About Me

My photo
Vellore, Tamil Nadu , India

Thursday, October 7, 2021

உயிரின் ஆதாரமாக விளங்கும் ஆக்ஞாசக்ரேஸ்வரி

''மருந்தினும் இனிய சொற்பைங்கிளி வாராஹி!'

"ஓம் ஹம் க்லீம் செளம் ஐம் த்ரீசக்தி வாராஹி ஹூம்பட் ஸ்வாஹா!!"
                  
ஆனவராக முகத்தி பதத்தினில்
ஈனவராகம் இடிக்கும் முசலத்தோடு 
ஏனை எழுபடை ஏந்திய வெண்ணகை 
ஊனம் அற உணர்ந்தார் உளத்தோங்குமே...                                                  - திருமந்திரம். 

சங்கு, சக்கரம், ஏர், உலக்கை, அங்குசம், பாசம் தாங்கிய திருக் கரங்களுடன் அபயமும் வரதமும் அருள்பவள் வாராஹி!.. 

இழிகுணமுடைய ஈனர்களின் தேகத்தினை இடித்து நசுக்கி ஒழிப்பதற்கு உலக்கை மற்றும் ஏழு படைக்கலன்களைத் தாங்கியவள் வாராஹி,
குற்றங்களின்று நிங்கியவராக  தன்னைத் தியானிக்கும் அன்பர்களின் உள்ளங்களில் என்றென்றும் புன்னகையுடன் ஓங்கி விளங்குபவள் வாராஹி!.. 

'மருந்தினும் இனிய சொற்பைங்கிளி வாராஹி!.''
என்கிறார்- அபிராமபட்டர்!

இங்கே, மருந்து எனக் குறிப்பிடப்படுவது - அமிர்தம்!..
அமிர்தத்தினை விட இனிய சொற்களைப் பேசுபவளாம் அன்னை!..
அதனால் தான் அவளிடமிருந்து இந்த பிரபஞ்சம் தோன்றியது.

புவனம் பதிநான்கைப் பூத்தவளும் அவளே..
பூத்த வண்ணம் காத்தவளும் அவளே..
புன்னகையுடன் காப்பவளும் அவளே!..
அப்படிப்பட்டவள் தான்...

வானகமும் வையகமும் உய்வடையும் பொருட்டு
ஸ்ரீவாராஹி எனத் திருக்கோலங்கொண்டவள்..
சப்தகன்னியருள் ஐந்தாவதாக விளங்குபவள்,பஞ்சமி எனும் திதிக்கு அதிபதியானவள்,வளமைக்கும் செழுமைக்கும் உரியவள் 
நம் உடலில் இயங்கும் ஆதார சக்கரங்களில் -
நெற்றியில் விளங்கும் ஆக்ஞா சக்கரத்தின் அதிபதி - வாராஹி..



ஆதார சக்கரங்களில் ஆக்ஞாவை            ஆள்பவளே வாராஹி!!
அளவற்ற சக்தியுடன் விளங்குபவள், அதிலும் ஆதார சக்தியாகத் திகழ்பவள்,நெஞ்சின் நல்ல எண்ணங்களை நிறைவேற்றித் தருபவள்,நேர்மையான கோரிக்கைகளை நிறைவேற்றி வைப்பவள்,வேண்டுவோர்க்கு வேண்டியவற்றை அருளும் கருணை உடையவள்.வளமைக்கும் செழிப்புக்கும் பச்சைப் பசுமைக்கும் அதிபதியானவள்..  
வேளாண்மை செழித்து ஓங்குவதே ஒரு நாட்டின் மேன்மைக்கு அடையாளம்!.. 

இந்த ஏர்தனைக் கையில் கொண்டு விளங்குபவள்.
எனவேதான்  - விவசாயம் பல்கிப் பெருகி, நாடு நலம் பெற வேண்டும் - என ஆஷாட நவராத்திரி நாட்களில் வாராஹி ஆராதிக்கப்படுகின்றாள்

தென்னகத்தின் நெற்களஞ்சியமாகத் திகழும் சோழவளநாட்டின்
தனிப்பெருந் தலைநகராக விளங்கும் தஞ்சை மாநகரின்
அதிபதியாகத் திகழ்பவள் வாராஹி!..

