About Me

My photo
Vellore, Tamil Nadu , India

Tuesday, December 12, 2023

தமிழ் மருத்துவம் பதினெண் சித்தர் மருத்துவம்

பதிணென் மருத்துவத்தில் சித்தர் வேதியியல் - 18

சித்த மருத்துவத்தின் சிறப்பை 18 என்ற எண்ணால் அழைக்கலாம். பல வகைப்பாடுகள் 18ல் அடங்கியுள்ளதால் தமிழ் மருத்துவம் பதினெண் சித்தர் மருத்துவம் என்றே அழைக்கப்பட்டது. பதினெண் என்ற பதினெட்டு, சித்த மருத்துவத்தின் முத்தாய்ப்பாக அமைகிறது. 

சித்த மருத்துவத்தை தோற்றுவித்த சித்தர்கள் - 18. சித்த மருத்துவ துறைகள் - 18. சித்த மருத்துவ வாகடங்கள் - 18. சித்தர் வேதியியல் மருந்துகள் - 18. 
சித்தர்களின் அறிவியல் வேதியியல் மருந்துகளை தயாரிப்பதின் சூட்சுமத்தை அடக்கியுள்ளது. இதை பரிபாஷையாலும், எளிதில் விளங்கிகொள்ள முடியாத பாடல்களாகவும், சித்தர்கள் தொகுத்துள்ளதால். இந்த அறிவியல் பிற மருத்துவ முறைகளுக்கு, களவு போகப்படாமல் (thept by other system of medicine) காக்கப்பட்டது. ஆகையால் தான் இன்று பிரபலமாக இருக்கும் பல மருத்துவ முறைகளில் சித்தர்களின் உலோக, கரிம, அறிவியல் போல் சிறப்பானது எதுவுமில்லை. சித்தர்களின் மருந்து செய்முறை எவ்வளவு பெரிய உலோகத்தையும், வெறும் 10 வரட்டிகளால், புடம் போட முடியும். சித்தர் மருந்து செய்முறை செயநீரால் அரைக்கும் படியும், திராவகத்தால் சுருக்கு கொடுக்கமுடியும் படியும் அமைந்துள்ளது. எவ்வளவு பெரிய உலோகத்தையும் ஒரு சில வினாடிகளில் கரைக்கும்படி, எவ்வளவு பெரிய திரவத்தையும் ஒரு சில வினாடிகளில் கட்டும்படியும் அமைந்திருப்பது இதன் சிறப்பம்சமாகும். உலோகங்களை சில வேதியல் செய்முறைகளுக்கு உட்படுத்தி அதன் அணு எண், உலோக தன்மை மாறும்படி வேறு உலோகங்களுடன் சேர்த்து செய்யப்படும் பதினெண் சித்தர் மருந்து அறிவியலை ஒவ்வொரு சித்த மருத்துவரும் தெரிந்து கொள்ள வேண்டும். 

சித்தர் மருந்து அறிவியலை தெரிந்து கொள்வதற்கு முன் சித்த மருத்துவம் சொல்லும் பதினெண் சித்தர், பதினெண் துறை, பதினெண் வாகடம் பற்றி தெரிந்து கொள்வோம்
அவை என்ன என்பதை தெரிந்து கொள்வோம். 

சித்தர்கள் - 18
1. திருமூலர் (Thirumoolar)
2. ராமதேவர் (Ramadevar)
3. கும்பமுனி (Kumbamuni)
4. இடைக்காடர் (Idaikadar)
5. தன்வந்திரி (Dhanvanthiri)
6. வான்மீகி (Vanmigi)
7. கமலமுனி (Kamalamuni)
8. கருவூரார் (Karuvurarar)
9. மச்சமுனி (Matchamuni)
10. கொங்கணர் (Konganar)
11. பதஞ்சலி (Patanjali)
12. நந்திதேவர் (Nandi Devar)
13. போகர் (Bgar)
14. பாம்பாட்டி (Pambatti)
15. சட்டைமுனி (Sattaimuni)
16. சுந்தரானந்தர் (Sundaranandar)
17. குதம்பை (Kuthambai)
18. கோரக்கர் (Korakkar)

