உண்மையில் மகா அவதார் பாபாஜி யார்? அவர் எங்கே பிறந்தார்? எங்கே வளர்ந்தார்? எங்கே இருக்கிறார்? அவரது வயது என்ன? பாபாஜி, இந்த வார்த்தைக்குதான் எத்தனை மந்திர சக்தி! எத்தனை மகத்துவம்! புரிந்தவர்கள் இவரை தெய்வம் என்று போற்றுகிறார்கள். புரியாதவர்களுக்கு இவர் என்றுமே புரியாத புதிர்தான்! அந்தபுதிருக்கு முழுமையான விடை காணும் அபூர்வ பதிவு தான் இந்த கிரியா பாபாவின் வரலாறு… முழுமையாக படியுங்கள்.
பாபாஜி என்றெல்லாம் பலரும் இருந்தாலும் எல்லோரும் ஒருவரே என்பாபாஜி என்ற பெயரில் நைனிடால் பாபாஜி, ஹரியகான் பாபாஜி, ஹைடகன்றுதான் சொல்கிறார்கள். (1)உண்மையில் மகா அவதார் பாபாஜி யார்?
(2)அவர் எங்கே பிறந்தார்?
(3)எங்கே வளர்ந்தார்?
(4)எங்கே இருக்கிறார்?
(5)அவரது வயது என்ன? இந்தக் கேள்விகள் உலகம் முழுக்க கோடானு கோடிப் பேரிடம் இருந்தாலும்,யாராலும் சரியான விடையைக் கண்டுபிடிக்க முடியவில்லை....
அருகிலேயே அவர் இருப்பது அறியாமல், அவரைத் தேடி அலைபவர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனர். எப்படி இருப்பார் என்ற ஆராய்ச்சியில் தங்கள் வாழ்நாளையே கழித்தவர்கள் பலர் இருக்கிறார்கள்.
ஒரே நேரத்தில் பல வடிவங்களில் இருக்க முடியும் அவரால். வடிவமே இன்றி ஒளிரூபத்திலும் தோன்றுவார் அவர்.
தேடிக்கண்டுபிடிக்க நினைத்து அலைவதை நிறுத்திவிட்டு, ஆத்மார்த்தமாக அவரிடம் சரணடைந்து அவரையே மனதுள் இருத்தி தியானம் செய்தால், நாம் தேடிப் போகாமலேயே அவர் நம்மைத் தேடி வருவார்.
உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான பேர் மத இன, மொழி, மத வேறுபாடற்று மகா அவதார் பாபாஜியைப் பற்றித் தெரிந்து கொள்ளும் ஆவலில் இருக்கிறார்கள்.
மகாவதார் பாபாஜியை தரிசித்ததாகவும் அவருடன் இருந்ததாகவும், பலர் பலவிதமாகச் சொல்கிறார்கள்.
விடுதலைப் போராட்ட தியாகியான டாக்டர் ராம்போஸ்லே பாபாஜியுடன் கிட்டத்தட்ட ஆறு வருடம் இருந்திருக்கிறார்.
பாபாஜியைப் பற்றிய அதிசயமான விஷயங்களை அவர் வியந்து கூறுகிறார். பாபாஜி எந்த வடிவத்திலும் தோன்றுவாராம். வயதானவராக, விலங்காக, பறவையாக எந்த உருவத்திலும் நிமிடத்தில் மாறிவிடுவாராம்.
ஒரு சமயம் அவரது பக்தரின் வீட்டிற்கு உணவருந்த வருவதாக பாபாஜி உறுதியளித்திருந்தாராம். ஆனால் சொன்னபடி பாபாஜி வரவில்லையென்று பக்தர் வருத்தப்பட்டார்.
