதில் எட்டி கற்பத்திற்கு பெரும் பங்கு உண்டு. காபி டீக்கு மாற்றாகவும் இதனை பயன்படுத்தலாம் பனங்கற்கண்டு சேர்த்து. சிறப்பான பலன் உண்டு.

3.ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள மல்கான்கிரி பகுதியில் இருக்கும் பழங்குடியினர் எட்டிமரங்கள் அதிகமாக இருக்கும் பகுதியில் இருக்கும் வௌவால்களை கொன்று அதன் மாமிசத்தை பயன்படுத்தி குழந்தைகளுக்கு ஏற்படும் வலிப்பு நோயை குணபடுத்துகின்றனர் இதை நான் கண்டுணர்ந்த விடயம். வௌவ்வால்கள் எட்டி பழங்களை அதிகமாக விரும்பி உண்ணும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

4.சுத்தி செய்த எட்டிவிதைகளை தாது விருத்தி லேகியங்களில் சேர்ப்பார்கள் இது நரம்பு மண்டலம் சார்ந்த அனைத்தையும் துரிதமாக்கும்.

5.எட்டிமரத்தின் தண்டுபகுதியை(பட்டையை உரித்த பின்பு)எடுத்து காயவைத்து பொடித்து சலித்து வெந்நீரில் பயன்படுத்த வாதநோய்கள் தீரும். அதே வேலையில் எட்டி இலைகளை போட்டு தண்ணீரில் கொதிக்க வைத்து பயன்படுத்தி வர வாதம் சம்மந்தமான கோளாறுகளும் தீரும்.

6.மலைவாழ் மக்கள் உடலில் ஏற்படும் கட்டிகளை கரைக்க எட்டிமரத்தின் துளிரை அரைத்து வெண்ணெய் சேர்த்து தடவு கட்டிகள் கரைந்து அமுங்கி விடுகிறது. இப்போதும் வழக்கில் உள்ளது.

7.கடுமையான ஒற்றை தலைவலி தீர; கைபிடியளவு எட்டி கொழுந்து,20 மிளகு , 10 பள்ளு பூண்டு சேர்த்து நல்லெண்ணெய்யில் சேர்த்து காய்ச்சி தலைக்கு தேய்த்து குளித்து வர ஒற்றை தலைவலி தீரும்.

8. மிகச்சிறந்த வலி நிவாரணியாகவும்//மயக்க மருந்தாகவும் இதனை பயன்படுத்தலாம் நரம்புமண்டலத்தை பாதிக்காமல். எட்டிவிதையுடன் சிறிதளவுகஞ்சா சேர்த்து மயக்கமருந்து செய்யலாம். தமிழ் மருத்துவ முறைளில் இது உண்டு.

9.நரம்பு மண்டலம் மற்றும் உடலின் நச்சுகளை வெளியேற்றும் சிறந்த துணை மருந்து எட்டி மரத்தின் பொருட்கள்.

10.கல்லீரல் நோயான வரட்டுகாமாலைக்கு எட்டி இலை ஏலெட்டு கால் லிட்டர் தண்ணீரில் நான்கில் இரு பாகமாக காய்ச்சி கொடுக்க வரட்டு காமாலை குணமாகும்.
"எட்டி காய்த்தென்ன ஈயாதார் வாழ்ந்தென்ன" இந்த பழமொழியை ஏன் எதற்காக பயன்படுத்தினர் இதன் கால கட்டத்தை ஆய்வு செய்ய வேண்டும் ஏனெனில்
இப்பேர்பட்ட மதிப்பு மிக்க மூலிகை மரத்தை நாம் சரியாக பயன்படுத்த தவறியதற்கு பின்னால் உள்ள அரசியல் என்ன ஏன் என்பது விளங்கவில்லை….

இதனை சரியான முறையில் சுத்தி செய்து மட்டுமே பயன்படுத்த வேண்டியது அவசியம். 
சரியான முறையில் பயன்படுத்தாத போது உடலில் வாந்தியோ மயக்கமோ ஏற்பட்டால் நாவல் மரத்தின் பட்டையை கசாயமாக கொடுக்க குறைபாடு நீங்கும் .மேலும் எலுமிச்சை சாறு, சீரகதண்ணீர்,அகத்தி கீரை,புளித்தமோர் இதற்கு முறிவு மருந்து.

அடுத்த பதிவில் வேறொரு மூலிகை பற்றி பார்ப்போம்.

இன்னும் அறிவோம்...


இலவச சித்தா, ஆயுர்வேத மருத்துவ ஆலோசனை மற்றும் சந்தேகங்களுக்கு அழைக்கவும்...

பேரன்புடன்….
சுதாகர் G வைத்யா
நாடி பரிசோதனை மற்றும் மருத்துவ ஜோதிட ஆராய்ச்சியாளர்.

