About Me

My photo
Vellore, Tamil Nadu , India

Thursday, September 23, 2021

ஆகாயத்தில் பறக்கும் சக்தியை தரும் ஆகாஷ் முத்திரை...

 ஆகாஷ் முத்திரை!!!

(உயர்ந்த நல்ல எண்ணங்களை வெளிப்படுத்தும் அருமையான முத்திரை)




நமது பெருவிரல் நுனியும் நடு விரல் நுனியும் தொடும்படியும், மற்ற விரல்கள் நேராக நீட்டியும் வைத்துக்கொள்ளவேண்டும்.

இந்த முத்திரையை தினமும் அதிக பட்சம் 45 நிமிடங்களும், குறைந்த பட்சம் 15 நிமிடங்களாவது செய்வது நல்ல பலனைத் தரும். இந்த முத்திரைப் பயிற்சி எந்த நேரத்திலும் செய்யலாம். இந்த முத்திரை பயிற்சி காலை/மாலை 2 மணி முதல் 6 மணிக்குள் எந்த நேரத்தில் செய்தாலும் அதிக பலன் தரும்.

இந்த முத்திரை பயிற்சி உடல் உறுப்புகளின் வெற்றிடத்தை அதிகப்படுத்தி நன்றாக இயங்கச்செய்கிறது. அதாவது நமது மண்டையோடு (கபாலம்), மூக்கின் பின்புறம், சைனஸ் பாதை, காது, வாய், தொண்டை மற்றும் வயிறு பாகங்களில் வெற்றிடம் உள்ளது. தேவையான வெற்றிடம் இருப்பதால் அது நன்றாக இயங்குகிறது. அந்த இடத்தில் அதிகமாக தண்ணீரோ அல்லது காற்றோ அடைத்துக்கொண்டால் அந்த உறுப்புகள் இயங்குவதில் பிரச்சனையும் நோயும் வருகிறது. இந்த முத்திரை பயிற்சி தேவையான வெற்றிடத்தை ஏற்படுத்தி நன்றாக இயங்கவைக்கிறது. இந்த முத்திரை நல்ல எண்ணங்களை மனதில் உருவாக்குகின்றது.

இந்த முத்திரையை உட்கார்ந்து கொண்டு செய்யவேண்டும். நடந்து கொண்டு செய்யக்கூடாது.



ஆகாஷ் முத்திரையினால் ஏற்படும் நல்ல விளைவுகள்:

மனதில் தீய எண்ணங்கள், கெட்ட உணர்ச்சிகள் ஏற்படுவதை கட்டுப்படுத்துகிறது.

மனதில் தேவையில்லாமல் ஏற்படும் பயம் கோபம் இவைகளை குறைத்து மனதில் நல்ல எண்ணங்களை ஏற்படுத்தி மகிழ்ச்சியையும் ஆனந்தத்தையும் கொடுக்கிறது.

இந்த முத்திரை பயிற்சியில் தியானம் செய்தால் மன ஒருமைப்பாட்டுடன் தியானம் முழுமையாக செயல்படும். உயர்ந்த எண்ணங்களை வெளிப்படுத்தும்.

இந்த முத்திரை பயிற்சி தொடர்ந்து செய்தால் பொது நிலைப்புலன் உணர்வுக்கு அப்பாற்பட்ட முன்னோக்கு தெரியும் சக்தி (ESP- EXTRA SENSORY PERCEPTION) கிடைக்கும்.

உடலில் உள்ள தேவையற்ற கெட்ட சக்திகள் (TOXIN) வியர்வை, சிறுநீர், மலம் வழியாக வெளியேறும்.

உடலும் உறுப்புகளும் கனமாக இருப்பது போன்ற நிலைகளை போக்கும்.

சைனஸ் தொந்தரவுகளை குணப்படுத்தும்.

தலைவலி மற்றும் காது வலிகளை குணப்படுத்தும்.

நெஞ்சு கனமாக இருப்பது போன்ற உணர்வுகளை நீக்கும்.

நெஞ்சு படபடப்பை குறைக்கும்.

உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும்.

அதிகமாக சாப்பிட்டதால் ஏற்படும் தொந்தரவுகளை போக்கும்.

கால்சியம் சத்து அதிகரித்து எலும்புகள் வலுப்பெறும்.

இந்த முத்திரை பயிற்சியால் உடல் உள் உறுப்புகள் அனைத்தும் நன்றாக இயங்குகின்றது.



இதயத்தின் செயல்திறனை அதிகரிக்கும்.
Increase efficiency of the heart.

கால்சியம் குறைபாட்டிற்கு நல்ல சிகிச்சை.

Good treatment for calcium deficiency.


எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.

Helps to strengthen the bones.

தன்னம்பிக்கையை உயர்த்தவும்.

Raise self confidence.

காது பிரச்சனைகள் குணமாகும்.

Ear problems will be cured.


முழுமையின் திருப்தியை வழங்குகிறது.

Provides the satisfaction of completeness.


மேலும் மூலிகைகள் மற்றும் சித்த மருந்துகளை பற்றிய உங்களது சந்தேகங்களுக்கும், ஆலோசனைக்கும் தொடர்பு கொள்ளவும்…

Mayura Sudhakar G

Consultant 

Mayura Wellness Clinic

Healing solutions for General Wellness
97862 25999 



No comments:

Post a Comment

“மூட்டு அகற்றுவது தீர்வு அல்ல; அதன் இயற்கை இயக்கத்தை மீட்டெடுப்பதே மருத்துவம்.”

மூட்டு வலிக்கு அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வா? உண்மை என்ன சொல்கிறது? ✨ மூட்டு வலி இன்று பலருக்கும் வாழ்க்கைத் தரத்தை குறைக்கும் ஒ...