அதை பாபாஜியிடமே நேரில் கேட்டுவிட்டார். உடனே பாபாஜி, ‘"நான் அங்கே வந்திருந்தேன். மீந்துபோன உணவையெல்லாம் எனக்கு நீ போட்டாயல்லவா’" என்றதும் அந்த பக்தர் அதிர்ந்து போனார். காரணம், அவர் மீந்து போன உணவைப் போட்டது ஒரு நாய்க்கு. அதாவது நாய் உருவில் அங்கே வந்திருக்கிறார் பாபாஜி.
பிரபஞ்சத்தில் எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் பாபாஜி செல்வார். சில நேரத்தில் பறவைகளின் மூலமாகத் தன் சீடர்களுக்கு செய்தி சொல்லி அனுப்புவார். அந்தப் பறவைகள் மனிதனைவிட விரைவாகச் சென்று சீடர்களிடம் பாபாஜியின் செய்தியை விவரமாகத் தெரியப்படுத்திவிடும்.
பாபாஜி யார் என்பதைத் தெரிந்துகொள்ள முயன்றவர்களுள் ஒருவரான யோகிராமையா என்பவர், தனது தியானத்தில் பாபாஜியின் பிறப்பைப் பற்றிய விவரங்கள் காட்சியாகத் தெரிந்ததாகக் கூறுகிறார்.
அவதரித்த காலம் உட்பட சகலமும் உணரும்படியாக தெளிவாகப் புலப்பட்ட கனவு அது. அதாவது பாபாவால் உணர்த்தப்பட்ட விஷயம் அது. அந்த விவரங்கள்:
பரமஹம்ஸ யோகானந்தர் எழுதிய "THE AUTO BIOGRAPHY OF A YOGI" என்கிற நூல், யோகக் கலையின் அதிநுட்பங்களை உலகுக்கு உணர்த்திய ஒரு அற்புதமான புத்தகம். "ஒரு யோகியின் சுய சரிதம்" என்று தமிழில் வெளிவந்துள்ள இப்புத்தகம், பாபாஜி பற்றிய அறிய தகவல்கை அளிக்கிறது.
இதோ அதிலிருந்து சில பகுதிகள்…
பாபாஜி தனது மனித எல்லையைக் கடந்த ஓர் மாபெறும் சித்தராவார். இவர் மனிதகுலத்தின் ஆன்மீக வளர்ச்சிக்காகப் பின்னணியில் அமைதியாக தனது பணியினை செய்து வருகிறார். மேலும், லாஹிரி மஹாஸாயருக்கு 1861ஆம் ஆண்டு
மிகவும் சக்தி வாய்ந்த யோக யுக்திகளான கிரியா யோகாவை கற்பித்தவரும் பாபாஜியே ஆவார் என யோகானந்தர் குறிப்பிடுகிறார்.
பாபாஜி கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் கி.பி.30.11.1203 அன்று கார்த்திகை மாதம் கார்த்திகை தீபத் திருநாளன்று ரோகிணி நட்சத்திரம் ரிஷபராசி கூடிய சுப வேளையில்
பிறந்தார். அவருடைய குழந்தை திருநாமம் நாகராஜ். நாகராஜ் என்பதற்கு "பாம்புகளின் அரசன்" என்று பொருள்.
நம்பூதரி பிராமணர்களான இவரது
பெற்றோர்கள், தென்மேற்கு மலபார்
பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து
வந்திருந்தனர். இவரது தந்தை, அங்கிருந்த சிவன் கோவிலில் அர்ச்சகராக இருந்தார். இப்பொழுது அக்கோவில் முருகனுக்கு அர்ப்பணிக்கப் பட்டுள்ளது.