பாரம்பரிய மருத்துவத்தில் எங்களின் குறிகோள் உடல் நலம் மற்றும் சுகாதாரத்தை காப்பதே… இங்கு ஆயுர்வேதம், சித்தா, மற்றும் பிற மருத்துவ அறிவியலின் ஊடாக நாங்கள் தனிப்பட்ட ஆலோசனைகள், மற்றும் நோய் தீர்க்கும் சிகிச்சைகள், சுகாதாரம் மற்றும் அழகு தொடர்பான சேவைகளை வழங்குகிறோம்.

மேலும் மூலிகைகள் மற்றும் சித்தா, ஆயுர்வேத மருத்துவம் பற்றிய உங்களது சந்தேகங்களுக்கும், ஆலோசனைக்கும் தொடர்பு கொள்ளவும்…
Mayura Vedic Pharmacy
#40, Old Busstand Commercial Complex,
Vellore - 632 004.  Call : 90430 25336

Mayura Vaidya Salai
(Holistic Healing Solutions)
Near Vani Vidyalaya School, 
Katpadi – 632 006.  Call : 90421 35336

#அக்கறை #உடலும் #உயிரும் #மனம் #மயூரா #ஆயுர்வேதம் #சித்தா #நாடிபரிசோதனை #மருத்துவஜோதிடம் #வேலூர்

அகத்தியர் கூறும் கர்மவினை...

அகத்தியர் கூறும் கர்மவினை

கர்மவினை தான் நோய்கள் தோன்ற காரணம் - அகத்தியர் சித்தர்

விதியைப் பற்றியும், கர்மவினை பற்றியும் உலகம் முழுவதும் பரவலான நம்பிக்கை மக்களிடையே இருந்து வருகின்றது.''
இதில் நோய்கள் தோன்றுவதே கர்மவினையால் தான் என்ற கருத்தை பொதுவாக இன்றைய சித்த மருத்துவம் தவிர எந்த ஒரு மருத்துவ முறைகளிலும் ஏற்றுக் கொள்வதில்லை.

அதே சமயம் சித்தமருத்துவ முறையிலும் இதனை ஆதாரங்களுடன் விளக்குகின்றது.
சித்தர் அகத்தியர் பெருமான் இயற்றிய பல லட்சம் பாடல்களில்
"அகத்தியர் கன்ம காண்டம் -300" என்ற சிறப்பு வாய்ந்த நூலில் எந்த வித கர்ம வினையினால் என்னென்ன நோய்கள் தோன்றும் என மிகத்தெளிவாக விளக்கமளிக்கின்றார்.

பசுமையாய் வளர்ந்த இளம் செடி,கொடிகளை வெட்டுவதும்,சிறு பூச்சிகளின் கை, கால்களை வெட்டினால் "வாதநோய் - பக்கவாதம்" வரும்.

பிறர் குடியை கெடுத்தல்,நல்லோர் மனதை நோகச் செய்தல், பிறர் பசியில் இருக்க அவர் பார்வையில் தான் உணவு உண்டால் வரும் நோய் "குன்மநோய் எட்டு" அதாவது அல்சர், குடற் புண்
,இதில் எட்டு வகை நோய் வரும்.[இன்று ஏராளமான பேருக்கு இந்நோய் உள்ளது]

மலராத அரும்பு பூக்களை கொய்தல், நந்தவனம் அழித்தல், பெற்றோர் மனம் நோகச் செய்தல் இதனால் "குஷ்ட நோய்" வரும்.
ஊர்ந்து செல்லும் சிறு விலங்குகள்,பறவைகள் போன்றவைகளைக் கொன்றால் வரும் நோய் "வலிப்பு நோய்" ஆகும்.
பிஞ்சு காய்கறிகள், இலை தழை பறித்தல்,பட்டை வெட்டுதல்,வேர் மற்றும் கொடிகள் வெட்டுவதால் பீனிசம்,[சைனஸ்],"ஒற்றைத் தலை வலி, மண்டைக்குத்து, மண்டைக் கரப்பான்" போன்ற நோய்கள் வரும்.
இளம் பயிரை அழித்தல், விந்து அழித்தல், கன்றுக்குரிய பாலைக் குடித்தல்,இதனால் "குழந்தையின்மை" குழந்தை பிறக்காது.

வீண் வம்பு பேசுதல், பிறரைப் பழித்தல், பொய் பேசல், ஆங்காரம் , ஆணவம் போன்ற வற்றால் "சோகை ,பாண்டு" [இரத்த சோகை, கல்லீரல் மண்ணீரல் வீக்கம்] நோய் வரும்.
உயிர்களை வதைத்தல்,ஊன் தின்னல், நன் மங்கையரைக் கற்பழித்தல், பிறர் செய்யும் புண்ணிய காரியங்களைக் கெடுத்தல், குடிநீரைக் கெடுத்தல் போன்றவற்றால் "கிராணி, கழிச்சல்",[சீத பேதி] நோய் வரும்.
பொய் மிக பேசல், பிறரை திட்டுதல், வஞ்சகம் பேசுதல்,கொடுத்த வாக்கை மறுத்தல், விஷமிடல் போன்றவற்றால் "கண், கன்னம், வாய்" பல் போன்றவற்றில் பல வகை நோய் வரும்.

