About Me

My photo
Vellore, Tamil Nadu , India

Friday, September 30, 2022

ஆர்த்தரைட்டீஸினால் வரும் மூட்டுத் தேய்மானம்...

ஆர்த்தரைட்டீஸினால் வரும் மூட்டுத் தேய்மானம்...
அச்சுறுத்தும் ஆர்த்தரைட்டீஸ்... 
தீர்வு என்ன..?
மருத்துவ உலகுக்கு சவால்விடும் வகையில் மூட்டுத் தேய்மானம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. நடுத்தர வயதினர் மற்றும் முதுமைப்  பருவத்தினர் மட்டுமின்றி இளம் வயதினரும் மூட்டுத் தேய்மானத்துக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது. ஆர்த்தரைட்டிஸ் வருவதற்கான காரணம், அறிகுறிகள், அதன் வகைகள் பற்றிய பார்க்கலாம் வாருங்கள்...
ஆர்த்தரைட்டீஸால் இன்று ஏராளமானோர் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக முதுமைப் பருவத்தினர், உடற்பயிற்சி செய்யும் வழக்கம் இல்லாதவர்கள்  ஆகியோர் பெருமளவில் இவ்வகை மூட்டு எரிச்சலின் தாக்கத்திற்கு ஆளாகின்றனர். நம்மில் நிறையப் பேருக்கு டயாபட்டீஸ், எச்.ஐ.வி தொற்று போன்றவை பற்றி  நன்றாக தெரியும். ஆனால், மூட்டுத் தேய்மானம் பற்றிய விழிப்புணர்வு சற்று குறைவு. டயாபட்டீஸ், எச்.ஐ.வி கிருமியால் பாதிக்கப்பட்டவர்களைவிட மிக  அதிகமானோர் ஆர்த்தரைட்டீஸால் பாதிக்கப்படுகின்றனர்.

இதன் காரணமாக மூட்டு பற்றிய விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது. முக்கியமாக, ஆர்த்தரைட்டீஸ் ஏன் வருகிறது?  எதனால் வருகிறது? இதை எப்படி தவிர்க்கலாம்? போன்றவற்றிற்கான வழிமுறைகளைப் பொது மக்களிடத்தில் கொண்டு செல்ல வேண்டும். மருத்துவர்கள் சொல்கிற அறிவுரைகளைத் தவறாமல் அவர்கள் பின்பற்றி வந்தால், மூட்டு தேய்மானத்தைக் கட்டுப்படுத்தி, மேலும் மோசம் ஆகாமல் பார்த்துக் கொள்ளலாம்.  இன்றைய நிலையில் பொதுமக்களுக்கு இதுதான் அவசிய தேவையாக உள்ளது.    
நமது உடல் உறுப்புக்களில், முழங்கால் மூட்டுதான் அதிக அளவில் தேய்மானம் அடைகிறது. ஆர்த்தரைட்டீஸ் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு ஆரம்ப  காலகட்டத்தில் மூட்டில் சிறிது வலி மட்டும் காணப்படும். நடந்து போகும்போது, ஒருவருடைய கால்கள் நேராக இல்லாமல், வளைந்து காணப்படுவது  ஆர்த்தரைட்டீஸின் முற்றிய நிலையாகும். ஆரம்ப காலக்கட்டத்தில், மருத்துவர்கள்  அறிவுரைகளை முறையாகப்  பின்பற்றி, வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டால், அவர்களுக்கு மூட்டு தேய்மானம் அதிகம் ஆகாமல் இருக்கலாம்.

