About Me

My photo
Vellore, Tamil Nadu , India

Thursday, August 12, 2021

தாவரங்களுக்கும் அறிவு உண்டு…

 "மனிதனைப் போலவே விலங்குகளைப் போலவே தாவரங்களுக்கும் அறிவு உண்டு" . 

         

               தாவரங்கள் அறிவற்றவைகள் அவைகளுக்கு மனிதர்கள்  மிருகங்கள் போல் மூளையோ, இரத்த ஓட்டமோ. பார்வைத்திறனோ, கேட்கும் திறனோ கிடையாது' என்று நினைக்காதீர்கள். தாவரங்களுக்கும் மனிதர்களைப்போல் விலங்குகளைப்போல் அறிவு உண்டு. பல ஆண்டுகளுக்கு முன்பு இசையின் மூலம் பயிர் வளர்ச்சி, விளைச்சலை அதிகரிக்கச் செய்ய முடியும் என்ற அடிப்படையில் வேளாண்மைத்துறையில் ஒரு ஆராய்ச்சி நடைபெற்றது. அதில் கர்நாடக சங்கீதத்தை நாதசுர இசை மூலமாக கேட்கும் நெற்பயிர்கள். அதிக விளைச்சலை கொடுத்ததை ஆராய்ச்சியின் மூலம் நிரூபித்துக் காட்டி னார்கள். அதே போல் சமீபத்தில் 'ரீடர்ஸ் டைஜஸ்ட்' இதழில் வந்த ஒரு கட்டுரையில் வந்திருக்கும் செய்தி என்ன தெரியுமா?


                'மனிதன் பொய் சொன்னால் கூட மரம், செடி, கொடிகள் கண்டுபிடித்து விடுமாம். தாவரங்களுக்கு அவ்வளவு நுண்ணறிவு உண்டு என்று நிரூபித்திருக்கிறார் பாக்ஸ்டர் என்ற ஆராய்ச்சியாளர். தன் மீது பிரியமுள்ளவர்களிடம் செடி. கொடிகளும், மரங்களும் அளவுக்கு மீறிய பாசத்துடன் இருக்கின்றன. தன்னைப் பார்க்கும் எஜமானருக்கு ஏதேனும் ஆபத்து வரும் போலிருந்தால் அவை படபடக்கின்றனவாம். பாக்ஸ்டர் செய்த இன்னொரு ஆராய்ச்சி நம் சிந்தனையை தூண்டக்கூடியது.


        இது போல் அழுகண்ணி, தொழு கண்ணி என்ற சில செடி, கொடி வகைகள் அபூர்வமானவை. இதில் அழுகண்ணி என்ற மூலிகைச்செடி ஆஸ்தமா என்ற இரைப்பு நோய்க்கு அற்புத மருந்தென்று இப்போது கண்டுபிடிக் கப்பட்டுள்ளது. அந்த அழுகண்ணி என்ற செடி எப்போதும் அழுவது போல் இருக்கும். அந்தச் செடியிலிருந்து கண்ணீர்த்துளிபோல் நீர்சொட்டிக் கொண்டே இருக்கும் அதேபோல் தொழுகண்ணி என்ற செடியைத் தொட்டவுடன், அந்த இலைகள் இரண்டு இரண்டாக ஒன்று சேர்ந்து என்னை ஒன்றும் செய்து விடாதீர்கள் என்று கைகூப்பி வணங்குவது போல் செய்யும்.

இன்னும் அதிசயம் தொடரும்…

அடுத்த பதிவில் வேறொரு மூலிகை பற்றி பார்ப்போம்.

மேலும் மூலிகைகள் மற்றும் சித்த மருந்துகளை பற்றிய உங்களது சந்தேகங்களுக்கும், ஆலோசனைக்கும் தொடர்பு கொள்ளவும்…


ஆதிரா 
Consultant for Holistic Wellness
Mayura Wellness Clinic
(Healing solutions for General Wellness)
97862 25999














No comments:

Post a Comment

“மூட்டு அகற்றுவது தீர்வு அல்ல; அதன் இயற்கை இயக்கத்தை மீட்டெடுப்பதே மருத்துவம்.”

மூட்டு வலிக்கு அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வா? உண்மை என்ன சொல்கிறது? ✨ மூட்டு வலி இன்று பலருக்கும் வாழ்க்கைத் தரத்தை குறைக்கும் ஒ...