சற்குருவை தூற்றுதல், வழியிலே முள்ளிட்டு வைத்தல் இவற்றால் "வண்டுகடி, ஊறல், கரப்பான்" நோய் வரும்.

வெடி வைத்தல், கல்லெறிதல், சிவ யோகிக்கு சினம் உண்டாக்குதல் இதனால் பிளவை எனும் "இராஜபிளவை" முதுகு தண்டில் வரும்.

பெண்களை மோகக்கண் கொண்டு, காம எண்ணத்துடன் உற்றுப் பார்த்தல்,கோழி ,ஆடு போன்றவற்றை வெட்டும் போது பார்த்தல், ஆலயம் செல்ல விரும்பாமை,தெய்வ நிந்தனை போன்றவற்றால் "கண்நோய் 96" - வகைகள் தோன்றும்.
அறியவும், இனியாவது வினைகளை சேர்க்காமல் வாழ்வோம்.

அடுத்த பதிவில் வேறொரு மூலிகை பற்றி பார்ப்போம்.

மேலும் மூலிகைகள் மற்றும் சித்த மருந்துகளை பற்றிய உங்களது சந்தேகங்களுக்கும், ஆலோசனைக்கும் தொடர்பு கொள்ளவும்…

இன்னும் அறிவோம்...

இலவச சித்தா, ஆயுர்வேத மருத்துவ ஆலோசனை மற்றும் சந்தேகங்களுக்கு அழைக்கவும்...

பேரன்புடன்….
சுதாகர் G வைத்யா
மயூரா ஆயுர்வேதாஸ்ரம்
நாடி பரிசோதனை மற்றும் மருத்துவ ஜோதிட ஆராய்ச்சியாளர்.

பாரம்பரிய மருத்துவத்தில் எங்களின் குறிகோள் உடல் நலம் மற்றும் சுகாதாரத்தை காப்பதே… இங்கு ஆயுர்வேதம், சித்தா, மற்றும் பிற மருத்துவ ஜோதிட அறிவியலின் ஊடாக நாங்கள் தனிப்பட்ட ஆலோசனைகள், மற்றும் நோய் தீர்க்கும் சிகிச்சைகள், சுகாதாரம் மற்றும் அழகு தொடர்பான சேவைகளை வழங்குகிறோம்.
மேலும் மூலிகைகள் மற்றும் சித்தா, ஆயுர்வேத மருத்துவம் பற்றிய உங்களது சந்தேகங்களுக்கும், ஆலோசனைக்கும் தொடர்பு கொள்ளவும்…

Mayura Vedic Pharmacy
#40, Old Busstand Commercial Complex,
Vellore - 632 004.  Call : 90430 25336

Mayura Vaidya Salai
(Holistic Healing Solutions)
Near Vani Vidyalaya School, 
Katpadi – 632 006.  Call : 90421 35336


#மனம் #ஆயுர்வேதம் #சித்தா #மயூரா #வேலூர்

உயிர்மூச்சு...