துறைகள் - 18 
1. கருப்பந்தோற்றவியல் (Embryology and Obstetrics)
2. உடற்செயலியல் (Physiology)
3. உடற்கூறியல் (General Anatomy)
4. முத்தாதியல் (Applied physiology and human philosophy)
5. எண்வகை தேர்வியல் (Pathology using eight diagnostic methods)
6. ஏழு தாதியல் (Gross anatomy)
7. சுவையியல் (Gustatory medicine)
8. கழிவுப் பொருளியல் (metabolism)
9. நோய்முதல்குணமருந்தியல் (Pharmacopoeia)
10. மருந்தின் குணவியல் (Pharmacology and materia medica)
11. புண்ணியல் (Traumatology)
12. விடவைத்தியவியல் (Toxicology)
13. ஆயுள்வளரியல் (Regenerative medicine)
14. பாலவாகடவியல் (Pediatrics)
15. தூய்மையியல் (Hygiene)
16.யோகவியல் (Yoga)
17. தொற்றுநோயியல் (Epidemiology)
18. நோய்மருந்தியையியல் (Clinical Research)
வாகடங்கள் - 18
1.நோய் அணுகா முறை (Preventive medicine and Hygiene) 
2. சாவறுக்கும்‌ முதுமை மருத்துவம் (Geriatrics medicine)
3. யாக்கை இலக்கண நூல் (Anatomy) 
4. நாடி நூல் (Clinical diagnostic methods)
5. அறுவை நூல் (Surgery)
6.நயன நூல் (Ophthalmology)
7. ஞானசீவவாத கட்டளை என்ற உடல் தத்துவம் (Physiological factors and their functions)
8. குழந்தைப் பிணி நூல் (Pediatrics)
9. குணபாடம் என்ற பொருட் பண்பு இயல் (Materia Medica and Pharmacopoea) 
10. சரக்கு வைப்பு நூல் (Synthetics, Pharmacy and Pharmaceutical) 
11. பிள்ளைப்பேறு நூலியல் என்ற பிண்டோற்பத்தி மாலை (Obstetrics and Embryology)
12. வைத்தியப் பெருநூல் (Textbook of Medicine) 
13. அதிவீர ராம பாண்டியனின் காம இன்ப நூல் (Sexolgy in man and woman)
14. கிரிகை நோய் (Neuro Psychic Disorders) 
15. சல்லியமும் ஒட்டியமும் (Witchcrafts and Black magic remedies) 
16. நாடி சோதிடம் (Astrology and Medicine of 64 kinds of Astra-diseases)
17. கர்மகாண்டம் (Neuro Psychic and Genetic diseases)
18. வைத்திய சிட்கா என்ற சில்லரைக்கோலை (Synopsis and Simple remedies)
சித்தர் வேதியியல் - 18
1. களங்கு முறை (Alloy Fission - இது உலோகங்களை சிறு சிறு அணுக்களாக பிரித்து, அவற்றை துகள்களாக மாற்றும் முறையாகும். 551 வகை களங்குகள் சித்த மருத்துவ நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன). 
2. குரு பற்பம் (High grade Alkali Ash- கொடிய காரமுள்ள புடம்போட்டு எடுத்த நீரு மருந்துகள் குருபற்பமாகும். இவற்றில் 205 வகை செய்முறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. 
3. செந்தூரம் (Red Oxide of Metal Ore - மருந்துகளுக்கு நிறத்தை கொடுக்க கந்தகத்தை ஒரு குறிப்பிட்ட அளவில் சேர்த்து அரைத்தோ, புடம்போட்டோ, எரித்தோ, வறுத்தோ செய்யக்கூடிய செந்தூர முறைகள் 1010 ஆகும்) 
4. மெழுகு (Elastic Metal - உலோகங்களை ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில், அதன் உலோகத்தன்மையை இழக்கசெய்து உருகும் தன்மையாக மாற்றி, மீண்டும் அதனை இறுக்கமாக்காமல் செய்யும் மெழுகு முறை 307 ஆகும்).
5. செயநீர் (Universal Solvent - அமிலத்தன்மையுள்ள உலோகங்களை கரைக்கக்கூடிய மருந்து செய்வதற்காக உலோகங்களை கரைத்து ஒன்றோட ஒன்று கலக்க செய்யக் கூடிய வேதிசத்த நிறைந்த திரவம் செயநீர் ஆகும். இதன் செய்முறை 105 என சித்த மருத்துவ நூற்கள் குறிப்பிடுகின்றன). 
6. திராவகம் (High Grade Acid Distillate -  வாலையில் வடித்து எடுக்கப்படும் கடுமையான அமிலத்தன்மையுள்ள திராவகமாகும். இவற்றின் செய்முறைகள் 66 என குறிப்பிடப்பட்டுள்ளன).
