ஆமணக்கு செடி சராசரி 8 முதல் 10 அடி உயரம் வரை வளரக்கூடியது தோட்டப்பயிராகவும், மானாவாரி யாகவும் விளையக்கூடியது ஆமணக்கு செடியின் பயனுள்ள பாகமே அதன் வித்துதான். இதை முத்துக்கொட்டை என்றும் சொல்வார்கள் இதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்தான் ஆமணக்கு எண்ணெய் என்பது இதை ஆமணக்கு நெய் என்றும் சொல்லார்கள். ஆனால் ஊர்களில் விளக்கெண்ணெய் என்று சொன்னால்தான் தெரியும் ஆங்கிலத்தில் கேஸ்டர் ஆயில் என்று குறிப்பிடுவார்கள்.
பூமணக்கு மேனி புரிகுழலே வாய்மணக்கக் கொள்ளில்
வயிறுவிடுங் கோமுள்ள வாயுவறும்
உள்ளில்வரு குன்மம்போது மோது.
இந்த விளக்கெண்ணையின் மருத்துவ குணங்களுக்காக சித்த, ஆயுர்வேத மருத்துவ முறைகளில் பரவலாக மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள். நாட்டுப்புறங்களில் இன்றளவும் பல்வேறு விதங்களில் இதனை சிறந்த மருந்தாக பயன்படுத்துகிறார்கள். மற்றும் தலைமுடித் தைலமாகவும் சமையலுக்கும், உணவை தயாரிப்பதற்கும் பயன்படுத்துகின்றனர். இதற்கு மலமிளக்கி, பால்பெருக்கி, தாதுவெப்பகற்றி ஆகிய செய்கைகளுண்டு. சுத்தமான ஆமணக்கு எண்ணெய் தண்ணீர் போல் சற்று வழவழப்பாக நிறமின்றி. சுவையின்றி, மணமின்றி இருக்கும்.
ஆமணக்கு எண்ணெயில் ஏதேதோ வகைகள் இருப்பதாக சொல்கிறார்களே அது என்னவென்று பார்க்கலாம்...
ஆமணக்கில் சிற்றாமணக்கு பேராமணக்கு என இருவகைகள் உண்டு. எப்படியிருப்பினும் எண்ணெயின் குணம் ஒன்று தான். எண்ணெய் தயாரிக்கும் முறையில்தான் வேறுபாடே தவிர. குணம் ஒன்றுதான் என்றேன்.
ஆமணக்கு எண்ணெயின் பயன்கள் பற்றி விரிவாக சொல்லுகிறேன்.
'ஆமணக்கு எண்ணெய்க்கு மலமிளக்கி செய்கை உண்டு. சற்று அதிகமாக சாப்பிட நீர்மலம் போக்கி செய்கை உண்டு. பேதியாகும்.. இதனால் குன்மம். குடல் அண்டவாதம், குடலிறக்கம். குடலேற்றம், வாத நோய்கள், மலச்சிக்கல், மெய், வாய், கண், மூக்கு, செவி இவைகளிலுன் டாகும் எரிச்சலும் நீங்கும். அளவோடு பயன்படுத்த உடலுக்கு நல்ல ஆரோக்கியமும் நல்லநிறமும் உண்டாகும். தாதுவிருத்தியும் உண்டாகும்.
கண்ணில் விழுந்த மலினங்களை அகற்ற, கண்சிவப்பு கண்நோய், 'கண் எரிச்சலுக்கு கண்களில்விட்டு பாபன்படுத்தலாம் பாலுட்டும் தாய்மார்களுக்கு மார்பகக் காம்பில் ஏற்படும் விரணம். வெடிப்பு இவைகளை அகற்ற அடிக்கடி தடவி வரலாம். எப்போதாவது ஒருமுறை குழந்தைகளுக்கு பேதிக்கு கொடுக்க இது அற்புதமான பேதிமருந்து. குழந்தைகளின் வயது உடல் நிலைமைக்கேற்ப தாய்ப்பாவில் சாப்பிட சில தடவைகள் பேதியாகும். இதனால் குழந்தைகளின் வயிற்று உப்பிசம். வயிற்றுவலி, பசியின்மை. வாய்வு சம்பந்தமான நோய்கள் குணமாகும். முக்கியமான செய்தி என்னவென்றால், மண் தின்னும் குழந்தைகளுக்கு இப்படி ஆமணக்கு நெய்-பேதி மருந்தாகக் கொடுக்க குழந்தை மண்தின்பதை நிறுத்துவதுடன் அப்பழக்கத்தினால் ஏற்பட்ட உடல் கோளாறுகளும் சீராகும்.