 8000 ஆண்டுகளுக்கு முன்னரே சித்தர்கள் கூறிய மூச்சு தத்துவம்
எங்கெல்லாம் பாம்பு படங்கள் சிலைகள் உள்ளனவோ அவைகள் எல்லாம் மூச்சுக்காற்றைக் குறிக்கும் அடையாளங்கள் ஆகும்.
நமது மூச்சுக்காற்றையே பாம்பாக உருவகப்படுத்தினார்கள்.
இரண்டு கண்கள், காதுகள் இருந்தாலும் பார்க்கும் பார்வையும், கேட்கும் சத்தமும் ஒன்றாகவே உள்ளன! பின் ஏன் இரண்டு ?
ஆனால் மூக்கிற்கு ஏன் இரண்டு துவாரங்கள்? இரண்டு துவாரங்களுமே ஒரே செய்கையினை செய்கிறதா? என்று ஆராய்ந்தால், இரண்டு துவாரங்களும் வெவ்வேறு இரண்டுவித செய்கையினை செய்வதை அறியலாம். மேலும் மூன்றாவதாக ஒரு செயலையும் செய்வதைக் காணலாம்!
1. மூக்கின் இடது நாசிதுவாரத்தின் வழியே நடைபெறும் சுவாசம் இடகலை எனப்படுகிறது. இதற்கு “சந்திரகலை” என்றொரு பெயரும் உண்டு.
2. மூக்கின் வலது நாசியில் நடைபெறும் சுவாசம் பிங்கலை எனப்படுகிறது. இதற்கு சூரிய கலை என்றொரு பெயரும் உண்டு.
3. இரண்டு நாடிகளிலும் ஒருசேர நடக்கும் சுவாசத்திற்கு சுழுமுனை என்று பெயர்.
ஆக இம்மூன்றுச் செயல்களையும் நமது நாசி செய்துவருகிறது. இதனை ‘சரவோட்டம்’ என்பார்கள்.(சரவணன்-சரம்-மூச்சு வணம்-செம்மை. மூச்சை செப்படுத்தியவன்) 
ஆட்காட்டி விரல்களையும் மூக்கின் நடுத் தண்டில் பக்கத்திற்கு ஒன்றாக வைத்து இயல்பாய் மூச்சை விட எந்த நாசியில் மூச்சு ஓடுகிறது என்பதை எளிதாய் கண்டறியலாம்.
இந்த சர ஓட்டம் இயற்கையாகவே சுமார் ஒன்றறை மணித்துளிகளுக்கு ஒருமுறை மாறி மாறி இயங்கும். இம்மாற்றத்தை நமது விருப்பத்திற்கு இனங்க மாற்றுவதுதான் ‘கலை’ என்கிறோம்.
நீண்டநாள் வாழ நாம் என்ன செய்ய வேண்டும்?
நாம் ஒரு நாளைக்கு 21600 முறை சுவாசம் செய்யவேண்டும். ( வடலூர் ஞானசபையினை சுற்றி 21600 வளையங்கள் கொண்ட இரும்புச் சங்கிலியினைப் பொருத்தியுள்ளார்கள்.)
1நிமிடத்திற்கு 15 மூச்சும், 
1 மணி நேரத்திற்கு 900 மூச்சும்; 
1 நாளிற்கு 21,600 மூச்சும் ஓடுகின்றது.
உயிர்மெய்யெழுத்துக்கள் 216 என்பது இந்த 21,600 மூச்சுக்களையே குறிக்கும் .
ஒரு மனிதன் தன் வாழ்நாளில் தினமும் 21,600 மூச்சுக்கு மிகாமல் உபயோகம் செய்தால் அவனுடைய ஆயுள் 120 ஆண்டுகளாகும்.
ஆனால் உட்கார்ந்திருக்கும் போது 12மூச்சும், 
நடக்கும் போது 18 மூச்சும், 
ஒடும்போது 25 மூச்சும், 
தூங்கும் போது 32 மூச்சும,; 
உடலுறவின் போதும், கோபம் முதலான உணர்ச்சிகளில் சிக்கும் போது 64 மூச்சும் 
1 நிமிடத்தில் ஓடுகின்றன.
இந்த மூச்சினுடைய அளவு எவ்வளவு மிகுதியாகிறதோ அதற்கு தகுந்தாற்போல் ஆயுள் குறைகிறது.
இவ்வுலகில் மிக அதிக காலம் உயிர் வாழும் உயிரினம் ஆமை. அது ஒரு நிமிடத்திற்கு மூன்று முறை தான் சுவாசிக்கும். இதன் ஆயுள் சராசரியாக 200 வருடங்களுக்கும் மேல்.
மூச்சின் ஆதாரம் — நுரையீரல்.
என்ன செய்ய வேண்டும் ?
காற்றோட்டமான அறை
ஏசி பயன்பாடில்லா வீடு
செயற்கை குளிர் பாணங்கள் பண்டங்கள் தவிர்த்தல்(ஐஸ்கிரீம்,கூல்டிரிங்ஸ்)
கடினமாக செரிக்கும் உணவுகளை தவிர்த்தல்
முன் தூங்கி முன் எழுதல்
கோபம் போன்ற உணர்ச்சிகளை தவிர்த்து -உணர்வில் நிலைத்தல்
#பசித்துப்_புசி
#பேச்சைக்குறை
#மூச்சைக்கவனி
அடுத்த பதிவில் வேறொரு முக்கிய தகவலை பற்றி பார்ப்போம்...
இன்னும் அறிவோம்...

இலவச சித்தா, ஆயுர்வேத மருத்துவ ஆலோசனை மற்றும் சந்தேகங்களுக்கு அழைக்கவும்...

பேரன்புடன்….
சுதாகர் G வைத்யா
நாடி பரிசோதனை மற்றும் மருத்துவ ஜோதிட ஆராய்ச்சியாளர்.

பாரம்பரிய மருத்துவத்தில் எங்களின் குறிகோள் உடல் நலம் மற்றும் சுகாதாரத்தை காப்பதே… இங்கு ஆயுர்வேதம், சித்தா, மற்றும் பிற மருத்துவ அறிவியல்களின் ஊடாக நாங்கள் தனிப்பட்ட ஆலோசனைகள், மற்றும் நோய் தீர்க்கும் சிகிச்சைகள், சுகாதாரம் மற்றும் அழகு தொடர்பான சேவைகளை வழங்குகிறோம்.

