வணக்கம்…
அனைவருக்கும் இனிய ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள்…
Mudra for Memory Power | Mayura Vedic Mudra's | Chin Mudra
எப்படி ஒரு மரத்தின் வளர்ச்சிக்கு அதன் வேரில் தண்ணீர் ஊற்றினால் பயன் கிடைக்கிறதோ அதுபோல், அன்னைக்கு செய்யக்கூடிய அனைத்து வழிபாடுகளும் பிரபஞ்சம் முழுவதிலும் உள்ள அனைத்து ஜீவராசிகளையும் சென்று அடைகிறது என்று நமது முன்னோர் அறிந்து வருங்கால சந்ததியினர் ஞானத்துடனும், பாதுகாப்புடனும், அனைத்து வளங்களுடனும் வாழ
மகாநவமி திருநாளில் நாம் அன்றாடம் வேலைக்கு உபயோகப் படுத்தும் பொருட்களையும், குழந்தைகளின் புத்தகங்களையும் பூஜையில் வைத்து வழிபடுவது விசேஷம். அதன்படி குழந்தைகளின் பாடப்புத்தகங்களையே மேடையாக அடுக்கி, அதன் மீது அன்னையை எழுந்தருளச் செய்து…
மலைமகள் துதிப் பாடல்…
மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னிக்
குனிதரும் சேவடிக் கோமளமே கொன்றைவார் சடைமேல்
பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே
அடுத்து அலைமகள் துதிப் பாடி…
நீங்காது நின்மகனும் நீண்ட திருமாலும்
பாங்காக அன்றுவந்த பாற்கடல்போல் தேங்காமல்
நன்றாக நீயிருந்து நாளும் வளம் பெருக்கி
என்றைக்கும் நீங்காதிரு…
மண்கொண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என்
பண்கண்ட அளவில் பணியச் செய்வாய் படைப்போன் முதலாய்
விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும் விளம்பில் உன்போல்
கண்கண்ட தெய்வம் உளதோ சகலகலா வல்லியே
என நாங்கள் செய்யும் இந்த பூஜை நல்லபடியாக ஏற்றுக்கொண்டு, பூஜையில் ஏதேனும் குற்றம் குறைகள் இருப்பினும் பொறுத்தருளும் படியும் மனதார வேண்டி, பிறகு தூப, தீப ஆராதனைகளைச் செய்யவேண்டும். நைவேத்தியமாக பழரசம், இளநீர், மாதுளை, வாழை, மா, பலா முதலானவற்றையும், அன்னபிரசாதம் ஆகியவற்றைப் படைத்து வழிபடவேண்டும்.
மலைமகள்,அலைமகள்,கலைமகள் மூவரும் அன்னை த்ரீசக்தி வாராஹியின் வடிவாக வந்து நம்மை வாழ்வின் இறுதிவரை கண் துஞ்சாது காப்பார்கள்…
அனைவருக்கும் இனிய ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள்…













