-திருக்குறள். 265
தவம், விரும்பியதை விரும்பியவாறு கொடுக்கும். எனவே, இல்லறத்தில் இருப்பவர்களும் முயன்று தவம் செய்து பலனடையலாம்.
மேற்காணும் வள்ளுவரின் திருக்குறளுக்கு ஏற்ப வாழ்ந்தவர்கள் சித்தர்கள் ஆவர். மெய், வாய், கண், மூக்கு, உடல் ஆகிய ஐம்பொறிகளால் ஏற்படும் இன்பங்களை வெறுத்து, அவற்றை நன்னெறியில் செலுத்தி, மக்களுக்கு நல்வழிகாட்டி வாழ்ந்த பெருமக்கள் சித்தர்களே ஆவர்.
சித்தம் - சித்தர் - விளக்கம்
சித்தம் என்பது மனம். கடிவாளம் இல்லாத குதிரையைப் போல விரைந்தோடும் மனத்தை தவம் என்னும் கடிவாளமிட்டு அதனை தன்வயப்படுத்தி யவர்களே சித்தர்கள் எனப்பட்டனர்.
தவம் செய்தல் என்பது எளிய செயலன்று. அது சாதாரண மனிதர்களால் இயலாத காரியமாகும் அத்தகைய கடினமான தவத்தை மேற்கொண்டு ஊண்,உறக்கம் தவிர்த்து மானுடத்திற்கு நற்பயன்களை வாரி வழங்கிடப் பிறந்த புண்ணிய ஆத்மாக்களே சித்தர்கள் ஆவர்.
சித்தர்கள் வாழ்விடங்கள்
சித்தர்கள் ஓரிடத்தில் கூட நிலையாக வாழ்ந்தாரில்லை. அவர்கள் பெரிய மலைகளில் குகைகளிலும், காடுகளிலும் வாழ்ந்து வந்தனர். சில நாட்கள் ஓரிடத்தில் தங்கிப் பின்பு மீண்டும் ஊர் ஊராக அலைந்து திரிந்து கொண்டிருப்பார்கள். தாங்கள் செல்லும் ஊரில் உள்ள மக்களை நோய்களிலிருந்து குணப்படுத்தியும், அவர்களுக்கு அறிவுரைகள் கூறியும் சமூக சேவைகள் செய்து வந்தனர்.
அட்டமா சித்திகள்
அட்டம் - எட்டு. எட்டு விதமான ஆற்றலை முழுமையாகப் பெற்றவர்கள் சித்தர்கள். இவ் எட்டு சித்திகளை சாதாரண மனிதர்களால் பெற இயலாது.
"செயற்கரிய செய்வார் பெரியர்; சிறியர்
செயற்கரிய செய்கலா தார்"
-திருக்குறள் 26
என்னும் வள்ளுவரின் வைரவரிகளுக்கு ஏற்ப இவ்வாற்றல் சித்தர்களுக்கு மட்டுமே கைகூடுவதாகும்.
எட்டுவிதமான சித்திகளாவன :
1. அணிமா, 2. மகிமா, 3. இலகிமா, 4. கரிமா 5.பிராத்தி, 6. பிராகாமியம், 7. ஈசத்துவம், 8. வசித்துவம் என்பன.
1. அணிமா : அணு என்பது மிகவும் சிறிய துகள். அவ்வணுவைக் காட்டிலும் மிகச் சிறிய உருவிலே உலவும் ஆற்றலுக்கு அணிமா என்று பெயர்.
2. மகிமா : மலையை விடப் பெரிய உருவெடுத்து உலவும் ஆற்றலுக்கு மகிமா என்று பெயர்.
3. இலகிமா: உடம்பை கனமாக இல்லாமல் மிகவும் லேசாகச் செய்து கொள்வதும், நீரின் மேலும், நிலத்தின் மேலும் கால் படாமல் காற்றுப்போல் விரைந்து செல்லும் ஆற்றலுக்கு இலகிமா என்று பெயர்.
4. கரிமா ஐம்புலன்கள் நுகரும் இன்ப துன்பங்களைப் பற்றிக் கவலைப்படாமல் - அவற்றுடன் எவ்விதத் தொடர்பும் இல்லாமல் இருப்பது கரிமா எனப்படும்.
5. பிராத்தி : தான் எதை விரும்பினாலும், எதை நினைத்தாலும் நினைத்தவற்றை அடையும் ஆற்றலுக்கு பிராத்தி என்று பெயர்.
6.பிராகாமியம் : தன் நினைப்பின் வன்மையால் எல்லாவற்றையும் படைக்கும் ஆற்றலுக்கு பிராகாமியம்
என்று பெயர்.
7. ஈசத்துவம் : காண்பவர்கள் அனைவரும் தன்னை வணங்கும் படியான தோற்றப் பொலிவைப் பெற்றிருக்கும் திறனுக்கு ஈசத்துவம் என்று பெயர்.
8. வசித்துவம் : உலகம் முழுவதையும் தன் வயப்படுத்தி நடத்தும் ஆற்றலைப் பெற்றிருப்பதற்கு வசித்துவம் என்று பெயர்....
இன்னும் அறிவோம்...
இலவச சித்தா, ஆயுர்வேத மருத்துவ ஆலோசனை மற்றும் சந்தேகங்களுக்கு அழைக்கவும்...
பேரன்புடன்….
சுதாகர் G வைத்யா
நாடி பரிசோதனை மற்றும் மருத்துவ ஜோதிட ஆராய்ச்சியாளர்.
பாரம்பரிய மருத்துவத்தில் எங்களின் குறிகோள் உடல் நலம் மற்றும் சுகாதாரத்தை காப்பதே… இங்கு ஆயுர்வேதம், சித்தா, மற்றும் பிற மருத்துவ ஜோதிட அறிவியல்களின் ஊடாக நாங்கள் தனிப்பட்ட ஆலோசனைகள், மற்றும் நோய் தீர்க்கும் சிகிச்சைகள், சுகாதாரம் மற்றும் அழகு தொடர்பான சேவைகளை வழங்குகிறோம்.
மேலும் மூலிகைகள் மற்றும் சித்தா, ஆயுர்வேத மருத்துவம் பற்றிய உங்களது சந்தேகங்களுக்கும், ஆலோசனைக்கும் தொடர்பு கொள்ளவும்…
Mayura Vedic Pharmacy
#40, Old Busstand Commercial Complex,
Vellore - 632 004. Call : 90430 25336
Mayura Vaidya Salai
(Holistic Healing Solutions)
Near Vani Vidyalaya School,
Katpadi – 632 006. Call : 90421 35336
#அக்கறை #உடலும் #உயிரும் #மனம் #மயூரா #ஆயுர்வேதம் #சித்தா #நாடிபரிசோதனை #மருத்துவஜோதிடம் #வேலூர்

No comments:
Post a Comment