தமிழர் பாரம்பரிய மருத்துவமான சித்த மருத்துவமானது எமது வாழ்வியலில் பின்னிப் பிணைந்த வரலாற்றைக் கொண்ட ஒரு தொன்மை மிக்க மருத்துவமாக இருந்த போதும் நவீன மயமாதல் எனும் கால ஓட்டத்தில் அகப்பட்டு பாரியதொரு இடைவெளியைக் கொண்ட மருத்துவமாக இன்று காணப்படுகின்றது. சுகாதார சேவை வழங்கலில் ஒரு குறிப்பிடத்தக்க பங்கினை வகிக்கும் மருத்துவ முறைகளில் ஒன்றாக இருந்த போதிலும் சித்தர்களின் ஞானதிருஷ்டி மூலம் பெறப்பட்ட பல, ஆழமான, பயன் உள்ள, சிறப்பம்சங்களை மீளவும், வெளிக்கொண்டு வருவதில் சேவை வழங்குநராகிய எனக்கூறினால் நாம் அது பாரிய ஒரு சவாலை எதிர்நோக்கியுள்ளோம் என கூறினால் அது மிகையாகாது.
முற்றிலும் மேலைத்தேய நவீன வாழ்க்கை முறைக்கும் விஞ்ஞான அடிப்படையிலும் மட்டுப்படுத்தப்பட்ட எமது அறிவானது. இவற்றிற்கு எல்லாம் அப்பாற்பட்ட மேன்மையான சூட்சுமமான அறிவுசார்ந்த விடயங்களான சித்த மருத்துவ தத்துவங்களை வெளிக்கொணர நாம் பகிரத பிரயோர்த்தனம் மேற்கொள்ள வேண்டியுள்ளது.
https://youtu.be/LgP7smIwogg?si=DbOW5nXUw9LEBQPR
இந்த வகையில் நாடிப்பரீட்சை/ நாடிவிஞ்ஞானம்/ நாடிதர்ப்பணம் எனும் நாடி தத்துவத்தினை சித்த மருத்துவத்தின் அடிப்படை எனலாம். ஒரு கர்ப்பப்பைக்குள் ஆரம்பிக்கும் வாழ்க்கை முதல் வாழ்வின் மனிதனின் கர்ப்பப்பைக்குள் இறுதியான மரணம் வரையிலான அவன் சார்ந்த சகல விடயங்களையும் அறிந்து கொள்ளக்கூய ஆழமான தத்துவங்களை இந்நாடி விஞ்ஞானம் கொண்டிருக்கின்றது என்பதை உண்மையான சித்த மருத்துவத்தை கையாளும் அனைத்து மருத்துவர்களாலும் உணரப்பட்டுள்ளது. நவீன மருத்துவத்தின் கீழ் உள்ளடங்கும் உடலின் உள்ளார்ந்த மாற்றங்களை அவதானிக்கக்கூடிய MRI Scan,CT Scan போன்ற தொழில்நுட்பம் சார்ந்த பரிசோதனைகளால் கூட கண்டுபிடிக்க முடியாத உடலியக்கம் சார்ந்த, கடந்த கால, நிகழ்கால மாற்றங்களுக்கு அப்பால் எதிர்காலத்தாக்கங்களை கூட எதிர்வு கூறக்கூடிய ஆழமான அறிவே நாடி விஞ்ஞானம் எனப்படும்.
எனினும் மேலைத்தேய விஞ்ஞானம் கூறும் Puls எனும் விடயத்திற்கு அப்பால் செல்லாமல் நம் நாடியை மட்டுப்படுத்தியதன் விளைவே இன்று நாடி விஞ்ஞானத்தின் சரியான அறிவையும் பயன்பாட்டையும் தவறவிட்டமைக்கு ஒரு பிரதான காரணமாக கூறலாம்.
எனவே சித்த மருத்துவத்தின் உண்மையான எதிர்காலமும். பயன்பாடும் சரியான நாடி அறிதல் மூலமே மீளவும் கட்டியெழுப்ப முடியும் என்னும் எண்ணக்கருவுடன் முயன்றால் மட்டுமே சித்த வைத்தியம் நம் மக்களை, தலைமுறைகளை போய் சேரும்.
Visit Online Store : www.mayuraayur.com
பேரன்புடன்….
சுதாகர் G வைத்யா
மயுரா ஆயுர்வேதாஸ்ரம்
நாடி பரிசோதனை மற்றும் மருத்துவ ஜோதிட ஆராய்ச்சியாளர்.
பாரம்பரிய மருத்துவத்தில் எங்களின் குறிகோள் உடல் நலம் மற்றும் சுகாதாரத்தை காப்பதே… இங்கு ஆயுர்வேதம், சித்தா, மற்றும் பிற மருத்துவ அறிவியல்களின் ஊடாக நாங்கள் தனிப்பட்ட ஆலோசனைகள், மற்றும் நோய் தீர்க்கும் சிகிச்சைகள், சுகாதாரம் மற்றும் அழகு தொடர்பான சேவைகளை வழங்குகிறோம்.
மேலும் மூலிகைகள் மற்றும் சித்தா, ஆயுர்வேத மருத்துவம் பற்றிய உங்களது சந்தேகங்களுக்கும், ஆலோசனைக்கும் தொடர்பு கொள்ளவும்…
Mayura Vedic Pharmacy
(Siddha & Ayurvedha)
#40, Old Busstand Commercial Complex,
Near Thiruvalluvar Statue,
Anna Salai. Vellore – 632 004
Call :90430 25336
Mayura Vaidy Salai
(Holistic Healing Solutions)
Near Vani Vidyalaya School
V.G.Nagar, Katpadi – 632 006
Call : 90421 35336
#மனம் #ஆயுர்வேதம் #சித்தா #மயூரா #வேலூர்

No comments:
Post a Comment