மாமன்னன் ராஜராஜ சோழனை
குமரி முதல் நர்மதை வரை மட்டுமல்லாமல் 
கடல் கடந்த தேசங்களிலும் கலம் செலுத்தி
மாபெரும் வெற்றிகளை எளிதாக சாதித்ததற்கு
பெருந்துணையாகத் திகழ்ந்தவள் - ஸ்ரீ வாராஹி!..  
"பயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்ச பாணி வஞ்சர் 
உயிரவி உண்ணும் உயர்சண்டி காளி ஒளிரும் கலா
வயிரவி மண்டலி மாலினி சூலி வராகி என்றே
செயிரவி நான்மறை சேர்திரு நாமங்கள் செப்புவரே!.."
என நாளும் உரைக்கும், பக்தர்களின்
இல்லத்தில் பஞ்சமும் பிணியும் நெருங்காது..
நம்மிடம் நேர்மை இருக்கும் பட்சத்தில் நமக்கு உற்ற துணையாகி நல்வழி காட்டி..  இல்லங்களில் தன தான்ய மழையினைப் பொழிவிப்பாள்.
கொடுமை கொடுவினைகளை வேரோடு அழிப்பாள்.இயன்ற போதிலெல்லாம், வீட்டில் விளக்கேற்றி வைத்து,
தாமரை, செவ்வரளி,ரோஜா, மல்லிகை, முல்லை, வில்வம், மருக்கொழுந்து எனும் நறுமண மலர்களையும் சமர்ப்பித்து,
அதிக இனிப்புடன் கூடிய கனிகளையும்,பட்சணங்களையும் நிவேதனம் செய்து வாராஹி அம்மனை வழிபடுங்கள்..
நமது நன்றிக்கடன் 
இத்துடன் முடிந்து விடக்கூடிய ஒன்றல்ல!..
எத்தனை எத்தனையோ பிறவிகளுக்குத் தொடரக்கூடியது!..
தொடர வேண்டும்.. அதுவே நமது தவமாக வேண்டும்!..
என்றும் அளப்பரிய அன்புடன்  நமக்குக் கை கொடுத்து காப்பாள் வாராஹி என்பார்கள்.

குருவின் ஆசிகளோடு, அன்னையின் அருளுடன்  
யான் பெற்ற பேற்றினை 
அனைவரும் பெற வேண்டும்!..
உங்கள் இல்லத்திற்கும் வந்து
வரம் தர வாராஹி வருவாள்!..
வரங்கள் பல வழங்கி
வளமும் நலமும் தந்திடுவாள்!..

               "இதுவரை         இல்லையெனில் இனி நடக்கும்!! 
என்றும் வரம் தரும் த்ரீசக்தி வாராஹி அருளாசியுடன்  வாழ்வாங்கு வாழ  பிரார்த்திக்கின்றேன்.         

என்றும்  பேரன்புடன்….
சுதாகர் G வைத்யா
மயுரா ஆயுர்வேதாஸ்ரம்
பாரம்பரிய தமிழ் மருத்துவ ஆலோசகர்

பாரம்பரிய மருத்துவத்தில் எங்களின் குறிகோள் உடல் நலம் மற்றும் சுகாதாரத்தை காப்பதே… இங்கு ஆயுர்வேதம், சித்தா, மற்றும் பிற மருத்துவ அறிவியல்களின் ஊடாக நாங்கள் தனிப்பட்ட ஆலோசனைகள், மற்றும் நோய் தீர்க்கும் சிகிச்சைகள், சுகாதாரம் மற்றும் அழகு தொடர்பான சேவைகளை வழங்குகிறோம்.

மேலும் மூலிகைகள் மற்றும் சித்தா, ஆயுர்வேத மருத்துவம் பற்றிய உங்களது சந்தேகங்களுக்கும், ஆலோசனைக்கும் தொடர்பு கொள்ளவும்…

Mayura Ayurvedasram
(Siddha & Ayurvedha)
#40, Old Busstand Commercial Complex,
Near Thiruvalluvar Statue,
Anna Salai. Vellore – 632 004
Call :90430 25336

Mayura Ayurvedasram 
(Holistic Healing Solutions)
#19, 10th East Main Road,
Opp EB Office, Katpadi – 632 006
Call : 90421 35330







“மூட்டு அகற்றுவது தீர்வு அல்ல; அதன் இயற்கை இயக்கத்தை மீட்டெடுப்பதே மருத்துவம்.”

மூட்டு வலிக்கு அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வா? உண்மை என்ன சொல்கிறது? ✨ மூட்டு வலி இன்று பலருக்கும் வாழ்க்கைத் தரத்தை குறைக்கும் ஒ...