"நித்ய கல்யாணி இலைகளை நீண்ட நெடுங்காலமாக உலகம் முழுவதும் சர்க்கரை நோய்க்கு (Diabetes) இதைத்தான் பயன்படுத்தி வந்துள்ளனர். இதன் இலைகளை தேனி-குளவி போன்றவற்றின் கடி விடங்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தி வந்தனர். சில பகுதிகளில் விரணத்தில் இரத்தப்பெருக்கை நிறுத்தவும், ஸ்கர்வி நோயைக் குணப் படுத்தவும். பல் வலிக்கும். ஆறாத விரணங்களை ஆற்றவும், இதன் இலைகளைப் பயன்படுத்தும் வழக்கம் உள்ளது. "முக்கியமாக சர்க்கரை நோய்க்கு மருந்தாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு மூலிகை பின்னாளில் எவ்வாறு புற்று நோய்க்கு மருந்தாக மாறியது.
புற்றுநோயை குணப்படுத்த வல்ல ஆல்கலாய்டுகள் 60-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் உள்ளது. குறிப்பாக வின்பிளாஸ்டின் (Vinblastine), வின்கிறிஸ்டின் (Vincristine), வின்லி யூரோசைன் (Vinleurosine), யோஹிம்பைன் ஆகிய ஆல்கலாய்டுகள் புற்றணுவை அழிக்கும் ஆற்றல் நிறைந்த ஆல்கலாய்டுகளாகும் "குறிப்பாக ஆராய்ச்சியில் நித்ய கல்யாணி எந்த வகை புற்றுநோய்க்கு சிறப்பாக பலனளிக்கிறது என்பதை பார்ப்போம்
"கருப்பை விந்துப்பைகள் பிருக்கம் - மார்பகம் - போன்றவற்றில் தோன்றும் கார்சினோமா புற்றுக்கள். வயிற்றில் வரும் புற்றுக்கள் (Caro noma Stomach) பெருங்குடல், மலக்குடல் இவற்றில் வரும் புற்று நோய் இலைகள் நித்ய கல்யாணியினால் குணமாகின்றன."
இரத்தப்புற்று நோய்க்கும் நித்ய கல்யாணி.
இரத்தப்புற்று நோய்க்கு நித்ய கல்யாணி ஓரளவு பலனளித்தாலும் கூட அந்த ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. மானோசைடிக் லுகேமியா (Monocytic Leukemia), எரித்ரோ லுகேமியா (Erythroleukemia) போன்றவகை இரத்தப்புற்று நோயைக் குணமாக்கும் என நம்பலாம். அந்த வகையில் ஹாட்ஜ்கின்ஸ் (Hodgkins Disease) நோய்க்கும். நித்ய கல்யாணி நல்ல குணமளிக்கிறது.
அடுத்த பதிவில் வேறொரு மூலிகை பற்றி பார்ப்போம்.
மேலும் மூலிகைகள் மற்றும் சித்த மருந்துகளை பற்றிய உங்களது சந்தேகங்களுக்கும், ஆலோசனைக்கும் தொடர்பு கொள்ளவும்…