மேலும் மூலிகைகள் மற்றும் சித்தா, ஆயுர்வேத மருத்துவம் பற்றிய உங்களது சந்தேகங்களுக்கும், ஆலோசனைக்கும் தொடர்பு கொள்ளவும்…
Mayura Vedic Pharmacy
#40, Old Busstand Commercial Complex,
Vellore - 632 004.  Call : 90430 25336

Mayura Vaidya Salai
(Holistic Healing Solutions)
Near Vani Vidyalaya School, 
Katpadi – 632 006.  Call : 90421 35336


#மனம் #ஆயுர்வேதம் #சித்தா #மயூரா #வேலூர்


கோமதி சக்கரம்…

 கோமதி சக்கரம்:



துவாரகா சிலா,துவாரகா கல், விஷ்ணு சக்ர கல், பிரதீக்கல்,நாராயணக்கல், திருவல சுழி கல்,சொர்ணக்கல்}
கோமதி நதியில் கிடைக்கும். கோமதி சக்கர கல்லை வணங்கினால் முக்தி தரும் அயோத்தியா, மதுரா, ஹரித்துவார், காசி, காஞ்சி, உஜ்ஜயினி(அவந்திகா), துவாரகை ஆகிய ஏழு ஷேத்திரங்களை வணங்கிய பலன் கிட்டும்.
கோமதி ஆறு,கங்கையில் உருவாகி பிரிந்து இறுதியாக கடலில் கலந்து முடியும் இடம் துவாரகையாகும்.
துவாரகையின் பவித்ரமான கோமதி நதியில் அஷ்டலட்சுமியும் குடிகொண்டதால் தான் இந்நகரமே ஜொலிக்கின்றது. அஷ்டலட்சுமிக்கு இணையாக பகவானால் உருவாக்கப்பட்ட மேலான செல்வமே கோமதி சக்கரம். கோமதி சக்கரத்தை வழிபட்டதால்தான் துவாரகை மக்கள் நிம்மதியாகவும், சந்தோஷமுடனும் வாழ்ந்தனர்.
கோமதி சக்கர கல்லை பூஜிப்பவர்கள் மோட்சம் அடைகிறார்கள்.ஸ்ரீ கிருஷ்ணர் கோமதி கல் சுழியின் மீதமர்ந்தே ஆட்சி செய்ததாக ஐதீகம். துவாரகையில் கிருஷ்ணன் மக்கள் சங்கடம் போக்கி கொள்ள கோமதி சுழியை பதித்து கொடுத்துள்ளார் என்ற ஐதீகமும் உண்டு.
கோமதி ஆறின் பிறப்பிடம் அதன் சிறப்பு
லக்னோ மற்றும் உத்திரபிரதேச மாநிலத்தில் கோமதி ஆறு ஓடுகிறது. இது கங்கை நதியின் கிளை ஆறு ஆகும்.
லக்னோவில் கோமதி நதியும், அயோத்யாவில் சரயு நதியும் உருவாகிறது. இவ்விரு நதிகளிலும் அபூர்வமாக கோமதி சக்கரம் கிடைக்கிறது.
அதிஷ்டக் கற்கள் அனைத்திற்கும் முன்னோடியாகவும், நோய் தீர்க்கும் வைத்திய கற்களாகவும், வசிய கற்களாகவும் கோமதி சக்கர கல் பயன்படுகிறது. இதை பூஜித்துதான் ஆக வேண்டும் என்ற அவசியம் இல்லை. கோமதி சக்கரத்தை வைத்துக் கொண்டிருந்தாலே போதும். அதிஷ்டம் தன்னால் வரும். ஆனால் அது கங்கை நீரை சார்ந்ததாக இருக்க வேண்டும்.
மன்னர்களும் சுல்தான்களும் இதை மோதிரமாகவும் டாலராகவும் வாஸ்து குறை, நோய்குறை ,தோஷ குறை நீக்க பயன்படுத்தினர்
கோமதி சக்கர மகிமைகளும் அற்புத பலனும்
சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு என்று கூறுவார்கள். எச்செயலை செய்ய துவங்கும் முன்னரும் பிள்ளையார் சுழிபோட்டு செயல்களை செய்ய துவங்கினால் லாபகரமாக முடிவு இருக்கும் என்பர். பிள்ளையார் சுழிக்கு இன்னொரு பெயர்தான் கோமதி திருவல சுழியாகும். இதன் உட்பொருள் சுபம் லாபம் என்பதாகும்.
இந்த சுழியை ஒருவர் கண்டாலே அவர் மூலாதாரத்தை தொட்டதாகவும் முதற்கடவுளை வணங்கியதாகவும் அர்த்தமாகும். ஆதியில் எல்லா சுழிக்கும் முதல் சுழி கோமதி சுழியாகும். பிள்ளையாரின் துதிகை சுழியை பார்த்தால் வெற்றியாகும். அதே போல் கோமதி சுழியை பார்த்தாலே வெற்றியாகும்.சுதர்சன சக்கரத்திற்கு ஆதிசக்கரம் இந்த கோமதி சக்கரமாகும்.
கோமதி கல் ஆத்மாவை இணைத்து கோரிக்கை என்னவோ அதற்கு செயல்படுத்தினால் போதும். அக்கோரிக்கை நிகழும்.
ஒரே ஒரு சக்கரம் இருந்தால்கூட பலன் கொடுக்கும். ஆனால் கங்கை நீர் அருகில் இருக்க வேண்டும்.
இதன் உள்ளடங்கிய சக்திகள்
வலம்புரி சங்கிலும் மேல்புறத்தில் திருவல சுழி இருக்கும். இதற்க்கினையான இந்த கோமதி சக்கரத்தை வைத்து பூஜிக்கும் போது வலம்புரி சங்கின் பலனும் சேர்ந்து கிடைத்துவிடும்.
