சித்த மருத்துவம் ஒரு வாழ்வியல்முறை
சித்தமருத்துவம் என்றால் என்ன?
நான் பலகாலமாக என்னையும் ,என்னிடம் பலரும் கேட்கும் பொதுவான கேள்வி!!
சித்த மருத்துவம் சித்தர்களால் அருளப்பட்ட ஒரு வாழ்வியல் முறை. அது கண்டிப்பாக மருத்துவத்தை பெரும்பகுதியாக கொண்டாலும் சில கவனிக்கப்படாத, தத்துவம் சார்ந்த பல்வேறு கோட்பாடுகளை உள்ளடக்கிய ஒரு அறிவியல் பண்பாடு. பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு சித்தர்களால் கண்டுபிடிக்கப்பட்டு ஒருங்கினைக்கப்பட்டது.
சித்தர்கள் யார்?
என்ற கேள்விக்கு விடை கிடைத்தால் ஓரளவு எளிமையாக இதை புரிந்து கொள்ளலாம்.
சித்தர்கள் சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட இன, மொழி அரசியல்களிலிருந்து விலகி/ எதிர்த்தவர்களாக, தான் என்ற இருத்தலியல் உணர்வையே மறுப்பவர்களாகவும் வாழ்ந்தவர்கள்.
எடுத்துக்காட்டாக அழுகண்ணியார் பாடல்
“ஊற்றைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி
மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை
மாற்றிப் பிறக்க மருந்தெனக்கு கிட்டுமென்றால்
ஊற்றைச் சடலம் விட்டேஎன் கண்ணம்மா!
உன்பாதஞ் சேரேனோ!”
நாம் வாழும் இந்த உடல்/ நம் உடல் பல்வேறு நோய்களால் தாக்கப்படும், தானே அழிந்து போகும் இயல்பிலானது என்பதை நாம் நன்கறிவோம். அதை மாற்ற ஒரு மருந்து கிட்டுமா என்ற கேள்வியும், அதை அறிந்தவர்களுமே சித்தர்கள்.அதாவது அழியாத, நோய்தாக்காத உடலைப் பெறுவதே சித்தர்களின் நோக்கமாகும்.அதற்கான மருத்துவ , த்த்துவ விளக்கங்களை நூல்களின் வாயிலாகவும், குரு முறையாகவும்கற்கலாம்.இப்படி பல்வேறு ஆசான்களும் மாணவர்களும் தனி தனி சிறு குழுக்களாக உண்டு.
சித்தர்கள்...
1) மறுபிறவியில் நம்பிக்கையும் அதனை அடையாமல் இருப்பதே முக்தியாகவும் கொள்பவர்கள்.பரம்பொருளுடன் ஒன்றற கலப்பது.
2) உடலை அழியாமல் , நோயற்று வாழ செய்யும் கலை அறிந்தவர்கள்.
3)அதற்காக பல்வேறு வகையான மருந்துகள், தியானம், யோகம் மற்றும் மந்திர ,யந்திரங்களை பற்றி வழிமுறையாகவும், நூல்களிலும் கையாண்டவர்கள்.
முப்பு மருந்து, இரசமணி, இரசவாதம் போன்றவை அதில் உண்டு.
இதெல்லாம் உண்மையா , பொய்யா என்பது உங்கள் அறிவுசார்ந்தது. ஆனால் இந்த முறைகள் உள்ளன என்பதை பதிவு செய்கிறேன்.
ஆக சித்தர்கள் இந்த உலக வாழ்க்கையில் பற்று இல்லாத ,அழியாமை நோக்கி, மருத்துவ ,தத்துவ வழிமுறைகளை வாழ்வியல் முறையாக போதித்தவர்கள்.
இது ஒரு தத்துவம் சார்ந்த முறை. இதை மருத்துவமாக மட்டும் சுருக்கிவிட இயலாது.எதன் மீதும் பற்ற்ற பேறறிவின் மீதும் இந்த பிறவியை அதன் உச்ச நிலையை அடையவைத்தலும் சித்தர்களின் கொள்கை. பிறகு ஏன் அழியாத உடல், இரசவாதம் என்று நமக்கு தோன்றலாம். ஆனால் அழியாத உடலே பிறப்பை அறுக்கவும், பேற்றிவு அடையவும் உதவும். மற்ற இரசவாதம், மணி போன்றவை அதன் உப விளைவுகள்.
சித்த மருத்துவம்
1. நோய் பெயர் குறிகுனம்
2.அதற்கான உள்மருந்து, வெளிமருந்து
3. நோய் வராமல் தடுக்க உணவு மற்றும் வாழ்க்கை முறைகள் போன்றவற்றை வெளிப்படையாகவும்
1.இரசவாதம்
2.அழியாத உடலைப் பெற மருந்துகள்
3.தியானம், யோகம்
போன்றவற்றை மறைமுகமாகவும் உள்ளடக்கிய ஒரு துறை.
அறிவியல் ஆய்வுகள், கண்டுபிடிப்புகள், சாதனைகள், தத்துவங்கள் போன்ற பல்வேறு அம்சங்களின் தொகுப்பே சித்த மருத்துவம்.
https://puththaka-alamaari.blogspot.com/2020/11/blog-post.html?m=1
விரிவான வாசிப்பு, கருத்து பறிமாறல், அறிவியல் ஆராய்ச்சி ,தேடல் இருந்தால் “சித்த மருத்துவம்” ஓர் அறிவு சார் துறையாக பரிமாணம் பெறும்.
சித்தமருத்துவத்தில் எங்களின் குறிகோள் உடல் நலம் மற்றும் சுகாதாரத்தை காப்பதே… இங்கு ஆயுர்வேதம், சித்தா, மற்றும் பிற மருத்துவ அறிவியல்களின் ஊடாக நாங்கள் தனிப்பட்ட ஆலோசனைகள், மற்றும் நோய் தீர்க்கும் சிகிச்சைகள், சுகாதாரம் மற்றும் அழகு தொடர்பான சேவைகளை வழங்குகிறோம்.
சித்த மருத்துவம் பற்றியும் இங்கு பதிவிடப்படும் தகவல்களை பற்றியும் படித்து பயன்பெற எங்கள் இணையதள பக்கத்தை தொடர வேண்டுகிறோம்.
Visit Online Store : www.mayuraayur.com
Mayura Ayurvedasram
Siddha & Ayurvedha Pharmacy
#40, Old Busstand Commercial Complex,
Near Thiruvalluvar Statue,
Anna Salai. Vellore – 632 004
Call :90430 25336
Mayura Wellness Clinic
#19, 10th East Main Road,
Opp EB Office, Katpadi – 632 006
Call : 90421 35330
No comments:
Post a Comment