படிக்கட்டில் ஏறும்போதும், தரையில் உட்கார்ந்து எழும்போதும் மூட்டில் வலி உண்டாவதை ஆர்த்தரைட்டீஸ் என சொல்வோம். இந்த நிலையில், வாழ்க்கை  முறையைச் சற்று மாற்றிக்கொள்ள வேண்டும். அதாவது, தரையில் உட்கார்ந்து எழுந்திருப்பதையும், படிக்கட்டில் ஏறுவதையும் தவிர்க்க வேண்டும். இதனுடன்  சமமான தரையில் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். எவ்வளவுக்கு எவ்வளவு நடக்கிறார்களோ, அந்த அளவிற்கு அவர்களுக்கு பயன் கிடைக்கும். அவ்வாறு  செய்வதால், மூட்டைச் சுற்றியுள்ள தசை வலுப்பெறும். இதன் காரணமாக மூட்டு வலி கொஞ்சம்கொஞ்சமாக குறையத் தொடங்கும்.
மேலும், ஸ்டேஜ் ஒன் ஆர்த்தரைட்டீஸிலிருந்து, ஸ்டேஜ் 2 ஆர்த்தரைட்டீஸ்க்குப் போவது தடுக்கப்படும். இதைச் செய்வதற்கு, வாழ்க்கை முறை மாற்றங்களே  போதுமானது. இன்றைய சூழலில், எல்லோரும் அவசரகதியில்தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். யாருமே, பொறுமையாக உட்கார்ந்தோ, நடந்தோ  வேலைகளைச் செய்வது கிடையாது. வீட்டைவிட்டு வெளியே இறங்கினால் காரிலோ, டூ வீலரிலோதான் பயணிக்கிறோம். நடத்தல் மற்றும் மிதிவண்டி ஓட்டுதல்  சுத்தமாக கிடையாது. இது மாதிரியான உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வந்தால், மூட்டைச் சுற்றியுள்ள தசைகள் எல்லாம் பலம் அடையும்.
மூட்டு தேய்மானம் சீக்கிரம் வராது. இன்று பெரும்பாலான பெண்கள் சமையல், வீட்டு வேலைகள் செய்கிறபோது ஒரு நாளைக்குச் சுமார் 100 தடவையாவது  உட்கார்ந்து எழுந்திருக்கின்றனர். இது ஒருவகையில் உடலுக்கான பயிற்சியாக இருந்தாலும் மூட்டுப்பகுதி பலவீனமாகும். எனவே, பெண்கள் ஒருமணி நேரம்  நடைப்பயிற்சி செய்து வந்தால் காலின் தசைப்பகுதி வலுவாக இருக்கும். இதனால், அவர்களுக்கு வலியோ, தேய்மானமோ வராது. எனவே, இன்றைய வாழ்க்கை  முறை சூழலில், உடற்பயிற்சி செய்தல் என்பது அவசியமான ஒன்றாக திகழ்கிறது.

எது சிறந்த உடற்பயிற்சி?

உடற்பயிற்சியில் சைக்கிளிங் ரொம்பவும் நல்லது. ஏனென்றால், உட்கார்ந்த நிலையில் சைக்கிளிங் பண்ணுவதால், நமது உடல் எடை மூட்டுப்பகுதிக்கு வராது.  இதனால், மூட்டைச்சுற்றியுள்ள தசைப்பகுதிகள் எல்லாம் வலுவானதாக ஆகும். ஆனால், எடுத்த உடனே ஒரு மணி நேரம், இரண்டு மணிநேரம் சைக்கிளிங்  செய்தால் மூட்டு வலி வந்துவிடும். ஏனென்றால், நம்முடைய தசைப்பகுதி அவ்வளவு வலுவாக இருக்காது. எனவே, தினமும் ஆரம்ப நிலையில் 10 அல்லது 15  நிமிடம் சைக்ளிங் பண்ணலாம். தசை வலுவாக ஆன பிறகு, கொஞ்சம்கொஞ்சமாக சைக்கிளிங் பண்ணும் நேரத்தை அதிகரிக்கலாம்.

இதன் காரணமாக ஆர்த்தரைட்டீஸ் பாதிப்புக்குள்ளாவது தள்ளிப்போகும். மூட்டு பிரச்னையை சரி செய்வதில் நீச்சல் முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் நீருக்குள்  உடற்பயிற்சி செய்வதால், மூட்டுப்பகுதிக்கு அதிர்வு நேராது. ஓடும்போது, கால்களில் ஒருவித அதிர்வு இருக்கும். எனவே, ஆர்த்தரைட்டீஸ் வராமல் தடுப்பதற்கு  சைக்கிளிங் மற்றும் ஸ்விம்மிங் மிகச்சிறந்த உடற்பயிற்சியாகும். சைக்கிளிங் பண்ண ஆரம்பித்தால் மூட்டு இன்னும் பலம் பெறும். இவையெல்லாமே ஸ்டேஜ்-1  ஆர்த்தரைட்டிஸுக்கான வழிமுறைகள்.

ஸ்டேஜ் - 2 ஆர்த்தரைட்டிஸ்...