7. தைலம் (Metal Dissolved Oil - சீவப்பொருட்கள், மூலிகை பொருட்கள் அல்லது உலோக பொருட்களை குறிப்பிட்ட எண்ணெயுடன் அரைத்தோ, காய்ச்சியோ, அவற்றில் உலோக, தாவர, சீவ சத்துக்களை கரைத்து வைத்து எடுக்கப்படும் தைல முறைகள் 7 ஆகும். 
8. ரசக்குளிகை (Condensed Mercury - ரசத்தை முதன்மையாக கொண்டு எவ்வளவு நெருப்புக்கும் உருக விடாமல், அதை குளிகையாக மாற்றும் முறைகள் 1020 என சித்த மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன). 
9. நவலோக பற்பம் (Ash of Nine Metal Alloy - 9 வகையான உலோகங்களை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து ஒரே வெப்பநிலையில் அதனை புடமிட்டு பற்பமாக்கி எடுக்கும் முறை நவலோக பற்பமாகும். இவற்றில் 51 செய்முறைகளை சித்த மருத்துவ நூற்கள் குறிப்பிட்டுள்ளன). 
10. நீற்றெனத்துக்கு ஆதி (Ash vapours of Metal - அதாவது கடுமையான உலோக மருந்துகளை, அதன் சத்ரு தன்மையை நீக்கி, நன்மை செய்யக்கூடிய பண்பை மட்டும் வைத்துக் கொள்ளும் புடம் போட்டு பற்பமாக்கும் முறைக்கு முதன்மையான முறை நீற்றேனேனத்தின் ஆவியாகும். இதில் 9 முறைகளை சித்த மருத்துவ நூற்கள் குறிப்பிடுகின்றன). 
11. உருக்கின தாதி (Semi Solid Metals - மிகக் குறைந்த வெப்பநிலையில் மருந்துகளை உலையில் வைத்து ஊதியோ, வறுத்தோ, எரித்தோ இளக்க வைக்கும் முறை உருக்கினத்தின் ஆதியாகும். இது உலையில் வைத்து ஊதுதல், மூடி எரித்தல் என சில வகைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. 
12 வருணத்துக்காதி (Chromhydrosis - குறிப்பிட்ட வறட்டியில் அல்லது குறிப்பிட்ட வெப்பநிலையில் உலோக மருந்துகளுக்க வர்ணத்தை கொடுத்து அதை பற்பமாகவோ, செந்தூரமாகவோ, கருப்பாகவோ மாற்றும் முறை வருணத்துக்காதியாகும். இவற்றில் ஏழு  செய்முறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன). 
13. சுண்ணம் (Neutral Limestone - அமிலத்தையும், காரத்தையும் ஒரே நேரத்தில் குறிப்பிட்ட முறைப்படி சேர்த்து சுண்ணமாக்கி. இதன் மூலம் மஞ்சளை சேர்க்கும் பொழுது சிவப்பு நிறத்தை தரக்கூடிய மருந்துகளை செய்யும் முறைகள் ஏராளமானவை. குறிப்பிடப்பட்டுள்ளன). 
14.கட்டு (Condensed Salts and Mineral Ores - நெருப்பில் எரியாத, நீரில் கரையாத, வெயிலில் உருகாத படி மிக குறைந்த வெப்பநிலை இருக்கக்கூடிய உலோகங்கள் உப்புகளை  கூட கட்டும் முறை ஏராளமானவை சித்த மருத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. 
15. சத்து மித்துரு (Anti-Doping Alchemy - நட்பு சரக்குகளையும், விரோத சரக்குகளையும், உலோகங்களாகவும், உப்புகளாகவும் பாடாணங்களாகவும் அல்லது மூலிகை சாறுகளாகவும் முறைப்படி சேர்த்து இரண்டையும் ஒரே மருந்தாக மாற்றும் முறை 13 ஆகும்). 
16. செந்தூரத்துக்கு ஆதி (Red Oxide of Vermilion - ஒன்றல்ல, இரண்டல்ல. ஏழு வகையான சிவப்பு நிறங்களில் செந்தூரத்தை தயாரிக்கும் 7 முறைகள் சித்த மருத்துவத்தில் குறிப்பிடப்படுகின்றன). 
17. சத்து - (Ash Extract - காராசாரம், உப்பு, உபரசம், உலோகங்கள், பாடாணங்கள், நவமணிகள் என அனைத்துகளிலிருந்தும், மூலிகைகளிலிருந்தும் நீண்ட ஆயுள் உடைய சத்துகளை பிரித்தெடுக்கும் முறை, அவற்றை எரித்து சாம்பலாக்கி சத்துகளை பிரித்தது. குடிநீர் செய்து அதிலிருந்து சத்துகளை பிரித்து எடுத்தல் என பல்வேறு எண்ணற்ற சத்து வகைகள் குறிப்பிடப்பட்டுள்ளன). 
18. மாற்றுவகை - (Synthetic and Semi Synthetic - மாற்று வகை சித்த மருத்துவத்தின் சிறப்பாகும். பெருங்காயம், சாம்பிராணி, அத்தர், கோரோசனை, தங்கம், வெள்ளி, துருசு, லிங்கம், பூரம், வீரம், வெள்ளை பாடாணம், வெடியுப்பு என அனைத்துவித சித்த மருந்துகளுக்கும், அதபோல் அதற்கு இணையான மாற்று சரக்குகளை தயாரிக்கும் பல்வேறு முறைகளை உடையது சித்த மருத்துவ வைப்பு முறையாகும்). 