நாகராஜ், தனது ஐந்தாவது வயதில், சிவன் கோவிலில் விளையாடிக் கொண்டிருந்த போது, ஒரு வணிகனால் கடத்தப்பட்டு இன்றைய கோல்கத்தாவிற்கு ஒரு அடிமையாக
அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு, ஒரு
பணக்கார வர்த்தகர் அவனை விலைக்கு வாங்கி பிறகு, சிறிது நாட்களில் முழு சுதந்திரத்துடன் விடுவித்தார். பிறகு, சுற்றித் திரிகிற துறவிகளின் குழுவில் சேர்ந்து புனிதமான சமய மற்றும் தத்துவ இலக்கிங்களில் தேர்ச்சி பெற்றார். இதில் நிறைவு பெறாத நாகராஜ்,
தெற்கே வாழ்ந்து வந்த பூரணத்துவம் பெற்ற மஹா சித்தர் போகரை பற்றி அறிந்து கொண்டு, அவரைக் காண தெற்கு சிலோனிலுள்ள புனிதமான கதிர்காமக் கோவிலுக்கு யாத்திரை மேற்கொண்டார். அவருக்கு 11 வயதானபோது கி.பி.1216ல் இலங்கை சென்று கதிர்காமம் என்னும் திருத்தலத்தில் மகா சித்தர் போக நாதரை சந்தித்தார். பாபாஜி கி.பி.1203 ல் தம் பிறப்பு கி.பி. 1216 கதிர்காமம் சென்று போகரை சந்தித்தது பற்றியும் கி.பி.1952ல் ஒளி உடலோடு சென்னை வந்து எழும்பூர், சூரம்மாள் தெரு, 9ம் எண் வீட்டிலுள்ள தம் சீடர் V.T நீலகண்டன் பூஜையறையில் அவரை
சந்தித்து அவரிடம் பலமுறை கூறியுள்ளார்.
(போகநாதர் கதிர்காமம் தேவாலயம் முருகன் கோவிலாக எழுவதற்கு முன் அந்த கோவிலில் இரண்டு முக்கோணங்களாலான மிகவும் சக்தி
வாய்ந்த ஒரு யந்திரத்தை பிரதிஷ்டை செய்தார். கதிர்காமம் திருக்கோவிலின் மூலஸ்தானத்தில் இப்போதும் உருவச்சிலை கிடையாது. அந்த
யத்திரத்திற்குத்தான் வழிபாடு நடக்கின்றன.)
கதிர்காமம் சென்ற பாபாஜி அங்கு மகா சித்தர் போக நாதரை குருவாக அடைந்தார்.
மிகப்பெரிய ஆலமரத்தடியில் போக நாதர் அவருக்கு தொடர்ந்து 6 மாத காலம் கிரியா யோகப் பயிற்சி அளித்தார். இப்பயிற்சி இடைவிடாமல் தொடர்ந்து நடந்தது.
இப்பயிற்சியில் 18 வகையான ஆசனங்கள், பல்வேறு பிராணயாமப் பயிற்சிகள் தியானமுறைகள் ஆகியவை அடங்கும். இந்த தவயோக பயிற்சி ஒவ்வொரு முறையும் 24.மணி நேர பயிற்சியாக தொடர்ந்தது. பிறகு விட்டு விட்டு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறை என்று வளர்ந்தது.
இது வார கணக்காக பெருகி இடைவிடாமல் 48 நாட்களுக்கு செய்யும் அளவிற்கு உயர்ந்தது.
ஆறு மாத முடிவில் பாபாஜியின் மனதில்
ஐம்புலன்களின் வழியே உலகியலோடு
தொடர்பு கொள்ளும் நிலை அகன்றது. வேறு வகையில் கூறினால் மனிதனின் 36 தத்துவங்களில் 20 தத்துவங்களால் ஆன மனோதேகமே அவருக்கு இல்லாமல் போய்விட்டது. அல்லது அவரது மனித மனம் அவரது ஆன்மாவின் கட்டுப்பாட்டிற்குள்
வந்தது.
பாபாஜி ஒளி உடலோடும் பூத உடலோடும் வாழும் மனிதராகவே விட்டார். எல்லா தத்துவங்களையும் ஏகத்துவமான ஆன்மாவே தான் என்பதை உணர்ந்தார். அதன்மூலம் தாம்
வேறு பரம்பொருள் வேறு அல்ல என்பதை தெளிவாக உணர்ந்து விட்டார்.