ஸ்டேஜ்-2-வில் மூட்டு கொஞ்சம் பலவீனமாகும். கொஞ்ச நேரம் நடந்தாலே வலி வர ஆரம்பித்து விடும். காலையில் எழுந்து 10 நிமிடம் நடந்தாலே வலி  வந்துவிடும். காலை நேரத்தில் நம்முடைய மூட்டுகள் எல்லாம் இறுக்கமாக  காணப்படும். சாதாரணமாக நீட்டி, மடக்க முடியாது. அதாவது, Flexible-ளாக  இருக்காது. இதனை மார்னிங் ஸ்டிஃப்னஸ் என்று சொல்வோம். முக்கியமாக ஸ்டேஜ்-2 வில் படிக்கட்டு ஏறும்போது வலி இருக்கும்.
ஏனென்றால், மூட்டை மடக்கி ஸ்டெப்ஸ் ஏறும்போது, உடல் வெயிட்டில் 3 மடங்கு பிரஷர் வரும். உதாரணமாக, ஒருவர் 60 கிலோ எடை கொண்டு இருந்தால்,  மாடிப்படி ஏறும்போது, 180 கிலோ அளவிற்கு மூட்டில் பிரஷர் உண்டாகும். அதனால்தான், அந்த ஸ்டேஜில் வலி உண்டாகிறது. அதேநேரம் நாம் சாதாரணமாக  நடக்கும்போது, அவ்வளவு பிரஷர் வராது. வலி அதிகமாக அதிகமாக, படிக்கட்டில் ஏறி இறங்குவது, தரையில் உட்கார்ந்து எழுந்திருப்பது ரொம்ப கஷ்டமாக  இருக்கும். நீண்ட தூரம் நடக்க முடியாது.

பரிசோதனைகள்... சிகிச்சைகள்....

ஆர்த்தரைட்டீஸால் பாதிக்கப்பட்டவர்களை வெறும் எக்ஸ்-ரே எடுத்தால் போதுமானது. அவர்கள் எந்த ஸ்டேஜில் இருக்கிறார்கள் என்பது தெரிந்துவிடும். MRI  ஸ்கேன் எல்லாம் எடுக்கத் தேவையில்லை. இந்த ஸ்டேஜுக்கு மருந்து, மாத்திரைகள் மற்றும் ஜாயின்ட் வைட்டமின் தரலாம். இவ்வாறு செய்வதால், நிலைமை  மோசமாகாமல் இருக்கும். மருந்து, மாத்திரைகள், ஜாயின்ட் வைட்டமின் கொடுத்து சரி செய்யலாம்
அதாவது, எலும்பும், எலும்பும் சேருகின்ற இடத்தில் வழவழப்பான திரவம் இருக்கும். அதை புதுப்பிக்கும் வகையில் ஆயுர்வேத மருத்துவத்தில் உள்ளுக்கு தன்வந்தரம தைல எண்ணெய் மற்றும் ஷீரபலா தைல எண்ணைய் எடுக்கலாம், மேலும் எலும்புகள் தேயத்தேய, இந்த திரவம் குறையும். இதனால், வழுவழுப்பான கார்டிலேஜ் மறைந்து விரிசல் உண்டாகும். எனவே, அடியில் உள்ள எலும்பு வெளியே  தெரிய ஆரம்பிக்கும். கார்டிலேஜ்ஜில் வலி தெரியாது. ஆனால், அடியில் உள்ள எலும்புகள் உராய ஆரம்பிக்கும்போதுதான் வலி தெரிய ஆரம்பிக்கும். ஸ்டேஜ் -2  ஆர்த்தரைட்டீஸ்ஸில் எலும்புகள் வெளியே தெரிய, எலும்புகள் தேய ஆரம்பிக்க தொடங்கும்.
ஆகவே, ஆர்த்தரைட்டீஸின் தொடக்க நிலையிலேயே, முறையான சிகிச்சைகளைத் தொடங்கி, அது இன்னும் மோசமாகாமல் தவிர்ப்பதுதான் நாம் முதலில்  செய்ய வேண்டிய கடமையாகும். ஆர்த்தரைட்டீஸின் பாதிப்பில் Early Stage-ல் இருப்பவர்கள், ஐ.டி. கம்பெனிகளில் பணிபுரிபவர்கள் மற்றும் யாரெல்லாம்  செண்டரி வாழ்க்கை முறையில் உள்ளார்களோ, அவர்கள் உடலுக்கு இயக்கம் அளிக்கும் அளவு செயல்பாடுகளை உண்டாக்கிக் கொள்வது நல்லது. தற்போது,  உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டுமென்ற விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. அதனால் சித்தா, ஆயுர்வேதா மற்றும் நமது பாரம்பரிய சிகிச்சை எடுத்துக்கொண்டு வலி  இல்லாமல் நடக்கலாம்,பயப்படத் தேவையில்லை...