கோமதி சுழி பசுவிடம் நிறைந்துள்ளது . கண்களில், முதுகில், கால் குளம்பில், முதுகில், வால் மேல்பகுதியில், நெற்றியில், கழுத்தில், அடிவயிற்றில், குதத்தில் என பல சுழிகளை பசு மட்டுமே அதிகம் பெற்றிருக்கும். அதனால் தான் பசுவிற்கு தனி இடம் கொடுக்கப்படுகிறது
கோமதி சக்கரத்தை வலம்புரி சங்காக நினைத்தால் வலம்புரி சங்கின் பலனைத் தரும். பசு மாதாவாக நினைத்தால் பசுவின் பலனைத் தரும். பிடித்த தெய்வங்களாக நினைத்தும் வழிபாடுகள் செய்தால் அதனதன் பலனைக் கொடுக்கும்.
சாலி கிராமத்தின் உள் ரகசியமே இந்த திருவல சுழி சக்கரம் தான். இதை வைத்து பூஜிக்கும்போது பிரமிடு, மகாமேரு ஸ்ரீ சக்கரம் தனியாக வைத்து பூஜித்து அடையும் சக்தியை இந்த கோமதி சக்கரம் ஒன்றிலேயே பெறலாம்.
கோமதி சக்கரத்தை வழிபாடு செய்தால் மூன்று லோகத்தையும் வழிபட்ட பலன் கிட்டும். சிவபெருமான் சிரசு முடியின் உச்சி கங்கை சுழியும் நம் தலையில் விழும் சுழியும் இதே திருவல சுழிதான். பசுவின் பார்வை வீட்டில் பட்டால் பல பாவங்கள் விலகும். பசுவின் திருஷ்டி சக்தியே இந்த கோமதி சக்கரமாகும். இது வீட்டின் எந்த பாகத்தில் வைத்தாலும் திருஷ்டி விலகும். நாகத்தின் சுழியும் இதுவேயாகும். இந்த சுழியில் நாகலட்சுமி குடிகொண்டுள்ளாள். எனவே நாகதோஷங்கள் விலகிவிடும்.
சிவப்பு வண்ண துணியின் மேல் வைத்து பயன்படுத்தினால் இந்த கோமதி சக்கரம் மகாலட்சுமியின் அருளைப் பெற்றுத்தரும்.
சகல தோஷமும் கோமதி சக்கரத்தால் மறைந்துவிடும். பகவான் ஸ்ரீமன் நாராயணர் அளித்த திருவல சுழி சக்கரம் உள்ளவரை எத்தோஷமும் நெருங்குவதில்லை.
பயன்கள்
லிங்க வடிவமுள்ள சாலிகிராமத்தையும், ஸ்ரீ சக்கரத்தையும், வலம்புரி சங்கையும் சுத்தமற்றவர் பூஜித்தால் தரித்திரத்தில் தள்ளிவிடும். ஆனால் திருவல சுழி கொண்ட கோமதி சக்கரம் யார் வேண்டுமானாலும் பூஜிக்கலாம். ஆசாரம் ஒரு முக்கியமில்லை. மனமே முக்கியம்.
கோமதி சக்கரம் பயன்படுத்தும் போது சுழி ஆகாயத்தை பார்த்தார் போல் வைக்க வேண்டும். பூஜைக்கு பின் எப்படி வேண்டுமானாலும் வைக்கலாம்.
கோமதி சக்கரம் ஆண்டாண்டு காலமாக பலனளிக்கும். கோமதி சக்கரத்தை யார் தலையில் வைத்தும் ஆசிர்வாதம் செய்யலாம்.
ஸ்ரீராமர் ஆஞ்சநேயர் மூலம் சீதா தேவிக்கு அடையாளம் காட்ட கொடுத்த ரகுவம்ச கணையாழி கோமதி சக்கரம் பதித்தது.
கோமதி சக்கர வழிபாடு ஒருமுறை செய்தாலோ அல்லது நினைவு கூர்ந்தாலே சகல பாவமும் விலகும்.
புண்ணியம் செய்யும் மனிதருக்கே கோமதி சக்கரம் கையில் கிடைக்கும். கங்கை தீர்த்தம் பூஜித்தாலும் அவர்களின் குடும்பத்திலுள்ள பாவ சாபங்களை கங்கை நீர் ஈர்த்துக்கொள்ளும். கோமதி சக்கரம் செல்வ பெருக்கத்தை தொழில் பெருக்கத்தை உண்டாக்கும். நிம்மதியைக் கொடுக்கும்.
இதை எவரும் ஆராதிக்கலாம். இதை வைத்திருந்தாலே நாகதோஷம் விலகும். பரிகார ஷேத்ரம் எங்கும் போக வேண்டியதில்லை. கோமதி சக்கரம் ஒரு உயிர்கல் வகையாகும். வளரக்கூடியதாகும். இது எல்லா அதிஷ்ட கற்களுக்கும் மேலானதாகும். இதன் சுழியை சற்று நேரம் உற்று பார்த்து கொண்டிருந்தாலே சில மாறுதல் மனத்திரையில் தெரிவதை உணரலாம்..
கோமதி சக்கர உதவியால் குறை அகன்று புகழுடனும் நிம்மதியுடனும் வாழலாம். கோமதி சக்கரத்தில் பெயரை ஓதி செம்பு சொம்பில் போட்டு தண்ணீர் ஊற்றி அந்த நீரை விநாயகருக்கு அபிஷேகம் செய்தால் சக்தி பன்மடங்காக உயர்வதைக் காணலாம்.
இந்த முறையில் தொழில் முன்னேற்றமும் குடும்ப மேன்மையும் அடையலாம். பயன்படுத்திய கோமதி சக்கரத்தை குடும்பத்தாருக்கு கொடுக்கலாம். வெளி நபருக்கு கொடுக்ககூடாது. வேண்டுமானால் வேறொன்றை வாங்கிக்கொடுக்கலாம்.
கோமதி சக்கரம் உள்ள இடத்தில் சிவகோபம் சக்தி கோபம் உண்டாவதில்லை. இல்லத்தில் மூதேவி வணக்கத்திற்குரியவளாக மாறுவாள். கோமதி சக்கரத்தில் மகாலட்சுமியின் சின்னம் உள்ளதால் அவ்விடம் குபேர வாசம் உண்டாகும்.