இந்த 18 வகை சித்தர் வேதியல் வடநாட்டு மருத்துவ முறையில் (!) காணமுடியாதது. அதற்கு காரணம் சித்தர்கள் மறை மொழியாலும், பரிபாஷையாலும், சொல்லப்பட்ட இந்த கருத்துகளை பிற மொழியில் மொழி பெயர்க்க முடியாமல் வடமொழி (!)  மொழிபெயர்ப்பு வல்லுநர்கள் திணறியதுதான் காரணம். 

18 - துறைகளும், 18 - வாகடங்களும், 18 - சித்தர்களும் 18 - சித்தர் வேதியியல் மருந்துகளும் சித்த மருத்துவத்தின் பதினெண் சித்தர் மருத்துவம் என்ற பெயருக்கு ஆதாரமாக அமைகின்றன. 

தகவல் தொகுப்பு: சித்த மருத்துவர் ஜெ. ஜெயவெங்கடேஷ், மதுரை

இன்னும் அறிவோம்...

இலவச சித்தா, ஆயுர்வேத மருத்துவ ஆலோசனை மற்றும் சந்தேகங்களுக்கு அழைக்கவும்...

பேரன்புடன்….
சுதாகர் G வைத்யா
நாடி பரிசோதனை மற்றும் மருத்துவ ஜோதிட ஆராய்ச்சியாளர்.

பாரம்பரிய மருத்துவத்தில் எங்களின் குறிகோள் உடல் நலம் மற்றும் சுகாதாரத்தை காப்பதே… இங்கு ஆயுர்வேதம், சித்தா, மற்றும் பிற மருத்துவ அறிவியல்களின் ஊடாக நாங்கள் தனிப்பட்ட ஆலோசனைகள், மற்றும் நோய் தீர்க்கும் சிகிச்சைகள், சுகாதாரம் மற்றும் அழகு தொடர்பான சேவைகளை வழங்குகிறோம்.

மேலும் மூலிகைகள் மற்றும் சித்தா, ஆயுர்வேத மருத்துவம் பற்றிய உங்களது சந்தேகங்களுக்கும், ஆலோசனைக்கும் தொடர்பு கொள்ளவும்…
Mayura Ayurvedasram (Vedic Pharmacy)
#40, Old Busstand Commercial Complex,
Vellore - 632 004.  Call : 90430 25336

Mayura Wellness Centre
(Holistic Healing Solutions)
Near Vani Vidyalaya School, 
Katpadi – 632 006.  Call : 90421 35336


#மனம் #ஆயுர்வேதம் #சித்தா #மயூரா #வேலூர்

No comments:

Post a Comment

“மூட்டு அகற்றுவது தீர்வு அல்ல; அதன் இயற்கை இயக்கத்தை மீட்டெடுப்பதே மருத்துவம்.”

மூட்டு வலிக்கு அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வா? உண்மை என்ன சொல்கிறது? ✨ மூட்டு வலி இன்று பலருக்கும் வாழ்க்கைத் தரத்தை குறைக்கும் ஒ...