இன்னும் அறிவோம்

சித்தமருத்துவத்தில் எங்களின் குறிகோள் உடல் நலம் மற்றும் சுகாதாரத்தை காப்பதே… இங்கு ஆயுர்வேதம், சித்தா, மற்றும் பிற மருத்துவ அறிவியல்களின் ஊடாக நாங்கள் தனிப்பட்ட ஆலோசனைகள், மற்றும் நோய் தீர்க்கும் சிகிச்சைகள், சுகாதாரம் மற்றும் அழகு தொடர்பான சேவைகளை வழங்குகிறோம்.

சித்த மருத்துவம் பற்றியும் இங்கு பதிவிடப்படும் தகவல்களை பற்றியும் படித்து பயன்பெற எங்கள் சமூக வலைதளம் மற்றும் இணையதள பக்கத்தை தொடர வேண்டுகிறோம்.

இலவச சித்தமருத்துவ ஆலோசனைக்கு...
பேரன்புடன்….
சுதாகர் G வைத்யா
மயுரா ஆயுர்வேதாஸ்ரம்
நாடி பரிசோதனை மற்றும் மருத்துவ ஜோதிட ஆராய்ச்சியாளர்.

பாரம்பரிய மருத்துவத்தில் எங்களின் குறிகோள் உடல் நலம் மற்றும் சுகாதாரத்தை காப்பதே… இங்கு ஆயுர்வேதம், சித்தா, மற்றும் பிற மருத்துவ அறிவியல்களின் ஊடாக நாங்கள் தனிப்பட்ட ஆலோசனைகள், மற்றும் நோய் தீர்க்கும் சிகிச்சைகள், சுகாதாரம் மற்றும் அழகு தொடர்பான சேவைகளை வழங்குகிறோம்.

மேலும் மூலிகைகள் மற்றும் சித்தா, ஆயுர்வேத மருத்துவம் பற்றிய உங்களது சந்தேகங்களுக்கும், ஆலோசனைக்கும் தொடர்பு கொள்ளவும்…

Mayura Vedic Pharmacy
(Siddha & Ayurvedha)
#40, Old Busstand Commercial Complex,
Near Thiruvalluvar Statue,
Anna Salai. Vellore – 632 004
Call :90430 25336

Mayura Vaidya Salai 
(Holistic Healing Solutions)
Near Vani Vidyalaya School 
V.G.Nagar, Katpadi – 632 006
Call : 90421 35336


#மனம் #ஆயுர்வேதம் #சித்தா #மயூரா #வேலூர்

Wednesday, September 28, 2022

சித்த மருத்துவத்தின் எதிர்காலம் நாடி விஞ்ஞானம்

நாடி விஞ்ஞானம்
தமிழ் பாரம்பரிய மருத்துவமான சித்த மருத்துவமானது நமது வாழ்வியலில் பின்னிப் பிணைந்த வரலாற்றைக் கொண்ட ஒரு தொன்மை மருத்துமாக இருந்த போதும் நவீனமயமாதல் எனும் ஓட்டத்தில் அகப்பட்டு பாரியதொரு இடைவெளியைக் கொண்ட மருத்துவமாக இன்று காணப்படுகின்றது 
இந்த வகையில் நாடிப்பரீட்சை/ நாடிவிஞ்ஞானம்/ நாடிதர்ப்பணம் எனும் நாடி தத்துவத்தினை சித்த மருத்துவத்தின் அடிப்படை எனலாம். ஒரு மனிதனின் கர்ப்பப்பைக்குள் ஆரம்பிக்கும் வாழ்க்கை முதல் வாழ்வின் இறுதியான மரணம் வரையிலான அவன் சார்ந்த சகல விடயங்களையும் அறிந்து கொள்ளக்கூய ஆழமான தத்துவங்களை இந்நாடி விஞ்ஞானம் கொண்டிருக்கின்றது என்பதை உண்மையான மருத்துவத்தை கையாளும் அனைத்து மருத்துவர்களாலும் உணரப்பட்டுள்ளது.
நவீன மருத்துவத்தின் கீழ் உள்ளடங்கும் உடலின் உள்ளார்ந்த மாற்றங்களை அவதானிக்கக்கூடிய MRI Scan,CT Scan போன்ற தொழில்நுட்பம் சார்ந்த பரிசோதனைகளால் கூட கண்டுபிடிக்க முடியாத உடலியக்கம் சார்ந்த, கடந்த கால, நிகழ்கால மாற்றங்களுக்கு அப்பால் எதிர்காலத்தாக்கங்களை கூட எதிர்வு கூறக்கூடிய ஆழமான அறிவே நாடி விஞ்ஞானம் எனப்படும்.