தன்னை உணர்ந்த பாபாஜி கி.பி.1214லிலேயே தம் குருநாதர் போகநாதர் ஆணைக்கிணங்க இலங்கையில் இருந்து தமிழகம் வந்தார்.
பொதிகை மலையில் ஒளி உடலுடன்
வாழ்ந்துவரும் போகரின் குருவான
அகத்தியரிடம் கிரியா யோகத்தின் கடைசி தீட்சையைப் பெற திருகுற்றால மலையை அடைந்தார். (அகத்தியரே ஆதிகுருவும், கிரியா யோகத்தின் மூலகுருவும் ஆவார்.) குற்றால மலையில் பாபாஜி அகத்தியரை
நினைத்து 48 நாள் கடுந்தவம் புரிந்தார். 48ம் நாள் முடிவில் அகத்தியர் ஒளி உடலோடு அவர் முன் தோன்றி அவரை உள்ளம் குளிர வாழ்த்தி அருளினார். அதோடு "மகனே நீ இமய
மலைக்கு சென்று பத்ரிநாத்தில் தங்கி தவ வாழ்க்கை வாழ்ந்து வருவாயாக, நீ இது வரை உலகம் காணாத அளவிற்கு மிகப்பெரிய சித்த புருஷனாக உயர்ந்து உலகம் உள்ளளவும் வாழ்ந்து வருவாய்" என்று வாழ்த்தி மறைந்தார்.
ஆதிகுரு அகத்தியர் ஆணைப்படி பாபாஜி இமய மலையின் ஒரு முகட்டில் தவக்குடில் அமைத்துக்கொண்டு இன்றும் வாழ்ந்து வருகிறார். பாபாஜியின் தவக்குடில் இமயமலையில் 10000 அடி உயர்த்திற்கு மேல் உள்ள பத்ரி நாத் கோவிலிலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ளது. அந்த தவக்குடிலுக்கு கௌரிசங்கர் பீடம் என்று பெயர்.
அடுத்த பதிவில் வேறொரு மூலிகை பற்றி பார்ப்போம்.
மேலும் மூலிகைகள் மற்றும் சித்த மருந்துகளை பற்றிய உங்களது சந்தேகங்களுக்கும், ஆலோசனைக்கும் தொடர்பு கொள்ளவும்…
இன்னும் அறிவோம்...
இலவச சித்தா, ஆயுர்வேத மருத்துவ ஆலோசனை மற்றும் சந்தேகங்களுக்கு அழைக்கவும்...
பேரன்புடன்….
சுதாகர் G வைத்யா
நாடி பரிசோதனை மற்றும் மருத்துவ ஜோதிட ஆராய்ச்சியாளர்.
பாரம்பரிய மருத்துவத்தில் எங்களின் குறிகோள் உடல் நலம் மற்றும் சுகாதாரத்தை காப்பதே… இங்கு ஆயுர்வேதம், சித்தா, மற்றும் பிற மருத்துவ அறிவியல்களின் ஊடாக நாங்கள் தனிப்பட்ட ஆலோசனைகள், மற்றும் நோய் தீர்க்கும் சிகிச்சைகள், சுகாதாரம் மற்றும் அழகு தொடர்பான சேவைகளை வழங்குகிறோம்.
மேலும் மூலிகைகள் மற்றும் சித்தா, ஆயுர்வேத மருத்துவம் பற்றிய உங்களது சந்தேகங்களுக்கும், ஆலோசனைக்கும் தொடர்பு கொள்ளவும்…
Mayura Ayurvedasram (Vedic Pharmacy)
#40, Old Busstand Commercial Complex,
Vellore - 632 004. Call : 90430 25336
Mayura Wellness Centre
(Holistic Healing Solutions)
Near Vani Vidyalaya School,
Katpadi – 632 006. Call : 90421 35336
#மனம் #ஆயுர்வேதம் #சித்தா #மயூரா #வேலூர்


No comments:
Post a Comment