**ஆமணக்கு எண்ணெயை குழந்தைகள் தவிர பெரியவர்களும் உபயோகிக்கலாமா?"
"பிரசவித்த தாய்மார்களுக்கும். மூலநோயுள்ளோர்களுக்கும் மலச்சிக்கலினால் அவதியுறும் வயோதிகர்களுக்கும் இது மிகச்சிறந்த மருந்து. இன்னொரு செய்தி தெரியுமா? இது பேதியுண்டாக்கும் மருந்துதான். ஆனால் சீதபேதியுள்ளோர்க்கு அதை நிறுத்த இதுவே சிறந்த மருந்து. மிகவும் அரிதாக வயிற்றுவலி வயிறு சம்பந்தமான நோய்கள், கடுமையான நாட்பட்ட மலச்சிக்கல் போன்றவற்றிற்கு ஆமணக்கு எண்ணையை பீச்சாக (எனிமா) உபயோகிப்பார்கள். மேலும் ஆமணக்கு எண்ணையை இளஞ்சூட்டுடன் மூக்கில் உறிஞ்ச மூக்கடைப்பு பீனிச நோய்கள் குணமாகும். மற்றும் நாட்பட்ட வாயு, மூட்டுவாத நோய்களுக்கும் மேலுக்குத்தடவும் மருந்தாகவும், உள்ளுக்குச் சாப்பிடும் மருந்தாகவும்சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. ஆமணக்கு இலையின் தளிர்களை நீரில் கழுவி சுத்தம் செய்து நன்கு அரைத்த கற்கம் 5 கிராம் அளவு காலை வெறும் வயிற்றிலும் மாலையிலும் தண்ணீருடன் சாப்பிட்டுவர காமாலை குணமாகும். கை கால்களில் சொறி சிரங்கு நோயினால் துன்புறுவோர் தினசரி இரவு படுக்குமுன் ஆமணக்கு இலைகளை சுத்தம் செய்து சொறி சிரங்கினால் பாதிக்கப்பட்ட இடங்களில் வைத்துக்கட்டி மறுநாள் காலை பிரித்துப் பார்க்க அவ்விடங்களில் சொறி-சிரங்கு ஆறி நீர் வடியக் காணலாம். பின்னர் சுத்தமான நீரால் அவ் விடங்களைக் கழுவி உலர்ந்தபின் மேற்பூச்சாக பகலில் அருகம்புல் தைலம் தடவிவர சில நாட்களில் சொறி-சிரங்கு பூரணமாக குணமாகிவிடும்."
"சித்த மருத்துவத்தில் அப்படி என்னென்ன மருந்துகள் ஆமணக்கு எண்ணையிலிருந்து தயாரிக்கப்படுகின்றன?" பார்க்கலாம் பூர எண்ணெய் என்ற வெள்ளை எண்ணெய். மூலக்குடார எண்ணெய், வாதகேசரித்தைலம். இரசத்தைலம், கணத்தைலம், கருடன் கிழங்கெண்ணெய், கழற்சி தைலம். சித்தாதி எண்ணெய், கலிங்காதி எண்ணெய் என்ற மலைவேம்பாதித்தைலம், மாந்த எண்ணெய். மெருகுள்ளித்தைலம், மேனித்தைலம் போன்ற எண்ணற்ற மருந்துகள் இதைக்கொண்டு தயாரிக்கப்படுகிறது. அத்துடன் பல மருந்துப் பொருட் களை சுத்தம் செய்யவும் ஆமணக்கு எண்ணெய் பயன்படுகிறது" என்று சொன்னேன்.
ஆனால் ஆமணக்கு எண்ணையை பயன்படுத்தவே கூடாது என்று ஒரு சாரார் சொல்கிறார்களே. அதைப்பற்றி?
அது தவறு, நமது உடலுக்கு நமது தட்ப வெப்ப நிலைக்கு நம் உணவுப்பழக்க வழக்கங்களுக்கேற்ப நாம் ஒரு குறிப்பிட்ட அளவில் மட்டும் ஆமணக்கு எண்ணையை நேரடியாகவோ, மருந்தாகவோ பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறோம். ஆமணக்கு நெய்யை இப்படி அளவோடு பயன்படுத்துவது நன்மையே தவிர கெடுதல் ஏதும் இல்லை அப்படி கெடுதல் நிகழ்ந்ததாக சான்று ஏதும் இல்லை. ஆனால் இதை அடிக்கடியோ தினசரியோ, தொடர்ந்தோ பயன்படுத்தக் கூடாது. எனவே இது நல்ல மருந்துப் பொருள்தான்"
அடுத்த பதிவில் வேறொரு மூலிகை பற்றி பார்ப்போம்.
மேலும் மூலிகைகள் மற்றும் சித்த மருந்துகளை பற்றிய உங்களது சந்தேகங்களுக்கும், ஆலோசனைக்கும் தொடர்பு கொள்ளவும்…




No comments:
Post a Comment