எனினும் மேலைத்தேய விஞ்ஞானம் கூறும் Puls எனும் விடயத்திற்கு அப்பால் செல்லாமல் நம் நாடியை மட்டுப்படுத்தியதன் விளைவே இன்று நாடி விஞ்ஞானத்தின் சரியான அறிவையும் பயன்பாட்டையும் தவறவிட்டமைக்கு ஒரு பிரதான் காரணமாக கூறலாம்.

எனவே சித்த மருத்துவத்தின் தொண்மையான எதிர்காலமும், பயன்பாடும் சரியான நாடி அறிதல் மூலமே மீளவும் கட்டியெழுப்ப முடியும் என்பதே உண்மை...

இன்னும் அறிவோம்...

இலவச சித்தா, ஆயுர்வேத மருத்துவ ஆலோசனை மற்றும் சந்தேகங்களுக்கு அழைக்கவும்...

பேரன்புடன்….
சுதாகர் G வைத்யா
நாடி பரிசோதனை மற்றும் மருத்துவ ஜோதிட ஆராய்ச்சியாளர்.

பாரம்பரிய மருத்துவத்தில் எங்களின் குறிகோள் உடல் நலம் மற்றும் சுகாதாரத்தை காப்பதே… இங்கு ஆயுர்வேதம், சித்தா, மற்றும் பிற மருத்துவ அறிவியல்களின் ஊடாக நாங்கள் தனிப்பட்ட ஆலோசனைகள், மற்றும் நோய் தீர்க்கும் சிகிச்சைகள், சுகாதாரம் மற்றும் அழகு தொடர்பான சேவைகளை வழங்குகிறோம்.

மேலும் மூலிகைகள் மற்றும் சித்தா, ஆயுர்வேத மருத்துவம் பற்றிய உங்களது சந்தேகங்களுக்கும், ஆலோசனைக்கும் தொடர்பு கொள்ளவும்…
Mayura Vedic Pharmacy
#40, Old Busstand Commercial Complex,
Vellore - 632 004.  Call : 90430 25336

Mayura Vaidya Salai
(Holistic Healing Solutions)
Near Vani Vidyalaya School, 
Katpadi – 632 006.  Call : 90421 35336


#மனம் #ஆயுர்வேதம் #சித்தா #மயூரா #வேலூர்

Tuesday, September 27, 2022

எலும்புகளை காக்கும் கால்சியம்..

எலும்புகளை காக்கும் கால்சியம்...
நம் உடல் ஆரோக்கியத்துக்கு ஆதாரமான சத்துக்களில் மிக முக்கியமானது கால்சியம். உடலிலுள்ள நரம்பு மண்டலம், தசைகள், இதயம் என ஒவ்வொன்றின் சீரான இயக்கத்துக்கும் கால்சியம் தேவை. நரம்பு மண்டலத்திற்கு தகவல் அனுப்ப, எலும்புகள் மற்றும் பற்களைப் பலமாக வைத்திருக்க, ரத்தத்தை உறைய வைக்க, தசைகளை சுருக்க, இதயத்துடிப்பை சீராக வைத்திருக்க.... இப்படி இன்னும் பல விஷயங்களுக்கு கால்சியம் அவசியம்.

உடலுக்குத் தேவையான அளவு கால்சியம் கிடைக்காதபட்சத்தில் செல்களின் இயக்கத்துக்கு உடலானது எலும்புகளில் இருந்து கால்சியத்தை எடுத்துக்கொள்ளும். இதன் விளைவாக எலும்புகள் பலவீனமாகும். கால்சியம் பற்றாக்குறை என்பது கடுமையான மன அழுத்தம், தூக்கமின்மை எரிச்சல் உணர்வு போன்றவற்றுக்கும் காரணமாகும்.