அதிஷ்ட தேவதை தேடிவர காரணம் இக்கோமதி சக்கரம் சுதர்சன சக்கரத்தால் உருவானதால் இது இருக்கும் இடம் தீயசக்தி விலகுவதால் அதிஷ்ட தேவதை தேடிவந்து குடிகொள்கிறாள். இச்சுழி இருக்கும் இடத்தில் குழப்பம் இருப்பதில்லை. தன்னால் ஒரு வழி பிறக்கிறது.
நீத்தாருக்கு திதி கொடுக்காத தோஷம் முதல் கடின தோஷங்கள் இக்கோமதி திருவல சுழியை பயன்படுத்துவதன் மூலம் விலகுகிறது.
கோமதி சக்கரம் உள்ள இடத்தில் கூடுதல் சக்தி பெறுகிறது. அதனால் வாஸ்து குறைகள் யாவும் பாதிப்பதில்லை . தொழில் செய்யும் இடத்தில் ஒரு சிவப்பு துணியில் கோமதி சக்கரம் 13ஐ கட்டி ஈசான்ய பாகத்தில் வைத்தால் அல்லது கல்லா பெட்டியில் வைத்தால் தொழில் பணம் பெருகும்.
கோமதி சக்கரம் உள்ள இடத்தில் வலம்புரி சங்கை சிரமப்பட்டு வாங்க வேண்டிய அவசியமில்லை. கடின சுத்தமும் அவசியமில்லை. எனவே இதை வைத்திருந்தாலே போதும். நற்பலன் விளையும் அசுத்த தீட்டு பாதிக்காது .
கோமதி சக்கரம் ஆத்மாக்கள் ஆகும். அது யாருக்கு வேண்டுமானாலும் உதவி செய்யும். அந்த ஆத்மா கற்களுக்கு இடம் கொடுக்க வேண்டும். 13 கட்டங்களில் உள்ள நாமாக்களை சொல்லி அதனதன் இடத்தில் வைத்துவிட்டால் அது உயிர்ப்புடன் அதனதனுடன் தொடர்புகொண்டு அது உயிர் பெறும்.
படைக்கப்பட்ட உயிர்கள் அத்தனையும் சுழியுடனே படைக்கப்பட்டது. வலசுழி பொருள் எல்லாம் சுபமானது. சக்தி வாய்ந்தது என்பதால் தான் வலம்புரி சங்கு, வலம்புரி விநாயகர் என வலபக்க சக்தி அதிகமாக நேசிக்கப்படுகிறது. தெய்வவலமும் வலபக்கமே சுற்றக் கொண்டிருக்கிறோம்.
பூமியில் மனிதனுக்கு 27 நட்சத்திரங்கள் ஆளுகின்றன. அது ஒவ்வொரு மனிதனுக்கு ஒரு நட்சத்திரத்தை ஒதுக்கி ஆளுகைக்கு உட்படுத்தப்படுகிறது. அது மனிதனின் குறிப்பிட்ட பாகத்தில் நட்சத்திர சக்கரம் மறைந்து செயல்படுகிறது. அவ்விடத்தை கண்டு உணர்ந்து தொட்டால் பலன் பெருகும்.
நட்சத்திரம்
அசுவினி, பரணி, கிருத்திகை-நெற்றி முழுவதும்.
ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை-நெற்றியை தவிர்த்து முகம் முழுவதும்.
புனர்பூசம், பூசம்-இரு தோள்களாகும்.
ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், அஸ்தம்-மார்பு பகுதி.
சித்திரை-வயிறு பகுதி.
சுவாதி, விசாகம் – புஜங்கள் இரண்டு.
அனுசம் – பாலின உறுப்பாகும்.
கேட்டை, மூலம் – இரு கைகளாகும்.
பூராடம், உத்திராடம் – தொடைகள் இரண்டு.
திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி ,ரேவதி-இரு கால்பாதங்களாகும்.
எங்கு வழிபாடு எத்தெய்வத்திற்கு செய்தாலும் நட்சத்திரத்தின் பாகம் எதுவோ அங்கு நினைவுகூர்ந்தோ தொட்டோ வணங்கினால் வேண்டுதல் நிறைவேறும்.
கோமதி சக்கரத்தால் பலன் பெரும் விதம்!
கோமதி யந்திரத்தை சாதாரணமாக கையில் வைத்திருந்தாலே நாம் கோரும் பலன் விரைவில் கிடைக்கும்,
வீட்டின் வாயிலில் 7 கோமதி சக்கரங்களை சிறிய சிகப்பு பட்டு துணியில் கட்டி தொங்கவிட, எதிர்மறை சக்திகள்,கோளாறுகள் விலகி நன்மைகள் பெருகும்.
வீட்டில் பூஜிக்கும் பொழுது 11 கோமதி சக்கரம், 11 மஞ்சள் நிற சோழிகள், குங்குமப்பூ, மஞ்சள் கட்டை, சந்தன கட்டை மற்றும் வெள்ளி நாணயங்கள் வைத்து பூஜிக்க பொருள் வரவு மேம்படும்.
தற்போது மோதிரமாகவும், கழுத்தில் அணியும் செயின் வடிவிலும் கிடைக்கிறது. விலை குறைந்த ஆனால் லட்சுமி அம்சமுள்ள நோய்கள் தீர்க்கவல்ல சிறிய சங்கு போன்ற கல். தொழில் முன்னேற்றம், கண் திருஷ்டி, பில்லி,சூனியம், வியாபார விருத்தி போன்றவற்றிற்கும் மிக சிறந்த தீர்வே இந்த கோமதி சக்கரம்.
வியாபாரத்திற்க்கு ஏழு சக்கரங்களை வைத்து பூஜிக்க செல்வம் பெருகும்.வாஸ்து தோஷம் விலக 11 சக்கரங்களை வீட்டில் வைக்க அல்லது புதைத்து வைக்க வாஸ்து தோஷம் விலகும்.ஜாதகத்தில் சர்ப்ப அல்லது நாக தோஷமுள்ளவர்களுக்கும் இது பரிஹாரமாக விளங்குகம்

