சியாட்டிக் நரம்பு
சியாட்டிக் என்பது உடலின் மிகப்பெரும் நரம்புகளில் ஒன்று. இது தண்டுவடத்தில் தொடங்கி, இடுப்பு, தொடை மார்க்கமாக கால்களுக்கு செல்லக் கூடியது.
உடலின் முக்கிய வேலையாக, தண்டுவடத்துக்கும் கால் தசைகளின் இயக்கத்துக்கும் இடையே செயல்பாட்டை தீர்மானிப்பதில் சியாட்டிக் நரம்பு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நரம்பின் வழியாக பயணப்படும் வலியை சியாட்டிகா என்கிறோம்.
சியாட்டிகா வலி
நரம்பில் நாட்பட்ட அழுத்தம் கிடைப்பதால் வலி தோன்றுகிறது. இந்த வலி இடுப்பில் தொடங்கி கால் மற்றும் பாதத்தில் எரிச்சலாகவும், குடைச்சலாகவும் உணரப்படுகிறது. வெகு நேரம் அமர்ந்திருந்து எழும்போதும், குனிந்து நிமிரும்போதும், எடைகளை தூக்கும்போதும் இவை அதிகமாக தென்படும். சியாட்டிகா பாதிப்பு கண்டவர்கள் கால்கள் மரத்துப்போவது, மதமதப்பாக உணர்வது, குத்தலான வலி, இடுப்பிலிருந்து காலுக்கான பலவீனத்தை உணர்வது ஆகியவற்றை அதிகம் எதிர்கொள்வார்கள்.
வலி போக்கும் பாரம்பரிய தமிழ் மருத்துவம்
இந்த பாதிப்பிலிருந்து விடுபட அதிகளவில் வலி நிவாரணிகளை எடுப்பது வழக்கமாக இருக்கிறது. பக்கவிளைவுகள் உடைய வலி நிவாரணிகளை தவிர்த்துவிட்டு இயற்கை முறையில் நிவாரணம் பெறுவதே சிறந்தது
பாதிக்கப்பட்டவர்களுக்கு தண்டுவட சிகிச்சையில் தண்டுவடத்தில் சொடக்கு விழுவதுபோல சிறிய சத்தத்தையும் உணரலாம். இதன் மூலம் தண்டுவடத்தில் நீடித்த அழுத்தம், தண்டுவட வட்டுக்கள் மற்றும் வட்டுகளுக்கு இடையேயான சவ்வு பிசகியிருப்பது போன்றவை குணமாகும். இந்த கை நுட்ப சிகிச்சை மூலம் நாளடைவில் குணம் பெறலாம்.
இதன் மூலம் வலி நிவாரணிகளை உட்கொள்ளாது, அறுவை சிகிச்சைக்கு அவசியமின்றி, நீண்ட காலமாக அவதிப்பட்டிருந்த சியாட்டிகா பாதிப்பிலிருந்து விடுபடலாம்.
நமது உடலின் ஆற்றல் சக்தி சீரான ஓட்டத்துக்கும் உதவிகரமாகும். இந்த ஆற்றல் ஓட்டத்துக்கு உடலில் எங்கெல்லாம் அடைப்பு ஏற்படுகிறதோ அங்கெல்லாம் நாளடைவில் வலி மற்றும் வீக்கத்தை உணரலாம். ஆயுர்வேத மருத்துவத்தின் உதவியுடன் இந்த அடைப்பை நீக்கி ஆற்றல் ஓட்டத்தை இயல்பாக்குவதன் மூலமாக, வலியிலிருந்தும் வீக்கத்திலிருந்து விடபட முடியும்
உணவே மருந்து
சியாட்டிகா வலி கண்டவர்கள் அன்றாடம் மஞ்சள் தண்ணீர் உட்கொண்டு வரலாம். ஒரு குவளை நீரில் கால் டீஸ்பூன் மஞ்சள் கலந்து கொதிக்க வைத்து அருந்தலாம். இதனை தினத்துக்கு 3 வேளை உட்கொள்ளும்போது, மஞ்சளின் வேதிப்பொருட்கள் சியாட்டிகா நரம்பு உபயத்தால் ஏற்படும் வலி மற்றும் வீக்கத்தை குறைக்க உதவுகின்றன. கூடுதலாக சிறிதளவு வெந்தயத்தை இரவு தண்ணீரில் ஊறவைத்து, காலையில் அந்த வெந்தயத்தையும், நீரையும் விழுங்குவது நிவாரணம் தரும்.
தசைகளை இலகுவாக்குவதிலும், தூக்கத்தை தருவிப்பதிலும் ஜாதிக்காயின் உட்பொருட்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஜாதிக்காயை பொடி செய்து தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து உட்கொள்ளலாம். ஜாதிக்காயின் நற்பயன்களை அரோமா எண்ணெயாகவும் பெறலாம். இதன் சில துளிகளை தேங்காய் எண்ணெயில் கலந்து வலி கண்ட இடங்களில் தடவி வரலாம்.
எச்சரிக்கை
அன்றாட நடவடிக்கைகளில் ஒரு சில எச்சரிக்கை குறிப்புகளை பின்பற்றுவதன் வாயிலாகவும் சியாட்டிக் பாதிப்பு தீவிரம் பெறாது தவிர்க்க இயலும். குறிப்பாக முன்பக்கம் குனிவது, முறையற்ற வகைகளில் எடை தூக்குவது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். எடை தூக்கியே ஆகவேண்டும் என்ற சூழல் எழுந்தால், இரு கரங்களிலும் சமமான எடையை பராமரிப்பது அந்த எடையும் 5 கிலோவுக்கு மிகாமல் இருப்பது உள்ளிட்ட எச்சரிக்கைக் குறிப்புகளை பின்பற்றுவதும் அவசியம்.
ஆசனங்கள், பிராணாயாமம்
மேலும் இங்கே தரப்படும் 2 ஆசனங்கள் மற்றும் 1 பிராணாயாமம் ஆகியவற்றை பழகுவதும், தொடர்ச்சியாக பின்பற்றுவதும் சியாட்டிக் தொந்தரவுகளில் இருந்து விடுபட உதவும்.

No comments:
Post a Comment