வயதானவர்களுக்குத்தான் கால்சியம் பற்றாக்குறை ஏற்படும் என்று பலரும் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். விடலைப் பருவத்தினர், நடுத்தர வயதினர் மற்றும் முதியவர் என அனைவருக்குமே போதுமான கால்சியம் மிக மிக அவசியம். கால்சியம் அதிகமுள்ள உணவுகளை கண்டுபிடித்து சேர்த்துக்கொள்வது எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் கால்சியம் உடலில் கிரகிக்கப்படுவதைத் தடுக்கும் உணவுகளை தவிர்ப்பதும்.

மக்னீசியம் மற்றும் வைட்டமின் டி ஆகிய இரு சத்துக்களும் உள்ள உணவுகளையும் உட்கொண்டால்தான் உடலால் கால்சியத்தை முறையாக கிரகிக்க முடியும்.

கால்சியம் பற்றாக்குறையால் ஏற்படும் பாதிப்புகளில் பிரதானமானது ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்புப்புரை.
உறுதிக்கு உதாரணமாக சொல்லப்படும் எலும்புகள் ஆஸ்டியோபோரோசிஸ் பாதித்த பிறகு பஞ்சு போன்று மென்மையாக மாறிவிடும். இதனால் பாதிக்கப்பட்டோர் லேசாக தடுக்கி விழுந்து அடிபட்டுக் கொண்டாலும் அதிலிருந்து மீள்வது சிரமம். இது ஆண்-பெண் இருவரையும் பாதிக்கக்கூடியது என்றாலும் இதன் தாக்கம் பெண்களுக்கு சற்று அதிகம்.

ஆரோக்கியமான வாழ்க்கைக்குத் தேவையான கால்சியத்தை பெற உணவுகளே முதல் சாய்ஸ். அவற்றின் மூலம் கிடைக்கும் கால்சியம் போதவில்லை எனும்போதுதான் மருத்துவர்கள் சப்ளிமென்ட்டுகளை பரிந்துரைப்பார்கள். இன்னும் சொல்லப்போனால் உணவின் மூலம் கிடைக்கும் கால்சியமே முழுமையானது, பாதுகாப்பானது. மருத்துவ ஆலோசனை இன்றி அளவுக்கதிகமாக கால்சியம் சப்ளிமென்ட் எடுத்து கொள்வோருக்கு சிறுநீரகங்கள் மற்றும் இதய பாதிப்புகள் ஏற்படலாம்.

கால்சியம் சத்தை அதிகரிப்பது எப்படி?

*பால் ஒவ்வாமை இல்லாதவர்கள் கஞ்சி, சூப் என பெரும்பாலான திரவ உணவுகளில் பாலை சேர்த்துக் கொள்ளலாம்.

*ரொட்டி, வீட்டிலேயே செய்யும் கேக் போன்றவற்றிலும் பால் அல்லது தயிர் சேர்க்கலாம்.

*தக்காளி சாஸ், மயோனைஸ்
போன்றவற்றுக்குப் பதிலாக தயிரை விருப்ப உணவுகளுக்கு தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.

*மில்க் ஷேக், ஜூஸ் போன்றவற்றில் பால் அல்லது புளிக்காத தயிர் சேர்த்து கொள்ளலாம்.

*உடல் பருமன் பிரச்னை இல்லாதவர்கள் வாரத்தில் ஒன்றிரண்டு முறை சீஸ் சேர்த்த உணவுகளைச் சாப்பிடலாம்.

பால் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு...

*சூப், கிரேவி, குழம்பு என எல்லாவற்றிலும் கீரைகளைச் சேர்த்து செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளலாம். முட்டைக்கோஸ், ப்ரோக்கோலி, பூண்டு ஆகியவற்றை அதிகம் சேர்த்து கொள்ளலாம். வீட்டிலும் சரி, வெளியிடங்களில் சாப்பிடும்போதும் சரி... சாதத்தின் அளவைக் குறைத்து அதேபோல இரண்டு மடங்கு காய்கறிகள் மற்றும் கீரைகளைச் சேர்த்துக்கொள்ளலாம்.