அடுத்த பதிவில் வேறொரு மூலிகை பற்றி பார்ப்போம்.

மேலும் மூலிகைகள் மற்றும் சித்த மருந்துகளை பற்றிய உங்களது சந்தேகங்களுக்கும், ஆலோசனைக்கும் தொடர்பு கொள்ளவும்…

இன்னும் அறிவோம்...

இலவச சித்தா, ஆயுர்வேத மருத்துவ ஆலோசனை மற்றும் சந்தேகங்களுக்கு அழைக்கவும்...

பேரன்புடன்….
சுதாகர் G வைத்யா
நாடி பரிசோதனை மற்றும் மருத்துவ ஜோதிட ஆராய்ச்சியாளர்.

பாரம்பரிய மருத்துவத்தில் எங்களின் குறிகோள் உடல் நலம் மற்றும் சுகாதாரத்தை காப்பதே… இங்கு ஆயுர்வேதம், சித்தா, மற்றும் பிற மருத்துவ அறிவியல்களின் ஊடாக நாங்கள் தனிப்பட்ட ஆலோசனைகள், மற்றும் நோய் தீர்க்கும் சிகிச்சைகள், சுகாதாரம் மற்றும் அழகு தொடர்பான சேவைகளை வழங்குகிறோம்.

மேலும் மூலிகைகள் மற்றும் சித்தா, ஆயுர்வேத மருத்துவம் பற்றிய உங்களது சந்தேகங்களுக்கும், ஆலோசனைக்கும் தொடர்பு கொள்ளவும்…
Mayura Ayurvedasram (Vedic Pharmacy)
#40, Old Busstand Commercial Complex,
Vellore - 632 004.  Call : 90430 25336

Mayura Wellness Centre
(Holistic Healing Solutions)
Near Vani Vidyalaya School, 
Katpadi – 632 006.  Call : 90421 35336


#மனம் #ஆயுர்வேதம் #சித்தா #மயூரா #வேலூர்




“மூட்டு அகற்றுவது தீர்வு அல்ல; அதன் இயற்கை இயக்கத்தை மீட்டெடுப்பதே மருத்துவம்.”

மூட்டு வலிக்கு அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வா? உண்மை என்ன சொல்கிறது? ✨ மூட்டு வலி இன்று பலருக்கும் வாழ்க்கைத் தரத்தை குறைக்கும் ஒ...