பன்னீரில் தயாராகும் அத்தனை உணவுகளையும் டோஃபு எனப்படும் சோயா பன்னீரிலும் சுவை மாறாமல் தயாரிக்க முடியும். காலையில் காபி, டீ அருந்துவதற்கு முன்பு 10 பாதாம் மற்றும் வால்நட்ஸ் சாப்பிடுவதை வழக்கமாக கொள்ளவும். தினமும் ஒரு வேளையாவது கேழ்வரகு சேர்த்த ஏதேனும் ஒரு உணவை எடுத்து கொள்ளவும்.

வாரத்தில் இருமுறை பிரண்டையை உணவில் சேர்த்து கொள்ளவும். சிறுவயது முதலே குழந்தைகளுக்கு பிரண்டையை பழக்கப் படுத்தினால் வளர்ந்த பிறகு அவர்கள் எலும்பு பாதிப்புகள் ஏதும் இன்றி ஆரோக்கியமாக இருப்பார்கள்.40 பிளஸ் வயதிலிருக்கும் பெண்கள் கண்டிப்பாக இதை தவிர்க்க வேண்டாம்.


சப்ளிமென்ட்டுகள் எடுத்துக்கொள்வோர் கவனத்துக்கு...

உங்கள் உடலால் குறிப்பிட்ட அளவு கால்சியத்தை மட்டுமே கிரகித்து கொள்ள முடியும். எனவே, மருத்துவ ஆலோசனையின்றி நீங்களாக கால்சியம் சப்ளிமென்ட் எடுத்துக் கொள்ள வேண்டாம்.

மேலே சொன்ன உணவுகளின் மூலமே உங்களுக்குத் தேவையான மற்றும் இதர சத்துக்களை பெற முடியும். உணவுகளின் மூலம் இவற்றைப் பெற முடியாதவர்களுக்கு மட்டுமே மருத்துவர்கள் சப்ளிமென்ட்டுகளை பரிந்துரைப்பார்கள். எனவே, நீங்களாக மருந்துக் கடைகளில் கால்சியம் சப்ளிமென்ட்டுகளை வாங்கி சாப்பிடுவது எலும்புகளை இன்னும் அதிக ஆரோக்கியத்துடன் வைக்கும் எனத் தவறாகபுரிந்துகொள்ள வேண்டாம்.

மருத்துவர் உங்களுக்கு பரிந்துரைக்கும் கால்சியம் சப்ளிமென்ட்டுகளை அவர் பரிந்துரைக்கும் நேரங்களில், உணவுக்கு பிறகு எடுத்து கொள்ள வேண்டும். சிலருக்கு கால்சியம் சப்ளிமென்ட்டுகள் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். வயிற்று உப்புசம், வாய்வு பிரச்னைகள் இருந்தால் மருத்துவரிடம் சொல்லி மருந்துகளை நிறுத்தவோ, மாற்றவோ வேண்டும்.

கால்சியம் தவிர வேறு சில சத்துக்களும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு அவசியமானவை. அவற்றையும் இந்த நேரத்தில் தெரிந்து கொள்வோம்.

மக்னீசியம்

கால்சியம் சத்தானது முழுமையாக கிரகிக்கப்பட வேண்டுமானால், அதற்கு மக்னீசியம் சத்தும் அவசியம். உடலானது மக்னீசியம் சத்தை சேர்த்து வைப்பதில்லை. எனவே, அதை உணவின் மூலமே பெற வேண்டியது அவசியமாகிறது.

ஆண்களுக்கு தினமும் 400 முதல் 420 மில்லிகிராமும், பெண்களுக்கு 310 மில்லி கிராமும் மக்னீசியம் தேவை. பாதாம், பூசணி விதை, எள், ஆளி விதை, பசலைகீரை, கடல் உணவுகள், வெள்ளரிகாய் செலரி, ப்ரோக்கோலி போன்றவற்றில் மக்னீசியம் சத்து அதிகம் உள்ளது. அதிக அளவிலான சர்க்கரையும், ஆல்கஹாலும் மக்னீசியம் சத்தின் எதிரிகள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும்.

வைட்டமின்-டி

எலும்புகளின் ஆரோக்கியத்தில் இதன் பங்கு எவ்வளவு முக்கியம் என்பதை பற்றி முந்தைய அத்தியாயங்களில் விரிவாக பேசியிருக்கிறோம். கால்சியம் சத்து உடலுக்குள் கிரகிக்கப்பட அடிப்படையானது வைட்டமின் டி. தினமும் காலை மற்றும் மாலை வெயிலில் நிற்பது, நடப்பது போன்றவற்றின் மூலம் வைட்டமின் டி சத்தினைப் பெறலாம். இது தவிர செறிவூட்டப்பட்ட பால் உணவுகள், பருப்பு, தானியங்கள் மூலமும் வைட்டமின் டி-யை பெறலாம்.

பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் கே
இவை இரண்டும் சரிவிகிதத்தில் இருந்தால்தான் கால்சியம் பற்றாக்குறை தவிர்க்கப்படும். ஏற்கனவே பார்த்ததுபோல பால் உணவுகள், பச்சை காய்கறிகள், நட்ஸ், சிலவகை மீன்கள் போன்றவற்றில் இந்த இரு சத்துக்களும் உள்ளன.

வைட்டமின் சி மற்றும் 
வைட்டமின் பி 12

இந்த இரண்டு சத்துக்களும் எலும்புகளுக்கு அவசியம். இவை இரண்டும் ஆஸ்டியோபொரோசிஸ் பாதிப்பை தவிர்க்க உதவும் என்றுகூட சொல்லப்படுகின்றன. சிட்ரஸ் வகை பழங்களில் வைட்டமின் சி அதிகம் இருப்பதை நாம் அறிவோம். இவற்றை முறையாக உணவில் சேர்த்துக் கொள்ளும்போது எலும்பு இழப்பு தவிர்க்கப்படுகிறது. எலும்பின் அடர்த்திக்கு வைட்டமின் பி12 மிக முக்கியம். கடல் உணவுகள், முட்டை, பருப்பு வகைகளில் இது அதிகம்.

இயற்கையாக கால்சியம் சத்தை பெறுவது எப்படி?

பால் மற்றும் பால் உணவுகள், சிலவகை மீன்கள், பச்சை காய்கறிகள் மற்றும் கீரைகள், சோயா பன்னீர், பூண்டு மற்றும் ஆரஞ்சு ஜூஸில் கால்சியம் அபரிமிதமாக உள்ளது. சிலருக்கு பால் மற்றும் பால் உணவுகள் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்.

அதற்கு பயந்துகொண்டு அவர்கள் பால் உணவுகளை முற்றிலுமாக தவிர்ப்பார்கள். அதனால் அவர்களுக்கு கடுமையான கால்சியம் பற்றாக்குறை ஏற்படும். பால் உணவுகளுக்கு மாற்றாக கால்சியம் நிறைந்த மாற்று உணவுகளை அவர்கள் மருத்துவர்களிடம் கேட்டு எடுத்துக்கொள்ள வேண்டும்...

இன்னும் அறிவோம்...

சித்தமருத்துவத்தில் எங்களின் குறிகோள் உடல் நலம் மற்றும் சுகாதாரத்தை காப்பதே… இங்கு ஆயுர்வேதம், சித்தா, மற்றும் பிற மருத்துவ அறிவியல்களின் ஊடாக நாங்கள் தனிப்பட்ட ஆலோசனைகள், மற்றும் நோய் தீர்க்கும் சிகிச்சைகள், சுகாதாரம் மற்றும் அழகு தொடர்பான சேவைகளை வழங்குகிறோம்.
சித்த மருத்துவம் பற்றியும் இங்கு பதிவிடப்படும் தகவல்களை பற்றியும் படித்து பயன்பெற எங்கள் சமூக வலைதளம் மற்றும் இணையதள பக்கத்தை தொடர வேண்டுகிறோம்.

Mayura Ayurvedasram
Siddha & Ayurvedha Pharmacy
#40, Old Busstand Commercial Complex,
Near Thiruvalluvar Statue,
Anna Salai. Vellore – 632 004
Call :90430 25336
Mayura Wellness Centre
(Holistic Healing Solutions)
#19, 10th East Main Road,
Opp EB Office, Katpadi – 632 006
Call : 90421 35336

https://mayuraayur.com/pages/appointment
Visit Online Store : www.mayuraayur.com

“மூட்டு அகற்றுவது தீர்வு அல்ல; அதன் இயற்கை இயக்கத்தை மீட்டெடுப்பதே மருத்துவம்.”

மூட்டு வலிக்கு அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வா? உண்மை என்ன சொல்கிறது? ✨ மூட்டு வலி இன்று பலருக்கும் வாழ்க்கைத் தரத்தை குறைக்கும் ஒ...